“எங்க உயிருக்கே ஆபத்தாக இருக்கு"- மருத்துவ கழிவுகளால் துயரத்தில் திருவாரூர் கிராம மக்கள்

திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் அமைந்துள்ளது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனையை 2010-ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார். ஏறக்குறைய 500 படுக்கை வசதிகளுடன் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் நாளொன்றுக்கு சுமார் 1,500 நோயாளிகள் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகள் அனைத்தும் அருகில் உள்ள தண்டலை என்னும் கிராமத்தில் … Read more

கடன் பிரச்னையில் காவிரியில் குதித்த பெண்; பரிசலில் வந்து காப்பாற்றிய மீனவர்! – திக் திக் காட்சிகள்

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராதா. இவர், விசைத்தறி கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரின் கணவரும் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், கடன் பிரச்னையால் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து, ராதா நேற்று (2 -ம் தேதி) ஈரோடு செல்லும் சாலையில் உள்ள காவிரி ஆற்றின் பாலத்தில் இருந்து, காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அவர், … Read more

KKR v RR: ரிங்கு சிங்கின் அதிரடி, ராணாவின் முதிர்ச்சி; ஐந்து தோல்விகளிலிருந்து மீண்டுவந்த கொல்கத்தா!

தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு வந்து ஒரு வெற்றியைப் பெறுவது, அந்த அணியின் ஆட்டக்காரர்களுக்கு உற்சாகம் அளிக்கிறதோ இல்லையோ, அந்தந்த அணியின் ரசிகர்களை நிச்சயம் குதூகலப்படுத்தும். அதுவும் தொடரிலிருந்தே வெளியேறும் நிலைக்கு எல்லாம் சென்றுவிட்டு, அதன் பிறகு கிடைக்கும் ஒரு வெற்றி, அவர்களின் இருப்பை உறுதி செய்யும்போது அதனால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சென்னையின் ரசிகர்களுக்கு நேற்றைய போட்டி அப்படியானது என்றால், ‘எனி பிளாஸ்திரீஸ் டுடே?’ எனக் கேட்டால் கொல்கத்தா ரசிகர்கள் ஹவுரா பிரிட்ஜிலிருந்து கத்துவது கேட்கும். … Read more

03.05.22 செவ்வாய்க்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/Jxoon8CISOw #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

“பாஜக, ஆர்.எஸ்.எஸ் நாட்டை சாதி, மத அடிப்படையில் பிரிக்க முடிவுசெய்துவிட்டன!" – அசோக் கெலாட்

இந்து நாட்காட்டியின்படி புத்தாண்டின் முதல் நாளான ஏப்ரல் 2 மற்றும் ராம நவமி தினத்தன்று, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களில் இந்து-முஸ்லிம் சமூகத்தினரிடையே வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. அதிலும், கடந்த ஏப்ரல் 2-ம் தேதியன்று ராஜஸ்தான் மாநிலம், கரோலி நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்து அமைப்பினருக்கும், முஸ்லிம்களுக்குமிடையே வெடித்த கலவரத்தில் அங்கிருந்த பல்வேறு வாகனங்கள் மற்றும் கடைகள் தீக்கிரையாகின. மேலும், தொடர்ச்சியாக நடைபெற்ற இது போன்ற இந்து-முஸ்லிம் கலவரங்களில், பாதிக்கப்பட்ட மாநிலங்களின் … Read more

ஆளுநர் பதவி அநாவசியமா? – மாநில சுயாட்சி பற்றி கொஞ்சம் பேசுவோமா? -2

ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஒரு நியமன உறுப்பினர் தானே தவிர அவர் ஒன்றும் மக்களை சந்தித்து வாக்குகள் கேட்டு சனநாயக முறையில் தேர்தலை சந்தித்தவர் அல்ல, மாறாக அவர் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே நல்லுறவை பேணி காக்கும் பொருட்டு செயல்படக்கூடிய ஒரு ஒருங்கிணைப்பாளர். இந்த வார்த்தையை கேட்டால் ஏன் இவ்வளவு கலக்கம்? – மாநில சுயாட்சி பற்றி கொஞ்சம் பேசுவோமா? -1 இப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு ஆளுநர் தன்னிச்சையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட … Read more

சென்னை: அடிக்கடி போனில் பேசிய மனைவி கொலை – நாடகமாடிய கணவன் சிக்கியது எப்படி?

சென்னை அம்பத்தூர், டீச்சர்ஸ் காலனி, நேரு தெருவில் வசித்தவர் ஹரீஷ் பிரம்மா,(25). இவரின் மனைவி ரஷியா கத்துனா, (22) . உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இந்தத் தம்பதியினருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. சென்னை அம்பத்தூர் பகுதியில் ஹரீஸ் பிரம்மா, ஒரு கம்பெனியில் மிஷின் ஆபரேட்டராக வேலைப்பார்த்து வருகிறார். இந்த நிலையில், ரஷியா கத்துனா அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். அதை ஹரீஸ் பிரம்மா கண்டித்துள்ளார். ஆனாலும் ரஷியா கத்துனா, தொடர்ந்து போனில் பேசி வந்துள்ளார். ஹரீஸ் … Read more

"கொரோனா காலங்களில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டது" – பில் கேட்ஸ் புகழாரம்

உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் அண்மையில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் கோவிட் பெருந்தொற்று குறித்துப் பேசியிருந்தார். அதில் உலககெங்கிலும் உள்ள நாடுகள் எவ்வாறு இந்தப் பெருந்தொற்று காலங்களைச் சமாளித்தது என்று கலந்துரையாடியிருந்தார். அதில் குறிப்பாக இந்தியா குறித்து பேசிய அவர் தொலைத்தொடர்புகளுக்கு அப்பால் பல கிராமங்களைக் கொண்ட இந்தியா, கோவிட் பெருந்தொற்றை சிறப்பாகக் கையாண்டது என்றும் ஆதார் போன்ற டிஜிட்டல் காரணிகளைப் பயன்படுத்தி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை கொண்டு சேர்த்தது பாராட்டுக்குரியது என்றும் கூறினார். … Read more