கடற்பரப்புகளில் வானிலை , கடல் நிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கானஇ நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு2022 ஏப்ரல் 03ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் … Read more

ஊரடங்குச்சட்டம்: இதுவரை 664 பேர் கைது

நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு அமைதியான முறையில் செயற்படுமாறு அரசாங்கம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கலகம் ஏற்படுத்தும் வகையில் சிலர் செயற்படலாம் என அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. ஆகையினால் நாடு தழுவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் இதுவரை 664 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று மாலை 6.00 மணியிலிருந்து நாளை காலை 6.00 மணி வரை ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை அத்தியாவசியப் பணிகளுக்காகச் … Read more

2021 க. பொ. த. உயர்தர பரீட்சை செய்முறை பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

2021 கல்விப் பொதுத் தராதப் பத்திர உயர்தர பரீட்சை செய்முறை பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஏப்ரல்03ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு2022 ஏப்ரல் 03ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் ,மத்திய, சப்ரகமுவ, மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி … Read more

'மீண்டும் வணக்கம்' – மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வை ஏற்பாடு  

மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2022ஆம் ஆண்டிற்கான அதன் சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக சுற்றுலா நடத்துனர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.  2022 ஏப்ரல் 01 முதல் மலேசியா தனது எல்லைகளைத் திறந்து, உள்நுழையும் மற்றும் வெளிச்செல்லும் அத்தியாவசியமற்ற பயணங்களை அனுமதிக்கும் அதே நேரத்தில் கடுமையான சுகாதார நெறிமுறைகளும் நீக்கப்படும். கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2020 மார்ச் 15ஆந் திகதி மலேசியா தனது எல்லைகளை மூடியதிலிருந்து இரண்டு முழுமையான நாட்காட்டி ஆண்டுகளுக்குப் பிறகு … Read more

புனித ரமழான் மாதம் ஆரம்பம்

புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ளது. ஹிஜ்ரி 1443 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று (02) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது. இதனை அடுத்து ரமழான் மாதம் ஆரம்பமாவதாக பிறைக்குழு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. கொவிட் சுகாதார வழிமுறைகள் மற்றும் ஊரடங்குச்சட்டம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோர்களின் பங்கேற்பில் இந்த மாநாடு இடம்பெற்றது. கொழும்பு பெரிய … Read more

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலுடன் கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கப்பலிலுள்ள டீசலை இறக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தில் உற்பத்தி நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.