கடகம் குருப் பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023 | Guru Peyarchi Palan | Sakthi Vikatan

கடகம் ராசிக்கான குருப் பெயர்ச்சி பலன்கள் குரு பகவான் 13-4-2022 அன்று கும்ப ராசியில் இருந்து தன் சொந்த வீடான மீன ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த ஓர் ஆண்டு குருபகவான் மீன ராசியில் இருந்து பலன் கொடுப்பார். இந்த குருப் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் எப்படிப் பட்ட பலன்களைக் கொடுக்கும் என்று விளக்குகிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் #Kadagam #GuruPeyarchi #GuruPeyarchiPalan Source link

“பழி வாங்குவதற்கான ஆயுதமாக பாலியல் புகார்கள் பயன்படுத்தப்படுகின்றன!" – ராமதாஸ் ஆதங்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கு எதிராகவும், மாணவர்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கு எதிராகவும், மாணவர்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. ஒரு பல்கலைக்கழகம் அதன் தகுதிகளிலிருந்து கீழிறங்கிப் பழிவாங்கும் கூடமாக மாறுவதும், அதற்காக நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உயர் கல்வியின் எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்துகிறது.  … Read more

“சீனாவிடம் அனைத்தையும் விற்றதால்தான் இந்த நிலைமை!" – குமுறும் இலங்கை வியாபாரிகள்

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்கு அதிகரித்துச் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை விண்ணைத் தொடுகின்றன… மூன்று மாதங்களுக்கு முன்னரே ஆப்பிள் கிலோ 500-க்கு விற்கப்பட்டது. தற்போது அது ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. பேரிக்காய் கிலோ 1500-க்கு விற்கப்படுகிறது. கோத்தபய ராஜபக்‌சே இந்த நிலையில், இந்திய … Read more

குற்றச்சம்பவங்கள்: 5 ஆண்டுகளில் 22 ஐபிஎஸ் அதிகாரிகள்..! – நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் பதில்

கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்தியானத்ந் ராய் பதிலளித்துள்ளார். நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், “கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறித்தும், இந்திய நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடும் காவலர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிய ஏதேனும் … Read more

ரஷ்யப் படைகளால் அச்சத்தில் உக்ரைன் பெற்றோர்… குழந்தைகளின் முதுகில் விவரங்களை எழுதும் சோகம்!

ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான தனது போர்த் தாக்குதலை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் ராணுவத்தினரை மட்டுமே குறிவைத்து தாக்கி வந்த ரஷ்யப் படைகள், தற்போது பொதுமக்களையும் கொன்று குவித்து வருவதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டி வருகிறது. அதனால், உக்ரைன் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், ஒரு குழந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலால் யாருடைய உயிருக்கும் உத்தரவாதமில்லை என்ற சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் … Read more

கஜாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட எதிர்ப்பு; கிராம மக்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் ஊராட்சிக்குட்பட்ட வடசேரிப்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 528 வீடுகளுடன் கூடிய அடுக்குமாடிகள் குடியிருப்பு கட்டுவதாக கடந்த ஆட்சியில் முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தமும் விடப்பட்டது. அதற்கான பணிகள் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கின. இந்த நிலையில், இங்கு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டுவதற்கு கிராம மக்கள் மத்தியில் எதிர்ப்பு … Read more

`சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் விழுந்துவிடும்' அமெரிக்காவை மிரட்டும் ரஷ்யா!

உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடங்கிய நாள் முதல் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் மோதல் வலுத்து வருகிறது. ரஷ்யா மீது பொருளாதாரத் தடை உட்பட ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது. ரஷ்யர்கள் யாரும் இப்போது அமெரிக்கா போக முடியாது; இதேபோல அமெரிக்கர்கள் ரஷ்யா போக முடியாது. ஆனால், இப்போதும் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணக்கமாக இணைந்து ஒரே ஒரு துறையில் பணியாற்றி வருகின்றன. அது, விண்வெளித் துறை. அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து … Read more

வெற்றிமாறன் – யுவன் இணையும் `நிலமெல்லாம் ரத்தம்' புதிய வெப் சீரிஸ்; ZEE 5 -வின் மற்ற புதிய தொடர்கள்!

நேற்று மாலை ZEE5 தமிழ் பிரிவின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இயக்குநர்கள் வெற்றிமாறன், ஏ எல் விஜய், கிருத்திகா உதயநிதி, நடிகர் பிரகாஷ்ராஜ், வாணிபோஜன், விமல், காளிதாஸ் ஜெயராம் என பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். விழாவில் ZEE 5 – ன் புதிய தமிழ் தயாரிப்புகள் குறித்து அறிமுகப்படுத்தப்பட்டது. ராதிகா சரத்குமார் தயாரிப்பில் இயக்குநர் வசந்தபாலன் இயக்கும் தலைமைச்செயலகம் வெப் சீரிஸ் பற்றிய அறிமுகம் நடந்தது. மேடையில் வசந்தபாலன் இந்தப்படத்தின் கதை குறித்துப் பகிர்ந்துகொண்டார். அரசியலின் … Read more

தொடரும் அமலாக்கப்பிரிவு நடவடிக்கைகள்: பிரதமர் நரேந்திர மோடியுடன் சரத்பவார் முக்கிய ஆலோசனை!

மகாராஷ்டிராவில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தொடர்ச்சியாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் இரு கட்சி தலைவர்களும் திணறிக்கொண்டிருக்கின்றனர். மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசை கவிழ்க்கவேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க இது போன்று செயல்படுவதாக சிவசேனா குற்றம்சாட்டியிருக்கிறது. இந்நிலையில், புதிய திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். பிரதமரின் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு 20 நிமிடங்கள் வரை நீடித்தது. பிரதமர் மோடி இதில் சரத்பவார் … Read more

“தென்னிந்திய சினிமா பற்றி நான் சொல்லியதாக பரவிவரும் தகவல் பொய்யானது" -ராஷி கண்ணா மறுப்பு!

ராஷி கண்ணா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அவர் ஹிந்தி படங்களில் நடிப்பதால் தமிழ், தெலுங்கில் இருந்து வரும் வாய்ப்பை ஏற்க மறுப்பதாகவும் தென்னிந்திய சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, வெறும் முகஅழகுக்காக மட்டும்தான் பார்க்கிறார்கள், பொம்மை/ மில்கி என்பது போல விமர்சிக்கிறார்கள் என்று அவர் சொன்னதாக வதந்தி பரவியது. இந்த வதந்தியால் தெலுங்கு சினிமா ரசிகர்கள் ராஷி கண்ணாவைக் கடுமையாக விமர்சித்து வந்தனர். அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் … Read more