139 கோடி ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கியது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம்!

பீகார் மாநிலத்தில் 1990 முதல் 1996 வரை முதல்வராக இருந்த ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆட்சிக்காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்காக அரசு கருவூலத்தில் இருந்து ரூபாய் 139 கோடி பணம் மோசடி செய்தார் என வழக்கு தொடரப்பட்டது.  இதுதொடர்பாக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் 73 வயதான லாலு பிரசாத் யாதவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.60 … Read more

“எம்எல்ஏ-க்களுக்கு ஒரு கார் கொடுங்க..!" – சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்த நயினார் நாகேந்திரன்

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று பேசிய பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “உள்ளாட்சி அமைப்புகளை வலுசேர்க்கும் வகையான முதல்வரின் அறிவிப்பை நான் மனதார வரவேற்கிறேன். முதல்வரின் பார்வை ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், பஞ்சாயத்துத் தலைவர், ஊராட்சிமன்றத் தலைவர் வரை வந்திருக்கிறது. அந்த பார்வை சட்டமன்ற உறுப்பினர்கள் வரை வரவில்லை என்ற ஒரு ஆதங்கம் எல்லோரிடத்திலும் இருக்கிறது” என்று சிரித்தபடியே சொன்னார். நயினார் நாகேந்திரன் தொடர்ந்து பேசியவர், “எனக்குக் கூட … Read more

விருதுநகர்; சாலை விபத்தில் 38 ஆடுகள் பலி; நெடுஞ்சாலைகளில் கால்நடை விபத்துகளைத் தவிர்ப்பது எப்படி?

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவர், சுமார் 500 க்கும் மேற்பட்ட ஆடுகளை தொழில்முறை ரீதியாக கொட்டகை அமைத்து வளர்த்து வருகிறார். இவரிடம் ராமநாதபுரம் மாவட்டம் கருமல் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான கணேசன் (28) மற்றும் விக்னேஷ் (25) ஆகியோர் கூலி அடிப்படையில் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சாத்தூர் அருகிலுள்ள உப்பத்தூர் பகுதியில் சுமார் 350க்கும் மேற்பட்ட ஆடுகளை சகோதரர்கள் இருவரும் கிடைப்போட்டு மேய்ச்சல் செய்து வந்தனர். இந்நிலையில் … Read more

கர்நாடகா: ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள்… பொதுத்தேர்வு எழுத அனுமதி மறுப்பு!

உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்கும் ஒரு சம்பவமாக உருவெடுத்தது ஹிஜாப் விவகாரம். ஹிஜாப் விவகாரத்தில், “ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமானது அல்ல” என கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், கர்நாடகாவில் இன்று முதல் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் 1,076 மையங்களில் 6.84 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். மாநிலம் முழுவதும் இருக்கும் மையங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேர்வுகள் நடைபெறுகிறது. பல்வேறு மையங்களில் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதையொட்டி, … Read more

கோலிவுட் ஸ்பைடர்: விஜய் அண்ணனாக நடிக்க மறுத்தாரா நடிகர்?; துபாயை டிக் செய்த கமல்!

* விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை அடுத்து நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை ஜூலையில் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே தனுஷிடமும் ஒரு ஒன்லைன் சொல்லி, நெல்சன் ஓகே வாங்கியதாகத் தகவல் கசிந்தது. இதுபற்றி நெல்சன் வட்டாரத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல் இதுதான். ”நெல்சன் ரஜினி 169 ஸ்கிரிப்ட் ஒர்க்கில் கவனம் செலுத்தி வருகிறார். ‘பீஸ்ட்’ படததில் ‘ஸ்கிரிப்ட்டில் அவர் கவனம் செலுத்தியிருக்கலாம்’ என்ற பேச்சு கிளம்பியது அவரை அப்செட் ஆக்கியிருக்கிறது. ரஜினி படத்தில் அந்த … Read more

“மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்காததால்தான் மின்வெட்டு!" – சட்டசபையில் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பேசியதாவது, “தமிழகத்தில் பல பகுதிகளில் தற்போது மின் தடை நிலவுகிறது. கோடைக்காலத்தில் மின்சார தேவை அதிகரித்துள்ளதுள்ளதால், தமிழக அரசு நிலக்கரியை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கையிருப்பு வைத்திருக்கவில்லை. மின் வெட்டு காரணமாக விவசாயிகள் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனத்தினர், மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் இல்லாமல் இரவில் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படும் நிலை பல இடங்களில் காணப்படுகின்றது. தடையில்லா மின்சாரம் … Read more

“பிரசாந்த் கிஷோர் அனைத்து கட்சிகளின் உறுப்பினர் அட்டைகளையும் வைத்திருப்பார்!" – பாஜக எம்.பி தாக்கு

தேர்தல் வியூக வகுப்பாளார் பிரசாந்த் கிஷோர், அண்மையில் காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டு, 2024 தேர்தல் வியூகம் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையை, சோனியா காந்தியால் நியமிக்கப்பட்ட குழு ஒரு வாரத்துக்குள் ஆய்வு செய்து, கட்சித் தலைமையிடம் ஒப்படைக்கும் என்று காங்கிரஸ் வெளிப்படையாகவே கூறியிருந்தது. இந்த செய்திகள் வெளியானதையடுத்து, காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர் இணைந்துவிட்டதாக பாஜக உள்ளிட்டக் கட்சிகள் கூறிவந்தன. பிரசாந்த் கிஷோர் இந்த நிலையில், வெவ்வேறு … Read more

வீட்டின் முன் எச்சில் துப்பியதால் ஆத்திரம்; 13 வயது சிறுவனை கழுத்தை நெரித்துக் கொலைசெய்த உறவினர்!

சில நேரங்களில் சாதாரண பகைக் கூட கொலையில் முடிந்துவிடுகிறது. மும்பையில் அது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அந்த வகையில், வீட்டின் முன் எச்சில் துப்பிய சிறுவனை உறவினர் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. மும்பை தானேவில் உள்ள கல்வாவில் வசிப்பவர் தஸ்ரத் காக்டே (28). இவரது வீட்டிற்கு அருகில் அவரின் உறவினர் தன் குடும்பத்தோடு வசித்து வந்திருக்கிறார். அவரின் மகன் ருபேஷ்(13) என்ற சிறுவன், கடந்த சில நாள்களுக்கு முன்பு தன் … Read more

பட்டப்பகலில் கத்தியுடன் விரட்டிய நபர்… குழந்தைகள் கண்முன்னே பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

டெல்லியில் எப்போதும் குற்றச் சம்பவங்களுக்கு பஞ்சமே கிடையாது. பட்டப்பகலில் சிறைக்குள் புகுந்து கொலை செய்வது, சிறைக்குள் இருந்துகொண்டே குற்றங்களைச் செய்வது என சர்வ சாதாரணமாக குற்றச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில், டெல்லி சாகர் பூர் சாலையில் நேற்று பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் அங்கு விரைந்துச் சென்றனர். கத்திக்குத்து காயங்களுடன் பெண் ஒருவர் ரோட்டில் விழுந்து கிடந்தார். அவரின் குழந்தைகள் அருகில் அழுது கொண்டு நின்று கொண்டிருந்தனர். … Read more

LIC IPO: மே 2-ம் தேதி வருகிறதா? அதிகரிக்கும் முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு!

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட எல்.ஐ.சி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு (IPO) வருகிற மே மாதம் 2-ம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. நம் நாட்டின் அரசுப் பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்ஷுரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் ஐ.பி.ஒ. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்திலேயே வெளியாவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் வேகமாக செய்யப்பட்டு வந்தன. ஆனால், ரஷ்ய நாடானது உக்ரைன் நாடு மீது போர் தொடுத்ததன் காரணமாக சர்வதேச அளவில் பங்குச் … Read more