தனிக்குழுவாக செயல்பட்டாலும் ,அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் செயல்படுவோம்

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு அமைவாக பாராளுமன்றத்தில் ஏற்படும் பிரச்சினைகளின் போது அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் செயற்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற  அரசியல் நிலைமை தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவு படுத்துவதற்காக இன்று (06) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் ஸ்ரீ பால டி சில்வா இந்த விடயத்தை குறிப்பிட்டார். இந்த ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவும் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஏதேனும் பிரச்சினை … Read more

இலங்கையில் ,இரண்டாவது அலை காலப்பகுதியில் 0% கொவிட் தொற்று இறப்பு

சுகாதார பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட ஏப்ரல் 4ஆம் திகதி அறிக்கையில், 2020 நவம்பரில் தொடங்கிய இரண்டாவது அலையின் பின்னர் ,கொவிட்-19 வைரசு தொற்று தொடர்பான இறப்புகள் முதல் தடவையாக எதுவும் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளது. ஏப்ரல் 4 ஆம் திகதி, சுகாதார அதிகாரிகளால் 112 கொவிட்-19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 61 ஆயிரத்து 991 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன் ,வைரசு தொற்றால்  ஏற்பட்ட மொத்த … Read more

புத்தாண்டு காலத்தில் கொவிட் குறித்து அவதானமாக செயற்பட வேண்டும்

கடந்த வருடம் தமிழ் சிங்களப் புத்தாண்டு காலத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்பட்டதனால், இந்த புத்தாண்டு காலத்தில் அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புத்தாண்டு காலத்தில் இடம்பெறும் முக்கிய செயற்பாடுகளின்போது, பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி எந்த வகையிலும் தனது பதவியை இராஜினாமா செய்ய மாட்டார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எந்த வகையிலும் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய மாட்டார் என ஆளும் கட்சி பிரதம அமைப்பாளரும், அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்றைய தினம் (06) எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இவ்வாறு பதிலளித்தார். ஜனாதிபதிக்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். அவர் பதவி விலக மாட்டார் நாம் அவருடன் ஒன்றிணைந்துள்ளோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.     

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமாவை ஜனாதிபதி நிராகரித்தார்…

பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வதற்கு ரஞ்சித் சியம்பலாபிட்டிய சமர்ப்பித்த கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் நிராகரித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கும் அவர்கள் வகித்த பதவிகளை இராஜினாமா செய்வதற்கும் தீர்மானித்திருந்தனர். பாராளுமன்ற ஜனநாயகம் பாதுகாப்பாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். எனவே, பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதற்கு ரஞ்சித் சியம்பலாபிட்டிய சமர்ப்பித்த கடிதத்தை நிராகரிப்பதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். நேற்று, (05) … Read more

தனிக்குழுவாக செயல்பட்டாலும் எதிர்க்கட்சிகளுடன் எந்த தொடர்பும் இல்லை – முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

தனிக்குழுவாக  செயற்பட்டாலும் எதிர்க்கட்சியில் இணையப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று (05) பாராளுமன்றத்தில் தனிக்குழுவாக செயற்படுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஊடகமொன்றுக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன், தேர்தல் ஒன்றிற்கு செல்லாமல், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவசரகாலச் சட்டம் நீக்கம் – ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவிப்பு

நேற்று நள்ளிரவு (05) முதல் அமுலுக்கு வரும் வகையில், அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விநியோக நடவடிக்கை தடையின்றித் தொடர உறுதி

எரிபொருள் விநியோக நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெறுவதாக தனியார் எரிபொருள் பௌசர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளார்கள். இலங்கை தனியார் பௌசர் வாகன உரிமையாளர்கள் சங்கத்திற்கும் – கொலன்னாவை மசகு எண்ணெய் முனைய நிறுவனத்தின் தலைவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கிறது. சகல கோரிக்கைகளுக்குமான தீர்வுகள் கிடைக்காவிட்டாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன்கருதி எரிபொருள் விநியோக நடவடிக்கை இடம்பெறுவதாக தனியார் பௌசர் வாகன உரிமையாளர் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பான பாராளுமன்ற விவாதம் மேலும் 2 தினங்களுக்கு தொடரும்….

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பான பாராளுமன்ற விவாதம் மேலும் இரண்டு தினங்களுக்கு நடைபெறவுள்ளது. .பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று பாராளுமன்றம் கூடியது. தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காணப்பதற்கான யோசனைகள் இதன் போது முன்வைக்கப்பட்டன. பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்குச் செல்லுமாறு யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் சில கட்சிகளின் பிரதிநிதிகள் இதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. இதேவேளை, இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் எந்தவித இணக்கப்பாடுமின்றி முடிவடைந்தது.  கட்சிகள் அல்லது குழுக்களாகப் பிரிந்து பல்வேறு கருத்துக்களுடன் மக்களை … Read more

தொழில்நுட்ப ஒத்துழைப்பின் மூலம் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல்

விவசாயத் திணைக்களம் – பிலிப்பைன்ஸ் அரிசி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மணிலாவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், வெளியுறவுத் திணைக்களம் – பிலிப்பைன்ஸின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு சபை, இலங்கை விவசாயத் திணைக்களத்தின் முப்பத்திரண்டு (32) விவசாய விரிவாக்கவாளர்கள் / தொழில்நுட்ப வல்லுநர்கள் / ஆராய்ச்சியாளர்களுக்கு ஒருங்கிணைந்த நெற்பயிர் முகாமைத்துவம் குறித்த பயிற்சியாளர்களுக்கு மெய்நிகர் பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. ஒருங்கிணைந்த நெற்பயிர் முகாமைத்துவ அமைப்பிலான பயிற்சியாளர்களின் பயிற்சி என்பது, பிலிப்பைன்ஸால் பயிர் முகாமைத்துவம், அரிசி உற்பத்தித் தொழில்நுட்பங்கள் … Read more