திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம்: இரவு முழுவதும் நடைபெற்ற விழா; பக்தர்கள் பரவசத்துடன் பங்கேற்பு!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனப் பரிபாலனத்திலுள்ள ஸ்ரீ  திருவெண்ணீற்றுமையம்மை உடனாகிய ஸ்ரீ சிவலோக தியாகராஜசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தனி சந்நிதியில், தோத்திரபூர்ணாபிகையுடன் திருஞானசம்பந்தர் திருமணக் கோலத்தில் காட்சித் தருகிறார். இக்கோயிலில் நடைபெற்ற திருஞானசம்பந்தர் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற அனைவரும் சிவஜோதி தரிசனத்தில் ஐக்கியமானதாகத் தல வரலாறு. திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் இந்த ஐதிக வரலாற்று நிகழ்வு ஆண்டுதோறும் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில்  திருஞானசம்பந்தர் திருமண விழாவாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா … Read more

விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை? – பாலியல் குற்றச்சாட்டுக்கு எலான் மஸ்க் பதில்!

எலான் மஸ்க் 2016-ம் ஆண்டு தனி விமானத்தில் பயணித்தபோது, அதில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த பணிப்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்திருக்கிறது. மேலும், இந்தத் தவறை மறைப்பதற்காக 2018-ம் ஆண்டு எலான் மஸ்க்குக்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மூலம் 1.93 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும் அந்த செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்திருக்கிறது. எலான் மஸ்க் அனால், இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் எலான் மஸ்க், “நான் கருத்து சுதந்திரம் பற்றிப் பேசி … Read more

Uber Update: உங்க புக்கிங் ஸ்டேட்டஸ் இனி டிரைவருக்கும் அத்துபடி; உபர் செயலியில் பெரிய அப்டேட்ஸ்!

எல்லா டாக்ஸி டிரைவர்களையும் குறை சொல்லிவிட முடியாது. ஆனால், சில டிரைவர்கள் வேண்டாவெறுப்பாக கார் ஓட்டுவதைப் பார்த்ததுண்டு. ‘OTP சொல்லுங்க…’ என்று அவர்கள் கேட்க ஆரம்பிப்பதில் இருந்து, சிலர் ‘இறங்கு சீக்கிரம்’ என்று காரோட்டுவது வரை சில டிரைவர்களின் அட்ராசிட்டியைப் பார்க்கும்போது, நமக்கு BP–யே எகிறவும் செய்யும். நமது வாசகிக்கே இப்படி ஒரு சம்பவம் நடந்தது. கர்ப்பிணிப் பெண்ணான அவர், அம்பத்தூருக்கு புக் செய்திருக்கிறார். அவர் புக் செய்த இடத்துக்குக் கொஞ்சம் தள்ளி 700 மீட்டரில்தான் அவரது … Read more

அஜித் 61 அப்டேட்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் `தல' காம்போ!

முதன் முதலாக அஜித்தை ’தல’ என அழைத்தவர் ’தீனா’ படத்தில் அவருடன் நடித்த நடிகர் மகாநதி சங்கர். ஒயின் ஷாப் ஒன்றில் அஜித்துடன் சங்கர் பேசும் முதல் வார்த்தையே ‘வா தல’ என்பதுதான். இந்தப் படத்துக்குப் பிறகே அஜித்தை அவரது ரசிகர்கள் ‘தல’ என அழைத்துக் கொண்டாடத் தொடங்கினர். இந்த ’தல’ பட்டம் அஜித்துடன் சேர்ந்தது குறித்து ‘தீனா’ பட இயக்குநர் எ.ஆர்.முருகதாஸும், சம்பந்தப்பட்ட அந்தக் காட்சி குறித்து நடிகர் மகாநதி சங்கருமே தங்களது பல பேட்டிகளில் … Read more

பத்துப்பொருத்தம்! – குறுங்கதை

நம்ம ஹீரோ சிவசாமியை உங்களுக்கு நல்லா தெரியும். ஆவுடையம்மா மவன். சுப்பிரமனியர் கோவில் வாசல்ல செருப்பு பாதுகாத்துக்கிட்டு, சூடம் நெய் விளக்கு வித்துக்கிட்டு இருப்பாரே அவர்தான். இல்லை இல்லை நீங்க நினைக்கிற ஆளில்லை, மிச்ச எல்லாரும் வேட்டி கைலி கட்டி வியாபாரம் பண்ணும் போது இவரு மட்டும் பேண்ட் போட்டிருப்பாரே, சட்டையில ஒரு பித்தான் இருக்காது, இன்னொரு பித்தான் தப்பா மாட்டிருக்குமே… ஆங்…அவருதான். கருப்பு பேண்ட் கலர் போய் பிரவுன் கலர் ஆனதா, இல்லை வெள்ளை பேண்ட் … Read more

பா.இரஞ்சித் இயக்கத்தில் `வேட்டுவம்'… இது விக்ரம் படமா, கமல் படமா? என்ன ஸ்பெஷல்?

75வது கான் (Cannes) திரைப்பட விழா, பிரான்ஸில் நடந்து வருகிறது. அதில் இயக்குநர் பா.ரஞ்சித், தனது `வேட்டுவம்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார். பா.இரஞ்சித் ‘சார்பட்டா பரம்பரை’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ படங்களைத் தொடர்ந்து பா.இரஞ்சித், விக்ரம் மற்றும் கமல் நடிக்கும் படங்களை இயக்குகிறார். கான் திரைப்பட விழாவில் அவர் வெளியிட்டுள்ள ‘வேட்டுவம்’ விக்ரம் நடிக்கும் படத்தின் டைட்டிலா என்ற கேள்வி கோடம்பாக்கத்தில் எழுந்திருக்கிறது. இது குறித்து விசாரித்தோம். பா.இரஞ்சித் தனது நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், ‘பரியேறும் … Read more

அற்புதம்மாள்: களத்தில் நின்றது முதல் பேரறிவாளனை மீட்டது வரை; ஒரு தாயின் பயணம்!|Photo Story

பேரறிவாளன் விடுதலை என்கிற செய்தி வந்த போது அரசியல், வழக்கு, நீதி எல்லாவற்றையும் தாண்டி அனைவருக்கும் நினைவுக்கு வந்தது ஒரு பெயர், அற்புதம்மாள். ரப்பர் செருப்பு, வாடிய முகம், தீராத நெஞ்சுரம், மனதின் ஒரு மூலையில் நம்பிக்கை என 31 ஆண்டுகளாக சிறைக்கும், நீதிமன்றத்துக்கும், அரசு அலுவலகங்களுக்கும் அலைந்த அற்புதம்மாளின் கால்கள் இனி ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். `என் மகன் நிரபராதி’ இவை தான் அற்புதம்மாள் உச்சரித்த வார்த்தைகள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் `சிறு விசாரணை’ … Read more

அஸ்ஸாம் வெள்ளம்: கால்கள் நீரில் படாமலிருக்க மீட்புப் படை வீரர் முதுகில் ஏறிச் சென்ற பாஜக எம்எல்ஏ!

அஸ்ஸாமில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. அதன் காரணமாக அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளகாடாக காட்சியளிக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மாநிலத்தின் 27 மாவட்டங்களிலிருந்து 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்திருப்பதாகக் என கூறப்படுகிறது. இந்த நிலையில், ஹோஜாய் மாவட்டத்தின் லும்டிங் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ சிபு மிஸ்ரா என்பவர், ஹோஜாய் பகுதியில் வெள்ள நிலைமையை ஆய்வு செய்ய சென்றார். அப்போது, அவர் தன் … Read more

“சில நாள்களாகவே மொழி அடிப்படையில் சர்ச்சையை கிளப்ப முயற்சி நடக்கிறது” – பிரதமர் மோடி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் 8 ஆண்டுகள், நாட்டின் சீரான வளர்ச்சி, சமூக நீதி மற்றும் சமூகப் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. சிறு விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த எட்டு ஆண்டுகளில் பாஜக அரசு பூர்த்தி செய்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்கை நிர்ணயம் செய்ய … Read more

மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி… மசூதியை அகற்றக் கோரிய வழக்கில் விசாரணைக்கு அனுமதி

லக்னோவில் வசிக்கும் ரஞ்சனா அக்னிஹோத்ரி என்பவர் கிருஷ்ணர் பிறந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாகக் கூறி, கத்ரா கேசவ் தேவ் கோவில் பகுதியில் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஷாஹி இத்கா மசூதியை அகற்ற வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக மனுதாரரின் வழக்கறிஞர் கோபால் கண்டேல்வால், “1669-70-ல் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் கிருஷ்ணா ஜென்ம பூமியில் ஷாஹி இத்கா மசூதி கட்டப்பட்டது. மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி என கூறப்படும் இடத்தில் பாதுகாப்பு கிருஷ்ண … Read more