திருமழபாடி: `நந்தி கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்' குவிந்த பக்தர்கள்!
திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் நந்தியம்பெருமான் சுயசாம்பிகை திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தைக் காணத் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருக்கல்யாணம் நந்தி கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம் இந்தத் திருமணத்தை நேரில் காணும் வரன்களுக்கு அடுத்த நந்தி கல்யாணத்துக்குள் திருமணம் நடைபெறும் என்பது ஐதிகம். நந்தி தேவரின் திருக்கல்யாணம் நடைபெற்ற தலம் தமிழ்நாட்டிலேயே திருமழபாடி திருத்தலம் மட்டும்தான். திருமழபாடி நந்தி திருக்கல்யாணத் தலத்தில் தேர்த் திருவிழா! சிவபெருமான் தாமே முன்னின்று நந்தியெம்பெருமானுக்குத் … Read more