Deepika Padukone: கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த முறை நடுவர்; ரன்வீரின் ஆச்சர்ய கமென்ட்!

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்த வருட நடுவர்களில் ஒருவராக தீபிகா படுகோன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரெஞ்ச் நடிகர் வின்சென்ட் லிண்டன் – நடுவர்களுக்குத் தலைமை வகிக்க, Iron Man 3 பட நடிகை ரெபேக்கா ஹால், இயக்குனர் ஜெப் நிக்கோல்ஸ், ஷெர்லாக் கோம்ஸ் படத்தில் நடித்த நூமி ரபேஸ் உள்ளிட்ட எட்டு நடுவர்களில் ஒருவராக தீபிகா படுகோன் 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து … Read more

பிறந்த பேத்தியையும் மருமகளையும் ஹெலிகாப்டரில் வீட்டுக்கு அழைத்து வந்த விவசாயி; புனே சுவாரஸ்யம்!

பெண் குழந்தைகள் பிறப்பதை இன்றும் கூட பல குடும்பங்கள் விருப்பத்துடன் வரவேற்பதில்லை. இந்நிலையில், புனேயில் விவசாயி ஒருவர், பிறந்த தன் பேத்தியையும், மருமகளையும் மருத்துவனையிலிருந்து ஹெலிகாப்டரில் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளது, பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. புனே புறநகர் பகுதியான பாலேவாடி என்ற இடத்தை சேர்ந்தவர் விவசாயி அஜித் பாண்டுரங்க். இவரின் மருமகளை சமீபத்தில் பிரசவத்துக்காக புனே மருத்துவமனையில் சேர்த்திருந்தார். அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. பேத்தி பிறந்ததில் பாண்டுரங்க் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தன் பேத்தியின் வரவை மிகவும் … Read more

தஞ்சை தேர்த் திருவிழா விபத்து: `நீ வந்தாதான் வீட்டுக்குப் போவேன், வாப்பா!' – உருக்கும் மகளின் கதறல்

தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தில் மின்சாரம் பாய்ந்து மூன்று சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். இதில் தன் 12 வயது மகனைப் பறிகொடுத்தார் ஒரு தாய். ஒரு வருடத்திற்கு முன் கணவரை இழந்த இந்தப் பெண், இப்போது மகனையும் இழந்து தவிக்கிறார். ”என் ரெண்டு கண்ணையும் இழந்து தனி மரமாகிட்டேனே…” என அவர் கதறியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் தேர் விபத்து ஏற்படுத்திய பாதிப்பு Live: … Read more

புனே: வேலையிலிருந்து நீக்கிய கடை உரிமையாளர்… ஊழியர் தீவைத்து எரித்ததில் உடல் கருகி சாவு!

புனே சோம்நாத் நகரில் உள்ள டெய்லர் கடையில் வேலை செய்து வந்தவர் மிலிந்த் (35). இவரை அந்தக் கடையின் பெண் உரிமையாளர் பாலா ஜனிங்(32) ஏதோ பிரச்னை காரணமாக, ஒரு வாரத்துக்கு வேலையிலிருந்து பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மிலிந்த் கடை உரிமையாளர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில், அவரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மிலிந்த் இரவு 11 மணிக்கு டெய்லர் கடைக்குச் சென்றிருக்கிறார். கடையில் பாலா மட்டும் இருந்திருக்கிறார். அதைக் … Read more

Indonesia: எண்ணெய் ஏற்றுமதிக்குத் தடை; இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது?!

இந்தியாவில் ஏற்கெனவே எரிபொருள் விற்பனை விலை, கோடைகால வெயிலைவிட அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இப்போது அடுத்த அதிர்ச்சி இந்தோனேஷியாவின் அறிவிப்பால் வந்துள்ளது. அந்நாட்டில் அதிகரித்து வருகிற பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அனைத்து வகையான எண்ணெய் ஏற்றுமதிகளையும் தடை செய்திருக்கிறது இந்தோனேஷியா அரசு. இந்தோனேஷியா பாம் ஆயில் உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிப்பது. இந்தியா தன்னுடைய எண்ணெய் தேவைக்காக இந்தோனேஷியாவைதான் சார்ந்திருக்கிற அவசியம் இருந்து வருகிறது. ஆண்டுதோறும் 8 மில்லியன் டன் எண்ணெய் இந்தோனேஷியாவில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஏற்கனவே உக்ரைன் … Read more

27 வயதில் தொடங்கிய கனவு; டெஸ்லா டு ட்விட்டர் வரை- யாரிந்த எலான் மஸ்க்?!

