பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது

பாராளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. தொடர்ச்சியாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08 ஆம் திகதி) வரை பாராளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறும் என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கை மீதான விவாதம் எதிர்வரும் எட்டாம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.      

சிரேஷ்ட பேராசிரியர் சோ.சந்திரசேகரம் காலமானார்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரம் தமது 77ஆவது வயதில் காலமானார். மாரடைப்பு காரணமாக, காலி-பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று (04) காலை காலமானார். பேராசிரியர் சோ.சந்திரசேகரம் 1944, டிசம்பர் மாதம் பதுளையில் பிறந்தார். பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பானின் ஹிரோசிமா பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்பை மேற்கொண்ட இவர், இலங்கையின் தமிழ் கல்வித்துறைக்கு பாரிய பங்களிப்புக்களை செய்திருந்தார். தேசிய கல்வி ஆணைக்குழுவின் முன்னாள் அங்கத்தவராக பேராசிரியர் சோ.சந்திரசேகரம் பணியாற்றியதுடன், கொழும்பு தமிழ் சங்கத்தின் முன்னாள் … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: இன்றைய நிலவரம்

தமிழகத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா வைரசு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய(04) கொரோனா வைரசு தொற்று குறித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று புதிதாக 20 ஆயிரத்து 29 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 34 லட்சத்து 52 ஆயிரத்து 930 பேருக்கு … Read more

பாதுகாப்பு படையினரின் வகிபாகம் தொடர்பில் பாதுகாப்பு ஆலோசகர்கள் / இணைப்பாளர்களுக்கு இராணுவ தளபதி விளக்கம்

தொழிற் தகைமை மிகுந்ததாக விளங்கும் இலங்கை இராணுவம் வேறு நோக்கங்களின்றி அரசியலமைப்புக்குச் இணங்கவே செயற்படும் என இலங்கையை தளமாக கொண்ட உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் தூதரகங்களின் பாதுகாப்பு இணைப்பாளர்கள் / ஆலோசகர்களுடன் இன்று (4) நடைபெற்ற சந்திப்பில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெளிவுபடுத்தினார். பாதுகாப்பு ஆலோசகர்கள்/இணைப்பாளர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் இங்கு தெளிவூட்டப்பட்டது. அஸ்திரேலியா பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் இயன் கீத் கெய்ன், … Read more

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு…

இன்று, (04) பிற்பகல் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கோரிக்கைக்கு அமைவாக மலையகப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு திட்டமிடுதல், தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபா மற்றும் ஆசிரியர் உதவியாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் … Read more

2022ஆம் ஆண்டின் 03ம் இலக்க நாணயக்கொள்கை மீளாய்விற்கான அறிவிப்பு பிற்போடப்பட்டுள்ளது

2022 ஏப்பிரல் 05ம் திகதியன்று மு.ப 07.30 மணிக்கு வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 2022ஆம் ஆண்டின் 03ம் இலக்க நாணயக்கொள்கை மீளாய்விற்கான ஊடக அறிக்கை பிற்போடப்பட்டுள்ளது. அதற்கிணங்க , 2022 ஏப்பிரல் 05ம் திகதியன்று நடைபெறவிருந்த ஊடக மாநாடும் பிற்போடப்பட்டுள்ளது. ஊடக அறிக்கை மற்றும் ஊடக மாநாட்டுக்கான அறிவிப்பு திகதி விரைவில் தெரிவிக்கப்படும். Published Date: Monday, April 4, 2022

மருந்து இறக்குமதிக்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி அமைச்சு, சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளுக்கு தட்டுப்பாடு இன்றி மருந்துகளை விநியோகிக்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு மேலும் 22 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் அமைச்சர் … Read more

கடும் மழை காரணமாக பெரகல – கொஸ்லந்த வீதியில் போக்குவரத்து பாதிப்பு

நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியின் பெரகல, கல்கந்த பிரதேசத்தில் மண்மேடு பாறைகள்  சரிந்துவீழ்ந்ததினால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3ஆம் திகதி இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக ,காப்பட் இடும் பணி அண்மையில் நிறைவுபெற்ற கல்கந்த கீழ்ப் பிரிவு வீதியின் ஒரு பகுதியும்  பாதிக்கப்பட்டுள்ளது. சரிந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணி, ஹல்துமுல்ல பிரதேசச் செயலாளரின் கண்காணிப்பின் கீழ், ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெரகல மற்றும் கொஸ்லந்தவிற்கு இடையில் பெரகல … Read more