25.04.2022 திங்கட்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/Jxoon8CISOw #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

வளைந்த ஆணுறுப்பு; இயல்பானதா அல்லது பிரச்னையா? காமத்துக்கு மரியாதை – S2 E17

`காமத்துக்கு மரியாதை’ முதல் சீஸனில் காமம் தொடர்பான புரிந்துணர்வை ஏற்படுத்தியதோடு, அதில் எழக்கூடிய சந்தேகங்களுக்கும் தீர்வு வழங்கி வந்தார்கள் பாலியல் மருத்துவர்கள். தொடர் முடிந்த பிறகும் வாசகர்களின் கேள்விகள் வந்தவண்ணம் இருக்கவே, `காமத்துக்கு மரியாதை’ சீஸன் 2 ஆரம்பித்தோம். இதில், காமம் சார்ந்த பிரச்னைகள் மற்றும் இந்தக்கால தம்பதியர் சந்திக்கின்ற தாம்பத்திய சிக்கல்களுக்கான தீர்வுகள் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ். விந்து முந்துதல், சிறிய ஆணுறுப்பு ஆகிய இரண்டு பிரச்னைகளுக்கு அடுத்ததாக, பல ஆண் வாசகர்கள் … Read more

`மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகளால்தான் மக்களிடம் சேர்க்க முடியும்' -ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும், தேசிய ஊராட்சி தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக ஆண்டுக்கு 4 முறை நடத்தப்பட்டு வந்த கிராம சபைக் கூட்டமானது, இனி ஆண்டுக்கு 6 முறை நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு கிராமத்தில், இன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். கூட்டத்தில், கிராம மக்களிடம் கலந்துரையாடிய ஸ்டாலின், அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து … Read more

சென்னை: கட்டுப்பாட்டை இழந்து நடைமேடைக்குள் புகுந்த மின்சார ரயில்… குதித்துத் தப்பித்த ஓட்டுநர்!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு வந்த, கடற்கரை நிலையம் – தாம்பரம் புறநகர் மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து முதலாம் நடைமேடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. பிரேக் சரியாக செயல்படாததால்தான் ரயில் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நடைமேடையில் மக்கள் கூட்டம் அதிகம் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், ரயில் விபத்துக்குள்ளானபோது, தப்பிப்பதற்காக ஓட்டுநர் ரயிலிலிருந்து வெளியே குதித்ததில், ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னையில் மின்சார ரயில் தடம்புரண்டதால் விபத்து மேலும், முதலாம் நடைமேடையில் மேற்கூரை … Read more

1400 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்ப பெறும் Ola Electric நிறுவனம்; காரணம் என்ன?

எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரிவது அடிக்கடி நிகழும் ஒன்றாகிவிட்டது. இந்த வாகனங்களினால் உயிரிழப்பு மற்றும் காயங்கள் என பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எலெக்ட்ரிக் வாகனங்களைப் பரிசோதிக்க வல்லுநர் குழு ஒன்றை அமைக்கவிருப்பதாக அறிக்கை வெளியிட்டார். அந்தக் குழுவின் முதல் கட்ட விசாரணைகள் தொடங்கியிருக்கும் நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களில் விதி மீறல்கள் ஏதும் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் … Read more

“தாய் மொழி தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலம்… இருமொழிக் கொள்கையே தொடரும்!" – பள்ளிக் கல்வித்துறை

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையை, நடப்பாண்டில் பள்ளிகளில் 6-ம் முதல் 9-ம் வகுப்புவரை மூன்றாவது மொழித்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், “தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் நீண்ட காலமாக அமலில் உள்ள இருமொழிக் கொள்கையை மாற்றி மும்மொழிக் கொள்கையைப் புகுத்தும் நடவடிக்கைகள் சத்தமின்றி … Read more

“கர்நாடகத்தில் கலவரங்களைக் கட்டுப்படுத்த உ.பி, ம.பி மாடலை பின்பற்ற வேண்டும்!" – பாஜக தலைவர்

பா.ஜ.க ஆட்சி செய்துவரும் மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில், சமீப காலங்களில் ஹிஜாப் பிரச்னை, இந்து கோயில்களில் முஸ்லிம்கள் கடை அமைக்க எதிர்ப்பு, பஜ்ரங் தள் நிர்வாகி படுகொலை மற்றும் ஹலால் விவகாரம் என வகுப்புவாத வன்முறைகள், கலவரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், `கர்நாடகாவில் கலவரங்களைக் கட்டுப்படுத்த உத்தரப்பிரதேச மற்றும் மத்தியப்பிரதேச மாடலை பின்பற்ற வேண்டும்’ எனக் கர்நாடகா மாநில பா.ஜ.க தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய நளின்குமார் கட்டீல், “இதுவொன்றும் சாதியைப் … Read more

"`மைராண்டி' அப்படினு டைட்டில் வச்சது பிரச்னை ஆச்சு!"- Vaisaag – உடன் ஒரு நேர்காணல்

நம் பலரின் அன்றாடங்களில் இரண்டறக் கலந்துநிற்கிறது இசை. மகிழ்ச்சி, துயரம், கொண்டாட்டம், மன அமைதி பல நிலைகளுக்கு நம்மை இசை இட்டுச் செல்லும். திரைப்பட இசையின் அபிரிவிதமான வளர்ச்சியே இதற்கு உதாரணம். திரையிசையைத் தாண்டி பல வாத்திய கலைஞர்களும், தனியிசைக் கலைஞர்களும் தங்கள் ஆளுமையை நிரூபித்துவருகின்றனர். சமீபத்தில் பல தனியிசைக் கலைஞர்கள் தங்களுக்கென ரிப்பீட்டட் ஆடியன்ஸைக் கொண்டிருக்கின்றனர். அப்படி ஸ்பாட்டிபையில் கலக்கி வருபவர்தான் வைசாக். அவருடன் உரையாடியதிலிருந்து… மியூசிக் ஃபீல்டுல எப்படி உங்களுக்கு ஆர்வம் வந்தது? Vaisaag … Read more

“யாரும் பசியுடன் இருக்கக்கூடாது..!" – யாசகம் பெற்று கோயிலுக்கு ரூ.1,00,000 தானம் செய்த மூதாட்டி

கர்நாடகாவில் 80 வயது மூதாட்டி ஒருவர், யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக, தான் யாசகம் செய்து சம்பாதித்த 1 லட்சம் ரூபாயை, மங்களூரு அருகே உள்ள பொளலி ராஜராஜேஸ்வரி கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியிருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம் கஞ்சகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி அஸ்வத்தம்மா. நாடக கம்பெனி நடத்திவந்த இவரின் கணவர் 20 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்ட காரணத்தால், அஸ்வத்தம்மா வாழ்வதற்கே பெரும் நெருக்கடிக்குள்ளாகி யாசகம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். … Read more

“உசேன் ஓவியங்களை பிரியங்கா காந்தியிடமிருந்து வாங்க நிர்பந்தம் செய்தனர்!" – யெஸ் பேங்க் நிறுவனர்

யெஸ் வங்கியின் நிறுவனர்களில் ஒருவரான ராணா கபூர், வங்கியில் நடந்த முறைகேடு தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். ராணா கபூரும், டி.எச்.எஃப்.எல் நிறுவனர்களான கபில் மற்றும் தீரஜ் ஆகியோர் சேர்ந்து ரூ.5,050 கோடி அளவு முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கபில் மற்றும் தீரஜ் ஆகியோரும் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். யெஸ் வங்கி முறைகேடு தொடர்பாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் ராணா கபூர் கொடுத்துள்ள … Read more