ஜனாதிபதி தலைமையில், பிம்ஸ்ரெக் அரச தலைவர்கள் மாநாடு

 ஜனாதிபதி தலைமையில் ,பிம்ஸ்ரெக் அரச தலைவர்கள் மாநாடு இன்று இடம்பெறவுள்ளது. பிம்ஸ்ரெக் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு இன்று  இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இம்முறை மாநாட்டிற்குத் தலைமை தாங்குகின்றார். பங்ளாதேஷ், பூட்டான், நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கின்றார்கள். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வரும பிம்ஸ்ரெக் அமைப்பின் மாநாடு இன்றுடன் முடிவுக்கு வருகின்றது.

பாதுகாப்பு அமைச்சின் ஊடக அறிக்கை

இந்திய அரசாங்கத்துடன் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட கடல்சார் பாதுகாப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் சில அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களால் தவறாகப் சித்தரிக்கப்பட்டுள்ளது போன்று இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு இடையூறையோ அல்லது அச்சுறுத்தலையோ ஏற்படுத்தாது. இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படும்; மிதக்கும் தளமானது ஆண்டு தோறும் கப்பல் பழுதுபார்ப்பு வேலைகளுக்கு வெளியாருக்கு கொடுக்கப்படும் 600 மில்லியன் ரூபா செலவை மீதப்படுத்தக் கூடியதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்திட்டமானது 2015ஆம் ஆண்டு முதல் வரைவில் இருந்து வருகின்ற ஒன்றாகும். டோர்னியர் உளவு … Read more

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு 10 ஆம் திகதிக்கு முன்னர் உரம்

சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நஞ்சற்ற உணவு, வளமான தேசத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சேதனைப் பசளை விநியோகம் தொடர்பான மாவட்ட மட்ட குழுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் (28) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படவுள்ள சிறுபோக பயிர்ச்செய்கைக்கான சேதனப்பசளையினை எவ்வாறு விநியோகிக்க முடியும் என்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் விவசாயிகளுக்கான உரத்தினை வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட … Read more

காங்கேசந்துறையிலிருந்து புத்தளம் வரையான கடற்பரப்புகளில் மிதமான அலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாகமாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள … Read more

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (28) அலரிமாளிகையில் நடைபெற்றது. அதன்போது, 2014ஆம் ஆண்டு வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக இந்திய இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் நிர்மாணிக்கப்பட்ட யாழ் கலாசார நிலையம் இணைய தொழில்நுட்பம் ஊடாக பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோரினால் அது மக்கள் மயப்படுத்தப்பட்டது. … Read more

“பசுமை தேசம்” தேசிய வீட்டுத்தோட்ட திட்டத்தில் இணைந்து கௌரவ பிரதமர் அலரி மாளிகை வளாகத்தில் பலா கன்றொன்றை நாட்டினார்

‘பசுமை தேசம்’ தேசிய வீட்டுத்தோட்ட திட்டம் -2022 தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வை குறிக்கும் வகையில் இன்று (29) முற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ரராஜபக்க்ஷ அவர்கள் மாளிகை வளாகத்தில் பலா கன்றொன்றை நாட்டிவைத்தார். காலை 9.18 மணியளவிலான சுப வேளையில் பலா மரக்கன்றொன்றை கௌரவ பிரதமர் நட்டு வைத்தார். நச்சுத்தன்மையற்ற சத்துக்கள் நிறைந்த புதிய காய்கறிகள், பழங்கள், மூலிகைகள் மற்றும் கிழங்கு வகைகளை தங்கள் சொந்த வீட்டு தோட்டங்களில் இருந்து பெற்று, அதன் மூலம் ஆரோக்கியமான … Read more

எரிபொருள் தரத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லை

நாட்டில் பயன்படுத்தப்படும் எரிபொருள் தரத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிக்கையில், நாட்டுக்கு கொண்டுவரப்படும் எரிபொருள் ,கப்பலுக்கு ஏற்றப்படும் சந்தர்ப்பம் முதல் கப்பலில் இருந்து இறக்கப்படும் வரையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தர நிறுவனங்கள் சிலவற்றினால் சம்பந்தப்பட்ட எரிபொருளின் தரம் பரிசோதனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டினார். எந்தவொரு நிறுவனத்திலும் எரிபொருள் வகைகளின் தரம் குறித்த பிரச்சினை பதிவாகவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். சில ஊடகங்கள் இதுதொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் … Read more

ஒரு மில்லியனுக்கும் அதிகமான உக்காத பொருட்கள் சூழலில் சேர்க்கப்படுகின்றன

தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெற்று தண்ணீர் போத்தல்கள், வெற்று குளிர்பான போத்தல்கள் மற்றும் முகக்கவசம் முதலானவை சுற்றுச்சூழலில் வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த உக்காத பொருட்களால் நிலம் மற்றும் நீரிலுள்ள உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக அமைச்சர் கூறினார். இதுதொடர்பாக சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில், உயிரினங்களின் நலனை பொருட்படுத்தாமல் ,திறந்த வெளியில் இவற்றை வீசுபவர்களுக்கு எதிராக  கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இந்த செயல்முறையை எளிதில் நிறுத்திவிட முடியாது என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொரு … Read more