சென்னை: மது போதையில் ஆட்டோ ஓட்டுநரைக் குத்திக்கொலைசெய்துவிட்டு, செல்ஃபி எடுத்துக்கொண்ட நண்பர்கள்!
சென்னை மணலியை அடுத்த பழைய நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன் (28). இவர் நேற்று இரவு மணலி புதுநகர்ப் பகுதியில் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அந்த சமயத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே, ரவிச்சந்திரனின் நான்கு நண்பர்களும் அவரை கத்தியால் குத்தியிருக்கின்றனர். அதோடு, அருகிலிருந்த கல்லைத் தூக்கி அவரின் தலையில் போட்டு கொலை செய்திருக்கிறார்கள். ரவிச்சந்திரன் சம்பவமறிந்து வந்த மணலி புதுநகர் பகுதி காவல்துறையினர், ரவிச்சந்திரனின் உடலைக் … Read more