“பேரறிவாளன் விடுதலை” – ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைதான எழுவரில் ஒருவரான பேரறிவாளன், தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பல அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தது. அதாவது, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, “பேரறிவாளனை விடுவிப்பதே வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு. வழக்கின் நேரத்தை மத்திய அரசு வீணடிக்கிறது. இந்த வழக்கில் ஆளுநருக்காக மத்திய அரசு வாதிடுவது ஏன்? எந்த விதியின் … Read more

விசா முறைகேடு வழக்கு… சிபிஐ ரெய்டை தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது!

முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் எம்.பி-யுமான ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் திடீரென நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையானது, சென்னை, மும்பை, டெல்லி மற்றும் பஞ்சாப் போன்ற நகரங்களில் இவ்விருவரும் தொடர்புடைய 10 இடங்களில் நடைபெற்றது. இது தொடர்பாக ப.சிதம்பரமும், “சி.பி.ஐ அதிகாரிகள் காட்டிய எஃப்.ஐ.ஆர்-ல் நான் குற்றம்சாட்டப்பட்டவனாகக் குறிப்பிடப்படவில்லை” என ட்வீட் செய்திருந்தார். சிபிஐ ஆனால், பஞ்சாப் மாநிலம் மானசாவிலுள்ள வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான மின் … Read more

திருமணம் தாண்டிய உறவு..? மகன், மகளுக்கு விஷம்… ஆண் நண்பருடன் பெண் தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் சிக்ராபூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பிரியங்கா(25). இவருக்கு 3, 5 வயதில் மகனும், மகளும் இருந்தனர். பிரியங்கா தனது ஆண் நண்பர் குணால் கெய்க்வாட்(29) என்பவருடன் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு மும்பை அருகில் உள்ள அலிபாக்கிற்கு வந்தார். அவர்கள் அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கினர். இந்நிலையில் பிரியங்காவின் கணவர் சந்தீப், தனது மனைவி, குழந்தைகளை காணவில்லை என்று கூறி போலீஸில் புகார் செய்திருந்தார். இதே போன்று குணால் மனைவியும் … Read more

கொல்லிமலை: மூங்கில் தேர், அவரைக்கொட்டை அவியல் படையல்… மழைவேண்டி மக்களின் வேண்டுதல் திருவிழா!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் இருக்கிறது மேட்டுவிளாரம். இந்த மலைக்கிராமத்தின் முகப்பில் இருக்கும் ஆலமரத்தடியில் அமைந்திருக்கும் கொட்டைச் சாமிக்கு, “மும்மாரி மழை பெய்ய வேண்டும். வெள்ளாமை சீரும் சிறப்புமாக நடக்க வேண்டும். எங்களுக்கு வேண்டிய மழையைக் கொடுத்து, துணையாக நில்லு சாமி” என்று ஊரே கூடி நடத்தும் திருவிழா, காலம் காலமாக நடத்தப்படுகிறது. அவரைக்கொட்டை சாமி சித்திரை திருவிழா: கரூர் அய்யர்மலையில் வரும் 5-ம் தேதி கொடியேற்றம்; 13-ம் தேதி தேரோட்டம்! 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட … Read more

வாடகைக்கு குடியிருப்பவர்களே, வீட்டின் உரிமையாளர்களே; இந்த சட்டம் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?

தமிழ்நாடு அரசின் சட்டப்படி (Tamilnadu Regulations Of Rights And Responsibility Of LandLords And Tenants Act(2017) ) வாடகை வீட்டில் குடியிருப்பவர் கொடுக்கும் வாடகை பணத்திற்கு வீட்டின் உரிமையாளர் கண்டிப்பாக ரசீது கொடுக்க வேண்டும். அப்படி ரசீது கொடுக்காவிட்டால் குடியிருப்பவர் ஆன்லைன் மூலமாக வாடகை பணத்தை கொடுக்கலாம். அல்லது இரண்டு மாதத்திற்கு மணியார்டர் மூலமாக வாடகை அனுப்பலாம். அப்படியும் வீட்டின் உரிமையாளர் வாடகை ரசீது கொடுக்கவில்லை என்றால் வாடகை அதிகாரியிடம் சென்று குடியிருப்பவர் புகார் … Read more

MI v SRH: த்ரிபாதியால் பிளேஆஃப் ரேசில் தொடரும் ஐதராபாத்; சென்னை ரசிகர்களைப் பதறவைத்த மும்பை சேஸிங்!

மூன்று அணிகள் தங்களின் ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில் மீதி உள்ள ஒரே ஒரு இடத்துக்காக நான்கு அணிகள், டிக்கெட் வாங்கப் போராடும் ‘மன்னன்’ ரஜினி போல முட்டி மோதிக்கொண்டுள்ளன. அதில் கடைசி இடத்திலிருக்கும் சன்ரைஸர்ஸுக்கு இது வாழ்வா சாவா வாய்ப்பு. மறுமுனையில் மும்பைக்கு இது கெளரவப் பிரச்னை. காரணம் அந்த அணி இதுவரை புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் முடித்ததே இல்லை. இப்படியாக ஒரு அணி பிளேஆஃப் கடைசி இடம் வேண்டுமெனவும் இன்னொரு … Read more

18.05.22 புதன்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

கியான்வாபி விவகாரம்: “முஸ்லிம்களின் தொழுகை பாதிக்கப்படக்கூடாது, அதேசமயம்..!" – உச்ச நீதிமன்றம்

உத்தரப்பிரதேசத்தில் வழக்கறிஞர் விஜய் சங்கர் ரஸ்தோகி என்பவர் வாரணாசி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில், “முகலாய மன்னர் ஔரங்கரசீப்பால், வாரணாசியின் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த காசிவிஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டது. அதன் பிறகுதான் அங்கு கியான்வாபி மசூதி கட்டப்பட்டது. எனவே, அந்த நிலம் கோயிலுக்குச் சொந்தமானது. மசூதி இருக்கும் இடத்தில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டால், அதற்கான சான்றுகள் கிடைக்கும். காசிவிஸ்வநாதர் லிங்கமும் மசூதி இருக்கும் இடத்தில்தான் புதைக்கப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஞான்வாபி மசூதி … Read more

கிரிப்டோ கரன்சி சந்தையின் திடீர் வீழ்ச்சி! – விளக்கும் ஷார்ஜா வங்கி அதிகாரி

சமீபத்தில் உலகளாவிய கிரிப்டோ கரன்சி சந்தை பெரும் வீழ்ச்சியை சந்தித்து முதலீட்டாளர்களுக்கு 8000 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. Terra USD மற்றும் அதன் கூட்டாளியான Luna என்ற இரண்டு பிரபல கிரிப்டோ கரன்சிகளின் வர்த்தகத்தில் ஏற்பட்ட மிகப்பெரும் வீழ்ச்சி இந்த இரண்டு கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்து இருந்த கம்பெனிகள் மற்றும் முதலீட்டாளர்களின் தலையில் துண்டு போட வைத்திருக்கிறது. Terra USD மற்றும் அதன் கூட்டாளியான Luna என்ற இரண்டு … Read more