இலங்கையில், நேற்றும் (15.04.2022) கொவிட் மரணம் எதுவும் இல்லை
இலங்கையில், நேற்றும் (15.04.2022) கொவிட் மரணம் எதுவும் இல்லை
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இலங்கையில், நேற்றும் (15.04.2022) கொவிட் மரணம் எதுவும் இல்லை
சில தரப்பினரின் தவறான வழிநடத்தல் மற்றும் தவரான விளக்கங்களினால், படையினர் தொடர்பாக மேற்கொள்ளப்படும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் முயற்சிகளை பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து நாடு முழுவதும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் இராணுவத்தை களங்கப்படுத்தும் முயற்சிகள், இராணுவத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, பல்வேறு குழுக்களும், தங்களது சொந்த நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப, இராணுவம் வன்முறையைத் தூண்டுவதற்குத் தயாராகி வருவதாகவும், தாக்குதலுக்கு முன் பயிற்சி பெறுவதாகவும் முற்றிலும் பொய்யான அடிப்படையற்ற பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவது … Read more
மிலானிற்கான துணைத் தூதுவராக திரு. பந்து சமரசிங்க நியமிக்கப்படமாட்டார் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு கொழும்பு 2022 ஏப்ரல் 16
இந்தியாவில் கொரோனா தொற்றின் 3ஆவது அலை, அதன் வீழ்ச்சிப்பாதையில் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை ;கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. . தினந்தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 1,007, நேற்று 949 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 975 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 … Read more
இன்று (16) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ,இடம்பெற்ற மூன்று வாகன விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த விபத்துக்கள் தொடுவாவ, எஹெலியகொட மற்றும் பேராதெனிய ஆகிய இடங்களிலேயே இந்த வாகன விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை தெதுரு ஓய நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கொபெயிகனே பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொபெயிகனே பிரதேசத்தில் நீராடச் சென்ற 21 வயதுடைய இளைஞனை … Read more
புத்தபெருமான் இலங்கைக்கு இரண்டாவது தடவையாக விஜயம் செய்த பக் முழு நோன்மதி தினம் இன்றாகும். உலகெங்கிலும் இந்துக்கள் இன்று சித்திரா பௌர்ணமியை அனுஷ்டிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பக் முழு நோன்மதி தினத்தை முன்னிட்டு ,இன்று (16) நாடுமுழுவதிலும் உள்ள பௌத்த விகாரைகளில் பல்வேறு வழி பாட்டு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இரண்டு நாக மன்னர்களுக்கு இடையில் ஏற்படவிருந்த மோசமான யுத்தத்தை நிறுத்துவதற்காக புத்தபெருமானாக பரிநிர்வாணம் அடைந்து, ஐந்தாவது வருடத்தில் இதேபோன்ற தினத்தில் அவர் நாகதீபத்திற்கு விஜயம் செய்தமையும் முக்கிய அம்சமாகும் … Read more
அரசாங்கத்தின் வெளிநாட்டுப் படுகடன் நிலைபெறுதன்மையினை முகாமைசெய்வதற்கான நிதியியல் ஆலோசகர்களையும் சட்ட மதியுரைஞர்களையும் நியமிப்பதற்காக ஆர்வமுடைய தரப்பினர்களிடமிருந்து/முகவராண்மைகளிடமிருந்து முன்மொழிவுக்கான கோரிக்கையினை நிதி அமைச்சின் ஊடாக இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. மற்றும் சட்ட மதியுரைஞர் (காலக்கெடு நீடிப்பு) நிதியியல் ஆலோசகர் (காலக்கெடு நீடிப்பு) முன்மொழிவுக்கான கோரிக்கை பற்றிய விபரங்களை கீழேயுள்ள இணைப்பின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும். மற்றும் சட்ட மதியுரைஞர் (RfP) நிதியியல் ஆலோசகர் (RfP)
இந்துக்கள் பின்பற்றும் பல பண்டிகைகளில் சித்ரா பௌர்ணமியும் ஒன்று. பொதுவாக பௌர்ணமி என்பது இந்து மதத்தில் கொண்டாட்டம் மற்றும் சடங்குகளுடன் தொடர்புடைய நாள். சித்ரா பௌர்ணமி பூஜையை பௌர்ணமி மாலை அல்லது அதிகாலையில் அனுசரிக்க வேண்டும். இந்த நாளில் விரதம் இருப்பது வழக்கம், இந்த விரதம் ‘சித்ரகுப்த நோம்பு’ அல்லது ‘சித்ரகுப்த விரதம்’ என்று அழைக்கப்படுகிறது. பக்தர்கள் சித்ரா பௌர்ணமியின் பகல் நேரத்தில் விரதம் இருக்க வேண்டும். ஆண் அல்லது பெண் குடும்ப உறுப்பினர்கள் சித்ரா பௌர்ணமி … Read more
தமிழ், சிங்களப் புத்தாண்டுக்காக சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள், கொழும்பு உட்பட பிரதான நகரங்களுக்கு மீண்டும் திரும்புவதற்காக நாளை தொடக்கம் 2 ஆயிரத்து 100 பஸ் கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இந்த பஸ்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபை வழமையாக 1,500பஸ்களை மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தினாலும் இம்முறை 600 பஸ்களை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.
எரிபொருளை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் இன்று இலங்கை வந்தடையவுள்ளன. 40, 000 மெட்ரிக் தொன் டீசலும் 37.000 மெட்ரிக் தொன் பெட்ரோலும் இவற்றில் இருப்பதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்தது. எரிபொருள் விநியோக நடவடிக்கை இன்றும் இடம்பெறுவதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. விவசாய நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளின் பரிந்துரைகளின் கீழ் டீசல் வழங்கப்படுகிறது. போத்தல்கள் மற்றும் கலன்களில் எரிபொருளை வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. கலன்களில் எரிபொருளைக் கொள்வனவு செய்து அவற்றை வெளியிடங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றமை தொடர்பான … Read more