உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: 365 பில்லியன் ரூபா சொத்துக்கள் அரசுடைமை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் போது கைதுசெய்யப்பட்டவர்களின் 365 பில்லியன் ரூபா சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டிருப்பதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று ,இலங்கையில் இடம்பெற்ற இந்த குண்டு தாக்குதல் சம்பவத்தில் 39 வெளிநாட்டவர்கள், 3 காவல்துறையினர் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பான உண்மை … Read more

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடுவதற்கு தயார் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக காலி முகத்திடலில் தற்போது ஒன்று கூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிரதமர் என்ற ரீதியில் கலந்துரையாடுவதற்கு தயார் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் அறிவித்துள்ளார். அதற்கமைய, நாடு எதிர்நோக்கியிருக்கும் தற்போதைய சவாலை வெற்றி கொள்வதற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கும் பெறுமதியான கருத்துக்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கலந்துரையாடலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தயாராக இருந்தால் அவர்களின் பிரதிநிதிகளை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். பிரதமர் … Read more

இரண்டு தினங்களுக்கு மின் துண்டிப்பு இடம்பெறாது

நாட்டில் இன்று(13) ம் நாளை(14) யும் மின்சாரத் துண்டிப்பு இடம்பெற மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் நோக்கோடு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் முதல் மின்சாரத் துண்டிப்பு இடம்பெறும் காலப்பகுதியைக் குறைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: 25, 653 குற்றச்சாட்டுகளின் கீழ் 79 சந்தேக நபர்களுக்கு எதிராக 27 வழக்குகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்டவர்களுள் 196 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 493 பேர் பிணையில விடுதலை செய்யப்ட்டுளள்னர். 81 பேருக்கு எதிராக பல் வேறு நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 79 சந்தேக நபர்களுக்கு எதிராக 27 வழக்குகள் 25, 653 குற்றச்சாட்டுகளின் … Read more

கிழக்கு,ஊவா,வடக்கு மாகாணங்களில் 75  மி.மீ. க்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 13ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை நாட்டை விட்டு விலகி நகர்ந்து கொண்டிருக்கின்றது. நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு , ஊவா … Read more

எரிபொருள், காஸ் விநியோகத்தின் முறைகேடு: முறைப்பாடு செய்வதற்கு தொலைபேசி இலக்கம்

எரிபொருள், சமையல் எரிவாயு விநியோகத்தின் போது இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பாக முறைப்பாடு செய்வதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம். செய்யப்பட்டுள்ளது. 071-1691-691 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொண்டு இது தொடர்பான முறைப்பாடுகளை நுகரவோரினால் முன்வைக்க முடியும்.

டொலர் நெருக்கடிக்கு முறையற்ற கொடுக்கல் வாங்கல் முறைகளும் தாக்கம் செலுத்தியுள்ளன

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடிக்கு முறையற்ற கொடுக்கல் வாங்கல் முறைகள் தாக்கம் செலுத்தியிருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ தெரிவித்துள்ளார். முறையான வழிகளில் மாத்திரம் அந்நியச் செலாவணியை அனுப்புமாறும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ அறிவுறுத்தியுள்ளார். வங்கிகளின் ஊடாக மாத்திரம் டொலர்களை கொள்வனவு செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.  

மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிப்பு

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. ஆபத்தான பிரதேசங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அடைமழை நிலவுமாயின் ஆபத்தான பிரதேசங்களில் உள்ள மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென்று நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது..