“புலனாய்வு நிறுவனங்களின் உதவியுடன் பாஜக அரசு `துக்ளக் ஆட்சி' நடத்தி வருகிறது” – மம்தா பானர்ஜி

கொல்கத்தாவில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜார்கிராமில் நடைபெற்ற திரிணாமுல் தொழிலாளர்கள் கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், “ சில புலனாய்வு நிறுவனங்களின் உதவியுடன் பாஜக அரசு மத்தியில் துக்ளக் ஆட்சி நடத்தி வருகிறது. அரசியல் கணக்கை தீர்த்துக் கொள்வதற்காக ஒன்றிய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் தேசத்தை பிளவுபடுத்த முயற்சி செய்கிறார்கள். காவி கட்சி நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் அழித்துவிட்டது. மம்தா பானர்ஜி … Read more

Doctor Vikatan: குழந்தைகளுக்கு எது பெஸ்ட்; மாத்திரைகளா, ஊசியா?

சிறு குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடிக்கும் போதும், காய்ச்சலின் போதும் மாத்திரைகளாகக் கொடுப்பது சிறந்ததா…. ஊசி போடுவது சிறந்ததா? – சரஸ்வதி (விகடன் இணையத்திலிருந்து) பொது மருத்துவர் அருணாசலம் பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம். “எந்தப் பிரச்னைக்கும் ஊசி போடலாமா, கூடாதா என்பதை குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்தான் முடிவுசெய்ய வேண்டுமே தவிர பெற்றோரோ, மற்றவர்களோ முடிவு செய்யக்கூடாது. உதாரணத்துக்கு குழந்தைக்கு சளிப் பிடித்திருக்கும். அதற்காக மாத்திரைகளைப் பரிந்துரைப்பார் மருத்துவர். அதில் குணமாகாத நிலையில் … Read more

“பல்கலைக்கழகங்கள் கருத்தியல் மோதலுக்கான இடமாக மாறக்கூடாது'' – உள்துறை அமைச்சர் அமித் ஷா

டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கின் தொடக்க விழாவில் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அமித் ஷா , “பல்கலைக்கழகங்கள் கருத்துப் பரிமாற்றத்திற்கான களமாக மாற வேண்டுமே தவிர, கருத்தியல் மோதலுக்கான இடமாக மாறக்கூடாது. கருத்துக்கள் மற்றும் விவாதங்கள் மூலம் ஒரு சித்தாந்தம் முன்னேறுகிறது. இளைஞர்கள் தாங்கள் நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகளை புரிந்து செயல்பட வேண்டும். இந்தியா அமைதியை வணங்குகிறது. அமைதியை விரும்புகிறது. அமித் ஷா இந்தியா உலகில் உள்ள … Read more

`சிபிஐ-யின் இறுதி அறிக்கை அநீதியானது’ – தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினரும், துப்பாக்கி சூட்டில் பலியான, காயமடைந்தவர்களின் குடும்பத்தினரும் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசும்போது, “நல்ல தண்ணீர், காற்று கேட்டு போராடியவர்களை காக்கை குருவியை சுடுவது போல சுட்டுக்கொன்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இன்றளவும் ஸ்டெர்லைட் ஆலை இயங்குகிறது. அது மட்டுமில்லாமல், ஆலை நிர்வாகம் மக்களிடையே மோதலை ஏற்படுத்தவும் முயற்சி செய்கிறது. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்று 4 ஆண்டுகள் ஆன நிலையில் சி.பி.ஐ தனது 3-வது இறுதி … Read more

நட்சத்திரப் பலன்கள்: மே 20 முதல் 26 வரை! #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

RCB v GT: `நாயகன் மீண்டும் வரார்'- அசத்தல் கோலியும், பிளேஆஃப்ஸ் வாய்ப்பில் நீடிக்கும் பெங்களூரும்!

ரசிகர்கள் நீண்ட நாள்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு சம்பவம் இன்று நடந்திருக்கிறது. விராட் கோலி ஆதிக்கமிக்க ஒரு இன்னிங்ஸை ஆடி முடித்திருக்கிறார். கோலியின் ஆட்டத்தால் பெங்களூரு ஒரு போட்டியை வென்றிருக்கிறது. குஜராத்திற்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு தங்களது பிளேஆஃப்ஸ் வாய்ப்பையும் இன்னமும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. வென்றே ஆக வேண்டிய கட்டாயத்திலேயே புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸை பெங்களூரு எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவே டாஸை வென்றிருந்தார். முதலில் … Read more

20.05.22 வெள்ளிக்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

சிவலிங்க விவகாரம்: “நல்லவேளை பாபா அணு ஆராய்ச்சி மையத்தை தோண்டவில்லை!" – மஹுவா மொய்த்ரா

பா.ஜ.க-வின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சிப்பவர்களில் மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா முக்கியமானவர். அவ்வப்போது பா.ஜ.க-வின் குறைகளை நாடாளுமன்றத்திலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் வெளிப்படையாகப் பேசிவிடுவார். அதனால் அடிக்கடி விமர்சனத்துக்கும் ஆளாகுவார். மஹுவா மொய்த்ரா இந்த நிலையில், கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருக்கிறது எனத் தொடரப்பட்ட வழக்கில், `மசூதிக்குள் சிவ லிங்கம் இருப்பின் அது பாதுகாக்கப்பட வேண்டும். அதே நேரம் முஸ்லிம்களும் தொழுகை நடத்துவதை நிறுத்த வேண்டாம்!’ என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. நீதிமன்றத்தின் … Read more

How to: வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் எலும்பை பலப்படுத்துவது எப்படி? I How to strengthen bones?

உடல் வலிமையில் மிக முக்கியப் பங்கு வகிப்பது எலும்புகள். உணவுகளில், வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் எலும்புகளை பலப்படுத்தலாம். அதற்கான ஆலோசனைகளை பகிர்கிறார், ஸ்போர்ட்ஸ் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். உடற்பயிற்சி எலும்புகளை பலப்படுத்துவதற்கு நாம் செய்ய வேண்டிய மிக முக்கிய விஷயம், உடற்பயிற்சி. உடற்பயிற்சி என்றாலே கார்டியாக் பயிற்சிகளைத்தான் பலரும் மேற்கொள்வார்கள். அதாவது நீச்சல், நடைப்பயிற்சி, ஒட்டப்பயிற்சி, சைக்ளிங் போன்றவை. இவை உடலுக்கும் மனதுக்கும் மிக ஆரோக்கியமானதுதான். ஆனால் எலும்புகளை பலப்படுத்தவும், தசைகளை பலப்படுத்தவும் … Read more

“உட்கட்சியிலும் ஜனநாயகம் பேணப்படும் ஒரே கட்சி பாஜக மட்டுமே!" – ஜே.பி.நட்டா

இன்று, `ஜனநாயக ஆட்சிக்கு குடும்ப அரசியல் கட்சிகளின் அச்சுறுத்தல்’ எனும் கருத்தரங்கில் பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “குடும்ப அரசியல் கட்சிகள், ஒரு நபரின் ஆதிக்கத்தில் இருக்கின்றன. இத்தகைய கட்சிகளுக்கு சித்தாந்தம் கிடையாது. மேலும், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலானவை. பிறப்பின் அடிப்படையிலான எந்தவொரு பாகுபாட்டையும் அரசியலமைப்பு தடைசெய்கிறது. ஆனால், இந்த குடும்ப அரசியல் கட்சிகளில் தலைமை என்பது பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மற்றவை புறக்கணிக்கப்படுகின்றன. தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்த மாநிலக் கட்சிகளின் … Read more