Kgf -2 : 19 வயது இளைஞருக்கு பெரிய பொறுப்பைக் கொடுத்த பிரஷாந்த் நீல்! படத்தின் எடிட்டர் இவர்தானா?!

KGF-2 படம் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் இன்று வெளியாகி இருக்கிறது. படத்திற்கான டிக்கெட்கள் இலட்சக்கணக்கில் விற்று தீர்ந்திருப்பதாக ஆன்லைன் டிக்கெட் விற்பனை தளமான BookMyShow தெரிவிக்கிறது. முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. களமும் பெரிது என்பதால் இதற்கான உழைப்பும் பெரிது. பெரியளவில் உருவாக்கப்பட்ட இந்த படத்தின் எடிட்டர் பற்றிக் கேட்டால் நீங்கள் வியந்து போவீர்கள். உஜ்வல் குல்கர்னி இந்தப் படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். இவருக்கு வயது 19. உஜ்வல் … Read more

மகாராஷ்டிரா: காட்டில் மானிட்டர் பல்லி வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்! – வீடியோவால் சிக்கிய 4 பேர்

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் இருக்கும் கன்டோலி தேசிய பூங்கா பகுதிக்குள் 4 பேர் துப்பாக்கியுடன் வேட்டையாடுவதற்காக சென்றனர். அவர்கள் 4 பேரும் கொங்கன் பகுதியில் இருந்து காட்டுக்குள் விலங்குகளை தேடி அலைந்தனர். நான்கு பேரும் வேட்டை விலங்குகளை தேடி அலைந்தனர். ஆனால் அவர்களின் கண்ணில் பல்லி வகையை சேர்ந்த மானிட்டர் பல்லி(Monitor lizard) ஒன்று தென்பட்டது. உடனே மங்கேஷ், சந்தீப், ஜனார்தன், அக்‌ஷய் ஆகிய நான்கு பேரும் அந்த பல்லியை பிடித்து அதனை பாலியல் வன்கொடுமைக்கு … Read more

ரன்பீர் கபூர்-ஆலியா பட் திருமணம்: 50 வகை அசைவ, 25 வகை சைவ உணவுகள்; திரண்டு வந்த பிரபலங்கள்!

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட் இடையிலான திருமண சடங்குகள் நேற்று தொடங்கியது. இதில் பாலிவுட் இயக்குனரும், முதன் முதலில் ஆலியா பட்டை பாலிவுட்டிற்கு அறிமுகம் செய்தவருமான கரண் ஜோகர் முதலில் ஆலியாவிற்கு மருதானி வைத்து சடங்கைத் தொடங்கி வைத்தார். இதில் கரீனா கபூர், கரிஷ்மா கபூர் சகோதரிகள் மற்றும் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இரவில் இசை நிகழ்ச்சியும் நடந்தது. இதில் நடிகர் அமிதாப்பச்சன் மகள் … Read more

Beast : " விஜய் உடன் படம் பண்றதுக்கான பேச்சுவாரத்தை நடந்துச்சு! ஆனா…" – செல்வராகவன் நேர்காணல்

காதல் கொண்டேனில் ஆரம்பித்து நெஞ்சம் மறப்பதில்லை வரை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாகப் பிடித்திருக்கும் இயக்குநர் செல்வராகவன். அவரின் புதிய அவதாரம்தான் நடிகர் செல்வராகவன். சாணி காயிதம் அவரின் முதல் படமாக இருந்தாலும், அவர் முதலில் நடித்து வெளியான படம் பீஸ்ட். பீஸ்ட் படம் குறித்து நடிகர் செல்வராகவனின் நேர்காணல் இதோ… இயக்குநரிலிருந்து தற்போது நடிகர் செல்வராகவனாக மாறியுள்ளீர்கள்; இயக்குவதைவிட நடிப்பது எப்படி இருக்கிறது? செல்வராகவன் அதே வேலைதான். ஆனால் கொஞ்சம் பின்னாடி இருப்பதற்குப் … Read more

’பரியேறும் பெருமாள்’ தந்தை நடிகர் தங்கராசுக்கு சொந்த வீடு! – நெகிழ்ந்துபோன நாட்டுப்புறக் கலைஞர்

நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோ நகரில் வசித்து வருபவர் தங்கராசு. நாட்டுப்புறக் கலைஞர் தங்கராசு கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக கோயில் விழாக்கள் உள்ளிட்டவற்றில் பெண் வேடமிட்டு கரகாட்டம் ஆடி வருகிறார். கரகாட்ட நிகழ்ச்சிகள் இல்லாத காலங்களில் வெள்ளரித் தோட்டத்தில் இரவுக் காவலாளியாக உள்ளார். `என்னை மதிக்கல .. ஆட்டத்தையே நிப்பாட்டிட்டேன்!’ – `பரியன்’ அப்பா தங்கராஜ் அத்துடன், பாளையங்கோட்டை மார்க்கெட்டில் வாழைகாய், இலை, முருங்கைக்காய் உள்ளிட்டவற்றை வாங்கி விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயில் … Read more

“எங்கள் அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்பியதே நான்தான்!” – சர்ச்சைக்கு பக்வந்த் மான் விளக்கம்

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, பக்வந்த் மான் தலைமையில் ஆட்சியமைத்தது. இந்த நிலையில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் `பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்’-ன் உயரதிகாரிகளைச் சந்தித்ததாகவும், அந்த நிகழ்வில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கு பெறவில்லை எனவும் செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, முதல்வர் பக்வந்த் மான் இல்லாமல் பஞ்சாப் உயரதிகாரிகளை அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்து … Read more

சென்னை: மாடலிங் துறை பெண்களின் புகார்… சிக்கிய முகமது சையத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் குடும்பத்துடன் குடியிருந்துவருபவர் முகமது சையத். பி.காம் வரை படித்துள்ளார். இவர், சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டதால் தினமும் உடற்பயிற்சி செய்து சிக்ஸ்பேக் இளைஞனாக வலம் வந்தார். ஆனால் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காததால் கல்லூரிப் படிப்பு முடிந்ததும் மாடலிங் துறைக்குள் நுழைந்தார். கைதான சையத் அப்போது அவருக்கு அறிமுகமான மாடலிங் துறையைச் சேர்ந்த இளம்பெண்களுடன் முகமது சையத், நெருங்கிப் பழகினார். அதில் சில பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறி … Read more

Beast : ` விஜய்க்கு இவங்கதான் அம்மானு பரவின செய்தி; விஜய்யின் ரியாக்ஷன்!' – பீஸ்ட் சுஜாதா பாபு

நியூஸ் ரீடராக நமக்கு பரிச்சயமான முகம் சுஜாதா பாபு; விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பீஸ்ட் அனுபவம் குறித்து அவர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். கிட்டத்தட்ட 23 வருஷமா நியூஸ் ரீடராக இருந்துட்டு அதை மாற்றி சினிமாவில் நடிகையாக என்னை நிரூபிக்கணும் என்கிற எண்ணம் இருந்தது. நியூஸ் ரீடராக நம்மளோட முகம் பலருக்கும் தெரிஞ்சிருக்கும் அது பிளஸ் ஆக இருந்தாலும் சினிமாவுக்குள்ள போகும்போது இவங்களுக்கு எல்லாம் தெரியும்னு நினைச்சிடுறாங்க அது மைனஸ். நேரடியா நமக்கு … Read more

கேந்திரிய வித்யாலா: `பரிந்துரைகளால் நல்ல பெயரைவிட கெட்ட பெயரே அதிகம்' – MP எம்.எம்.அப்துல்லா!

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், வரும் கல்வியாண்டில் சிறப்பு ஒதுக்கீடு படி மாணவச் சேர்க்கைக்கான இடங்கள் வழங்கப்படக் கூடாது என அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே15 அல்லது 16 பிரிவுகளில் இந்த சிறப்பு ஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது. மத்திய அரசுப் பணியாளர்களின் குழந்தைகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணிபுரிபவர்களின் குழந்தைகள், பாராளுமன்ற உறுப்பினர்களின் குழந்தைகள், பேரக்குழந்தைகள், MP விருப்ப உரிமையின் கீழ் பரிந்துரைக்கும் 10 மாணவர்களுக்கு இடங்கள் உள்ளிட்டவை இந்த சிறப்பு … Read more

மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!|Photo Album

மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் … Read more