பிம்ஸ்டெக் சிரேஷ்ட அதிகாரிகளின் கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் (பிம்ஸ்டெக்) சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டம் இன்று, 2022 மார்ச் 28ஆந் திகதி இலங்கையின் தலைமையில் கலப்பு முறையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். இலங்கையின் வெளியுறவுச் செயலாளர், அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, தனது ஆரம்ப உரையில், பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய முக்கியத்துவத்தின் காரணமாக வங்காள விரிகுடா சர்வதேச அரசியலில் இன்று முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது … Read more

2021 உயர்தரப் பரீட்சை: நடன, சங்கீத பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை நாளை ஆரம்பம்

2021கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் நடன மற்றும் சங்கீத பாடத்துக்குரிய செயன்முறைப் பரீட்சை நாளை (29) முதல் ஆரம்பமர்கும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பரீட்சை ஏப்ரல் 8ம் திகதி வரை இடம்பெறும். உயிரியல் கட்டமைப்பு தொழில்நுட்பம், பொருளியல் தொழில்நுட்பம், மனைப்பொருளியல், நாடகம் மற்றும் போன்ற பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை புத்தாண்டு விடுமுறையின் பின்னர் இடம்பெறும். நாளை ஆரம்பமாகும் செயன்முறைப் பரீட்சைக்காக மாத்திரம் அனுமதிப்பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அனுமதிப்பத்திரம் கிடைக்கப் பெறாதவர்கள் இலங்கை … Read more

மட்டக்களப்பில் டெங்கு: நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு  

மட்டக்களப்பு மாவட்டத்தில் ,டெங்குநோய் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கடந்த மார்ச் 12 ஆந் திகதி தொடக்கம் மார்ச்சு 18 ஆந் திகதிவரையான காலப்பகுதியில் 20 பேர் டெங்குநோய் தாக்கத்திற் குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு, வீடுகளில் தேங்கிக் கிடக்கின்ற குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்குநுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காதவகையில் ,சூழலை துப்பரவாக வைத்துக்கொள்ளுமாறு , பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணன் பொது மக்ளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். … Read more

மெல்பேர்னில் உள்ள புதிய தலைமுறை தொழில்நுட்ப நிறுவனமான ஐ க்ரீன் டேட்டா முப்பத்திரண்டு இலங்கை மென்பொருள் பொறியியலாளர்களை ஆட்சேர்ப்பு  

அவுஸ்திரேலியாவில் பணியாற்றுவதற்காக புதிய தலைமுறை தொழில்நுட்ப நிறுவனமான ஐ க்ரீன் டேட்டாவினால் வேலை அனுமதிப்பத்திரத்தில் அண்மையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 32 அதி திறமையான மென்பொருள் பொறியியலாளர்கள் அண்மையில் மெல்பேர்னில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு விஜயம் செய்தனர். மெல்போர்னைத் தலைமையிடமாகக் கொண்ட ஐ க்ரீன் டேட்டா, 2018 இல் வணிகத்தைத் தொடங்கியதுடன், வங்கி மற்றும் நிதிச் சேவைக் களத்தில் குறிப்பிட்ட கவனம் செலுத்தும் கிளவுட், டேட்டா மற்றும் டிஜிட்டல் தீர்வுகளை மையமாகக் கொண்ட நிறுவனமாகும். குறுகிய … Read more

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் தனது இலங்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் 2022 மார்ச் 22 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் வெளியுறவுச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோருடன் துணைச் செயலாளர் நுலாண்ட் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். துணைச் செயலாளரை அன்புடன் வரவேற்ற வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமெரிக்காவை ஒரு முக்கிய பங்காளியாக இலங்கை கருதுவதாகவும், நீண்ட கால உறவுகளை மேலும் உயர்த்துவதற்கு … Read more

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கையில் வரவேற்பு

இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்ரெக் மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வருகை தந்துள்ளார். இவருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் 3 உயர் அதிகாரிகளும் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்திய விமானப் படைக்கு சொந்தமான விஷேட விமானத்தில் வருகை தந்த இவர்களை அமைச்சர்களான பிரசன்ன ரனதுங்க, காமினி லொக்குகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்டோர் இலங்கை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு…

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் (USAID) மூலம் கடன் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சங்  (Julie Chung)  தெரிவித்தார். ஜூலி சங் அவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களுக்கும் இடையில்  இன்று, (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் திருமதி விக்டோரியா நூலண்ட் (Victoria … Read more

பேரீச்சம்பழத்திற்கான இறக்குமதி வரி குறைப்பு

எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு முஸ்லிம் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் பேரீச்சம்பழம் இறக்குமதிக்காக தற்பொழுது நடைமுறையில் உள்ள ஒரு கிலோவுக்கு 200 ரூபா என்ற விசேட வர்த்தக பொருட்கள் வரியில், ஒரு கிலோவிற்கு 1 ரூபா மாத்திரம் அறிவிடும் வகையில் இந்த வரியை 199 ரூபாவாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமரினால் ,2022 மார்ச் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் 2007 இலக்கம் 48 இன் கீழான விசேட வர்த்தக … Read more