குபேரப்பட்டினத்தில் பரம ஏழையையும் குபேரனாக்கும் ஸ்ரீமஹாராஜ குபேர ஹோமம் – நீங்களும் சங்கல்பிக்கலாம்!

ஈசனும் குபேரரும் ஒருசேர அருள்பாலிக்கும் இந்த தலத்தில் வரும் 14-4-2022 அன்று சிறப்பு யாகங்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொண்டு சகலவிதமான சம்பத்துக்களைப் பெற்று வாழ வேண்டுகிறோம். காமதேனு போன்றவை ஹோமங்கள், மனிதன் விரும்புவதை அக்னி பகவான் வழியே குறிப்பிட்ட தெய்வங்களுக்கு அறிவித்து நலம் அடையச் செய்பவை ஹோமங்கள். மனிதனைப் படைத்தபோதே நான்முகன் அவர்களுக்கு ஹோமங்கள் செய்யப்படும் விதங்களை ரிஷிகளின் வழியே அளித்ததை பகவத் கீதை ஸ்லோகம் ஒன்று கூறுகிறது என ஆன்மிகப் … Read more

“என் கணவரோட சாவுக்கு காவல்துறைதான் காரணம்!" – தீக்குளித்து உயிரிழந்தவரின் மனைவி கதறல்

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் சுதா. இவர் கணவர் சுதாகர். மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்துவரும் இவர், தன் கணவரின் இருதய சிகிச்சை செலவுகளுக்காக , தன் சகோதரரான பிரசாந்திடம் கடன் வாங்கியிருக்கிறார். அதில் பெரும்பகுதி தொகையைச் சுதா திருப்பிக் கொடுத்துவிட்ட நிலையில், மீதி தொகையைத் தரத் தாமதமாகியிருக்கிறது. டீக்கடை நடத்தி வந்த இவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவித்திருக்கிறார்கள். இதன் காரணமாக, தாங்கள் வாங்கியிருந்த கடனை … Read more

உக்ரைன்: போரில் இறந்த உரிமையாளர்; உடலைப் பிரிய மறுத்துக் காத்துக்கிடந்த நாய்!

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய போரானது கிட்டத்தட்ட 5 வாரங்களுக்கு மேலாக இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் இதுவரையில் சுமார் 4 மில்லியன் உக்ரேனியர்கள் இந்தப் போரால் சொந்த நாட்டைவிட்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுள்ளதாகவும், 1,000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் சமீபத்தில் ஐ.நா கூறியிருந்தது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை உக்ரைனின் புச்சா, கீவ் நகரங்களிலிருந்து ரஷ்ய ராணுவம் வெளியேறியது. அதன் பின்னர் உக்ரைன் பொதுமக்கள் புச்சா, கீவ் … Read more

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்… தமிழகத்தில் நாளை கூடுகிறது சட்டசபை!

நாளை முதல் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தவும், துறைகளுக்கு நிதி ஒதுக்கியதற்கு ஒப்புதல் பெறுவதற்காகவும் சட்டசபை கூடுகிறது. இந்த சட்டசபைக் கூட்டம் மே 10-ம் தேதி வரை நடக்கும். இந்த சட்டசபைக் கூட்டத்தில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தொடங்கி ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடக்கும். தமிழ்நாடு சட்டசபை இந்த நிலையில் தற்போது நீட் விலக்கு, சொத்துவரி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்னை, … Read more

நீண்ட நேரமாகியும் திரும்பாத மனைவி… தேயிலைத் தோட்டத்தில் குடல் சரிந்துக் கிடந்த சோகம்!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள நஞ்சநாடு, அம்மனட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் மனைவி ஜெயலட்சுமி(57). இவர்களுக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டம் நரிக்குழி எனும் பகுதியில் உள்ளது. இவர்கள் இருவரும் தேயிலைத் தோட்டத்தில் பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். மோட்டாரை இயக்க வைத்திருக்கும் டீசலை எடுத்துவருமாறு கணவர் நடராஜன், ஜெயலட்சுமியிடம் கூறியுள்ளார். டீசலை எடுத்துவருவதற்காகச் சென்ற ஜெயலட்சுமி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார். போன் அழைப்பை ஏற்காததால் … Read more

