இறம்புக்கணை பொலிஸ் எல்லைப் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஊரடங்கு

இறம்புக்கணை பொலிஸ் எல்லைப் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இறம்புக்கணை பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் வாகனங்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்த வேண்டும். இந்தப் பிரதேசத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.    

கொவிட் பாதிப்பு இலங்கையில் தொடருகிறது: பெற்றோர் பிள்ளைகள் தொடர்பில் கூடுதல் கவனம் தேவை

சமூகத்தில் பரவும் கொவிட் – 19 இன் பாதிப்பு இலங்கையில் தொடர்ச்சியாக இருந்து வருவதனால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களையும், குழந்தைகளையும் பொது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு பிரச்சாரங்களில் பங்கேற்க அழைத்துச் செல்ல வேண்டாம் என்று குழந்தைகள் நல மருத்துவ ஆலோசகர், வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ‘கொவிட்  வைரசு தொற்று  பரவுவதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து காணப்படுவதால், பெற்றோர் அவதானத்துடன் செயல்பட வேண்டும். பொது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்’ … Read more

போக்குவரத்து அமைச்சருக்கும், பஸ் உரிமையாளர சங்கங்களுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை

போக்குவரத்து அமைச்சருக்கும், தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்திற்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று தற்சமயம் இடம்பெறுகிறது. பஸ் உரிமையாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடி, இணக்கப்பாட்டிற்கு வருவதே நோக்கம் என போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மொன்டி ரணதுங்க தெரிவித்துள்ளார். இதனிடையே பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளதனால், நாடளாவிய ரீதியில் பஸ் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை உற்பத்திகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு எதிர்பார்ப்பு

சென்னையில் உள்ள இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டாக்டர். டி வெங்கடேஸ்வரன் கடந்த மார்ச் 29 முதல் ஏப்ரல் 1 வரை புதுடெல்லிக்கு விஜயம் செய்து, இந்திய அரச அதிகாரிகள் மற்றும் வணிகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார். இதன் போது இவர், வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மற்றும் இணைச் செயலாளருமான அரிந்தம் பாக்சியை செய்தித் தொடர்பாளர் அலுவலகத்தில் சந்தித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சுமுகமான உறவுகள் குறித்தும், இலங்கைக்கான இந்திய முதலீடுகளை ஊக்குவிப்பது குறித்தும் ,இலங்கையிலிருந்து இந்தியாவுக்கான … Read more

தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

வார இறுதியில் கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 70 ஆக இருந்தது. சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 40 ஐ விட குறைவடைந்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அறிக்கையின்படி நேற்று முன் தினம்(17) மேற்கொள்ளப்பட்ட ஆயிரத்து 5 பேருக்கான பிசிஆர் பரிசோதனையில் 37 பேருக்கும், நேற்றய முன்தினம்(16) 622 அன்டிஜென் பரிசோதனையில் 33 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வரை மொத்தம் 6 இலட்சத்து 62 ஆயிரத்து 864 பேருக்கு கொவிட் பரி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. … Read more

இறக்குமதி செய்யப்படும் அரிசி போன்ற பொருட்களின் மீதான வரிக் குறைப்பு பொதுமக்களுக்கு நன்மையளிக்கிறதா

சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2022 சனவரி 11 ஆம் திகதிய 2262/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு 05.04.2022 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியது. மேற்படி தீர்மானத்தை கருத்தில் கொண்டு, இறக்குமதி செய்யப்படும் அரிசி போன்ற பொருட்களின் மீதான வரிக் குறைப்பு உண்மையில் பொதுமக்களுக்கு நன்மையளிக்கிறதா என்பதை ஆராய்வதில் நிதியமைச்சு … Read more

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆளும்கட்சியின் முதற்கோலாசானாகக் பதவியில் கடமைகளை பொறுப்பேற்றார்

சுற்றுலா மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆளும்கட்சியின் முதற்கோலாசான் பதவியில் இன்று (19) காலை பாராளுமன்றத்தில் உள்ள ஆளும்கட்சியின் முதற்கோலாசான் காரியாலயத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.  இதன்போது, அரசாங்க சேவைகள், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும் சபை முதல்வருமான கௌரவ தினேஷ் குணவர்தன, கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் கௌரவ ரமேஷ் பத்திரன, ஊடக அமைச்சர் கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ இந்திக அனுருத்த, கௌரவ பியல் … Read more

புதிய வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி கொடஹேவா கடமைகளை பொறுப்பேற்றார்

வெகுசன ஊடக அமைச்சராக நேற்று (18) பதவியேற்றுக் கொண்ட கலாநிதி நாலக கொடஹேவா இன்று (19) மாலை தனது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சின் பணியாளர்கள் புதிய அமைச்சரை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வின் நிமித்தம் எவ்வித விழாக்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை.  

பஸ் கட்டணம் அதிகரிப்பு – ரயில் கட்டண அதிகரிப்பு இல்லை

பஸ் கட்டணம் 35 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக  போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இன்று (19) நள்ளிரவு முதல் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அவர் கூறினார்.. இன்று அமைச்சில் நடைபெற்ற தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்திற்கும் போக்குவரத்து அமைச்சிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரயில் கட்டணங்களில் எந்தவித அதிகரிப்பும் தற்போது மேற்கொள்ளப்படமாட்டாது என்றும் அமைச்சர்  எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.