ஒபிஎஸ் சகோதரர் மகன் காரை சிறைபிடித்த திமுகவினர்! – வேட்பாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கினாரா?!
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி 24-வது வார்டில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் ஓ.சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார். அவர் நேற்று இரவு 24 ஆவது வார்டுக்கு உட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு அக்ரஹாரத் தெருக்களில் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் இரண்டாவது சகோதரரும் தேனி ஆவின் தலைவருமான ஓ.ராஜாவின் மகன் முத்துகுகனின் காரில் வைத்து வாக்காளர்களுக்கு இலவசமாக சேலை, வேஷ்டி வழங்குவாதக் கூறி திமுகவினர் அப்பகுதியில் குவிந்தனர். அதே வார்டில் … Read more