நெல்லை: கல்லூரி மாணவர்களுக்கிடையே பயங்கர மோதல்! – வைரலாகப் பரவும் வீடியோ

நெல்லை-கன்னியாகுமரி மாவட்டங்களின் எல்லையில் உள்ள கிராமம், லெவிஞ்சிபுரம். அந்த கிராமத்தில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.வெளியூர்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் அந்த கல்லூரியில் தங்கியிருந்து படித்து வருகிறார்கள். பொறியியல் கல்லூரி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு, நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இடையே ஏற்கெனவே சில மாதங்களாகவே மோதல் இருந்துள்ளது. இரு தரப்பு மாணவர்களையும் ஆசிரியர்களும், கல்லூரி நிர்வாகத்தினரும் அழைத்துப் பேசியதால் அப்போது பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தனித்தனியாகப் பிரிந்து … Read more

“முன்னெப்போதும் இல்லாத சவாலை காங்கிரஸ் சந்திக்கவிருக்கிறது!" – சோனியா காந்தி

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியடைந்ததையடுத்து, காங்கிரஸுக்கு வெளியில் இருந்தும், கட்சிக்குள்ளிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. காங்கிரஸின் இத்தகைய தோல்விக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின. அதையடுத்து, நடத்தப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இது நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அடுத்த தலைவர் யார் என்று கேள்விகள் பரவலாக எழுந்து வருகிறது. இதுபோன்ற அரசியல் … Read more

பீஸ்ட் படத்தைத் தடை செய்ய தமிழ்நாடு முஸ்லீம் லீக் கோரிக்கை… காரணம் என்ன?

பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. அந்தப் படத்தில் தீவிரவாதம் தொடர்பாக காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் குவைத் நாட்டில் திரையிட அந்நாட்டு தணிக்கைத் துறை மறுத்திருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி, இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாக சித்திரிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாவதால் இந்தப் படத்தை தடை செய்ய கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் முஸ்தபா “`பீஸ்ட்’ சிறப்புக் காட்சிகளுக்கு தடைவிதிக்க வேண்டும்”- பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை; என்ன … Read more

சட்டவிரோத பணப் பரிமாற்றம்; TMB வங்கி முன்னாள் தலைவரின் ₹216.40 கோடி சொத்துக்கள் முடக்கம்!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் இயக்குநராக இருந்தவர் எம்.ஜி.எம்.மாறன் என்ற நேசமணி மாறன் முத்து. இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த 2014-ம் ஆண்டு, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் 46,000 பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறையிடம் புகார் அளித்தது. எம்.ஜி.எம்.மாறன் அந்தப் புகாரில், தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மற்றும் மும்பை ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வங்கியும் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இதில், டி.எம்.பி வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் இயக்குநருமான … Read more

Ross Taylor: 17 ஆண்டுகள், 450 போட்டிகள், 18000+ ரன்கள், என்றும் நம்பர் 4; ஓய்வுபெறும் வசீகர புன்னகை!

அந்த செடன் பார்க் மைதானம் முழுவதுமே நெகிழ்ச்சியாலும் பூரிப்பாலும் நிறைந்திருந்தது. சக வீரர்கள், ரசிகர்கள், உற்றார் உறவினர்கள் என அத்தனை பேரின் கண்களிலும் வழியனுப்புதலுக்கே உரிய ஏக்கநீர் சுரந்திருந்தது. ஒவ்வொருவரின் மனமும் எதோ ஒரு பழைய நிகழ்வை நோக்கிய காலப்பயணத்தில் மிதந்துக்கொண்டிருந்தது. இதற்கெல்லாம் காரணமான ராஸ் டெய்லரும் அடக்க முடியாமல் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தார். 17 ஆண்டுகளாக 450 போட்டிகளாக நியூசிலாந்து அணிக்காக விடாமல் பணி செய்திருக்கும் ராஸ் டெய்லர் தனது பயணத்தின் கடைசி நிறுத்தமாக நெதர்லாந்துக்கு எதிரான … Read more