பிரியந்த குமார தியவதனகே கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு

பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராகப் பணியாற்றிய இலங்கைப் பிரஜை பிரியந்த குமார தியவதனகே கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு 2022 ஏப்ரல் 18ஆந் திகதி பாகிஸ்தானின் குஜ்ரன்வலாவில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வரவேற்கின்றது.   நாற்பத்தி ஒன்பது வயதான பிரியந்த குமார தியவதனகே மிகவும் சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் மத நிந்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 2021 டிசம்பர் … Read more

மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மூன்று அறிவித்தல்கள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் ஆகியவற்றுக்கு பாராளுமன்றம் இன்று ஒப்புதல்

பாராளுமன்றம் இன்று மு.ப 10.00 மணிக்கு கூடி சில நிமிடங்களில் இடைநிறுத்தப்பட்டு கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்களுடனான கூட்டம் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்றது. இதில் தினப்பணிகளின் கீழ் குறிப்பிட்ட வர்த்தமானிகளை விவாதத்துக்கு உட்படுத்தாது ஒப்புதல் வழங்க இணக்கம் காணப்பட்டது. இன்றையதினத்துக்கான வாய்மூல விடைக்கான கேள்விகள் பிறிதொரு தினத்துக்கு ஆற்றுப்படுத்தப்படும் என சபாநாயகர் அறிவித்தார். தினப்பணிகளின் கீழ், மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்ட … Read more

உலக வங்கியின் தென்னாசிய பிராந்தியத்திற்கான உபதலைவருக்கும், இலங்கை குழுவினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை.

நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்ஹ, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன ஆகியோருக்கும் உலக வங்கியின் தென்னாசிய பிராந்திய நாடுகளுக்கான உபதலைவரான ஹாட்ரிவிங் ஷாபருக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் மற்றும் பொருளாதார ஸ்திரத் தன்மையை ஏற்படுத்துவது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு நிலையான தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு உலக வங்கி ஒத்துழைப்பு வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களைத் தொடர்புபடுத்தி கணினி கட்டமைப்பை உருவாக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவும்

மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் இறைவரித் திணைக்களம் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து மதுவரி வருவாயைக் கணக்கிடும் செயல்முறையை ஒழுங்குபடுத்தும் கணினி கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) மதுவரித் திணைக்களத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளது. மதுவரித் திணைக்களம் தொடர்பான 2020ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயற்திறன் குறித்து ஆராயும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாண தலைமையில் அரசாங்கக் கணக்குகள் … Read more

கோவாவில் நடைபெறும் NATPOLREX-VIII பயிற்சிகளில் இலங்கை கரையோரக் காவல் படையின் சுரக்‌ஷா பங்கேற்பு

தேசிய மட்டத்திலான மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு தயாராகும் வகையில் இந்திய கரையோர காவல் படையால் 2022 ஏப்ரல் 19 முதல் 27 ஆம் திகதி வரை கோவாவில் NATPOLREX-VIII பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிராந்தியத்திலுள்ள பல்வேறு நாடுகளின் கப்பல்களும் பிரதிநிதிகளும் இந்த பயிற்சியில் கலந்து கொள்கின்றனர். 2.    சமுத்திர சூழலை பாதுகாப்பதற்கும் அதன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான ஒன்றிணைந்த முயற்சிகளை வலுவாக்கும் இலக்குடன் பன்முகப்படுத்தப்பட்ட ஈடுபாட்டின் ஊடாக பிராந்திய ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதற்காக இலங்கை கரையோர காவல் … Read more

நிலக்கரி கப்பல்களுக்கு டொலர் செலுத்தப்பட்டது – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு

நுரைச்சோலை கடற்கரையினை வந்தடைந்த இரண்டு கப்பல்களுக்கான கொடுப்பனவுகளை எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு செலுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் (ஊநுடீநுரு) இன்று (20) தெரிவித்துள்ளது. ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெற்றிக்தொன் நிலக்கரியுடன் வந்துள்ள இரண்டு கப்பல்களுக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.  

பொலிசார் தமக்குள்ள அதிகாரத்துக்கும் அப்பால் செயற்பட்டார்களா கண்டறிவதற்கு மூவர் அடங்கிய குழு

றம்புக்கணையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் தமக்குள்ள அதிகாரத்துக்கும் அப்பால் செயற்பட்டார்களா என்பது குறித்து கண்டறிவதற்கு மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார். இந்த குழுவில் இராஜாங்க அமைச்சின் செயலாளர், அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சட்ட ஆலோசகர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து பொது மக்களும் ,அமைதியை பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறும் வன்முறையை தவிர்க்குமாறும், … Read more

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது குறித்து சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம்

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது குறித்து சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் பொது மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்… திறந்தவெளிகளில் மக்கள் நடமாடும்போது, முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை. அத்துடன், வெளியாட்களுடன் சம்பந்தப்பட்ட வைபவங்கள், விழாக்கள், வியாபார நிலையங்கள் மற்றும் பொதுப்போக்குவரத்துக்களைப் பயன்படுத்தும்போதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். மேலும், முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று குறிப்பிடுவது, முகக்கவசம் அணியத் தேவையில்லை என்ற … Read more