2017 எலான் மஸ்க் ட்விட்டரில் “எனக்கு ட்விட்டர் பிடித்திருக்கிறது” என ஒரு ட்வீட் பகிர்ந்தார். அதற்கு டேவ் ஸ்மித் “அப்போ நீங்க இத வாங்கணும்” என்று பதில் அனுப்புகிறார். எலான் மஸ்க் கவுண்டமணி ஸ்டைலில் ‘அந்த ரோடு என்ன விலைன்னு கேளு’ என்பது போல “அது என்ன விலை வரும்” என ட்வீட் செய்திருந்தார். அப்போது, 5 வருடங்களுக்குப் பிறகு அவர் உண்மையாகவே ட்விட்டரை வாங்குவார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கட்டாய இராணுவ சேவையைத் தவிர்க்க … Read more

மதுரைத் தெருக்களின் வழியே 13: திருவிழாவோ, கல்யாணமோ எல்லாத்துக்கும் சினிமா; இது அந்தக் கால கலாட்டா!

திரைப்படம் என்பது தமிழர் வாழ்க்கையில் ஆழமாக ஊடுருவியிருந்தது என்பதற்கு அத்தாட்சி, புதிதாகத் திருமணம் ஆன தம்பதியினர் புதுப்படத்திற்குச் செல்வது என்பது கட்டாயம். சிலவேளைகளில் தம்பதிகள் தனித்தோ அல்லது பெருங்கும்பலுடனோ திரையரங்குக்கு வருவார்கள். 90களில்கூட மதுரைக்காரர்கள் தியேட்டருக்குச் சென்றதையும், பார்த்த திரைப்படங்களையும் வாழ்க்கையின் ஒருபகுதியாகக் கருதினர். சிலர் திருமணமாகி மனைவியுடன் சென்று பார்த்த முதல் திரைப்படம் தொடங்கி, வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளில் பார்த்த திரைப்படங்கள் வரை அனைத்தையும் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருக்கின்றனர். அன்றைய காலகட்டத்தில் குடும்பத் தலைவியான … Read more

“பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்பதை இன்னும் நம்புகிறோம்” – ஐ.நா பொதுச்செயலாளரிடம் புதின் விளக்கம்

உக்ரைனில் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷ்யப் படைக்கும், உக்ரேனியப் படைக்கும் இடையே தொடங்கிய போரானது, 2 மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஐ.நா சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும், ரஷ்யா – உக்ரைன் இடையே பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் இதுவரை, போரை நிறுத்துவதற்கான அறிகுறியாக எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், நேற்று மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சந்தித்தார். அப்போது உக்ரைனில் நிலவும் … Read more

செல்லூர் ராஜூ-க்கு வந்த சோதனை… மாநகர செயலாளர் பதவிக்கு 4 பேர் போட்டி – இது மதுரை அதிமுக பாலிடிக்ஸ்

அ.தி.மு.க உட்கட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. கிளைக்கழக, ஒன்றியக்கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மாவட்ட செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுகளை பெற்று வருகிறார்கள். செல்லூர் ராஜூ உட்கட்சித் தேர்தல் என்பது நடந்தாலும் தலைமை விரும்புகின்ற நபர்களே மாவட்ட செயலாளர்களாக அறிவிக்கப்பட்டு வந்தனர். இதனால் பெரும்பாலான மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக யாரும் போட்டியிடுவதில்லை. தங்களுக்கு எதிராக யாரும் போட்டியிடாத நிலையையே பல மாவட்ட செயலாளர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் மதுரை மாநகர செயலாளர் … Read more