விகடன்
இன்றைய ராசி பலன் | 09/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope | #Rasipalan | #Horoscope #Raasi #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOsv Source link
ஹிஜாப் விவகாரம்: மக்களவையில் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்!
கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அரசுக் கல்லூரி அனுமதி மறுத்த விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று காலை அந்த குறிப்பிட்ட கல்லூரிக்கு ஒரு முஸ்லிம் மாணவி ஹிஜாபுடன் நுழைவதைக் கண்ட 50-க்கும் மேற்பட்ட இந்து மாணவர்கள், அந்தப் பெண்ணை நோக்கி `ஜெய் ஶ்ரீராம்’ என கோஷமிட்டனர். அந்த பெண்ணும் பதிலுக்கு `அல்லாஹு அக்பர்’ எனக் கோஷமிட, அவரை `ஜெய் ஶ்ரீராம்’ என கோஷமிட்டபடி இந்து மாணவர்கள் தொடர்ந்து சென்றனர். பின்னர், … Read more
போலியோ சொட்டு மருந்து முகாம் எப்போது? – மத்திய அரசு தகவல்!
உலகின் பல்வேறு நாடுகளிலும் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதம் நோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த போலியோ வைரஸை அளிக்க முடியாது. ஆனால், செயலிழக்கச் செய்து கட்டுப்படுத்த முடியும். இந்த வைரஸ் பரவலைத் தடுக்க போலியோ சொட்டு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் போலியோவை ஒழிக்க ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, வருடம் இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த 2014-ம் … Read more
போதையில் தகராறு செய்த கணவன்; கொன்று புதைத்த மனைவி – 11 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கியது எப்படி?!
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஜமீன் குளத்தூர் அடுத்த குஜராம்பட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் மனைவி ஜெயந்தி. கடந்த 2011-ம் ஆண்டு குணசேகரனைக் காணாததால் அவர் தங்கை லட்சுமி, அவரின் அண்ணியான ஜெயந்தியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ஜெயந்தி, அவர் கேரளாவிற்கு வேலைக்குச் சென்றிருப்பதாகக் சொல்லியிருக்கிறார். ஆனால், பத்து ஆண்டுகளாகியும் இதுவரையிலும் தன் அண்ணன் வரவில்லையே என்று லட்சுமி கேட்க மழுப்பலாக பதில் சொல்லியிருக்கிறார். அரியலூர் இதனால் சந்தேகம் அடைந்த லட்சுமி இரண்டு நாள்களுக்கு முன்பு ஆண்டிமடம் காவல் … Read more
`இந்தியாவில் சிலீப்பர் செல்கள்?!’ – தாவூத் இப்ராகிம், சோட்டா சகீல் மீது புதிய வழக்கு பதிந்த என்.ஐ.ஏ
மும்பையில் தொடர் குண்டு வெடிப்புக்களை நிகழ்த்திய தாவூத் இப்ராகிமும், அவனின் கூட்டாளிகளும் பாகிஸ்தானில் மறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தாவூத் தங்களது நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. மத்திய அரசு தாவூத் இப்ராகிமை பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுகொண்டே இருக்கிறது. தற்போது தாவூத் இப்ராகிம், அவனின் கூட்டாளிகள் சோட்டா சகீல் உட்பட 5 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி புதிதாக வழக்கு பதிவு செய்திருக்கிறது. தாவூத் கும்பல் இந்தியாவில் … Read more
நீட் விலக்கு மசோதா: `நீட் என்பது தேர்வு இல்லை… பலிபீடம்!’ – முதல்வர் ஸ்டாலின் உரையின் ஹைலைட்ஸ்
மு.க.ஸ்டாலின் “சில மாணவர்களைக் கல்லறைக்கும், சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா?” ஸ்டாலின் ஆவேசம் “ஒரு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி , அதை ஒரு ஆளுநரால் நிறுத்தி வைக்க முடியுமென்றால் மாநிலங்களின் கதி என்ன?” பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் “நீட் தேர்வு என்பது பணக்கார நீதியைப் பேசுகிறது. அரசியல் அமைப்பு என்பதே சட்டத்தின் நீதியைப் பேசுகிறது.” சட்டசபையில் முதலவர் மு.க ஸ்டாலின் “நீட் தேர்வு அரசியலமைப்பு சட்டத்தால் உருவானது இல்லை. நீட் தேர்வு தேவை என்பது … Read more
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: நம்பிக்கை நட்சத்திரங்களாகக் களம் காணும் திருநங்கைகள்!
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற பிப்ரவரி 19-ம் தேதி வாக்கு பதிவு நடைபெறவிருக்கிறது. அதன்படி, மொத்தமுள்ள 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த பிப்ரவரி 4-ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று (07/02/2022) பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் இந்த தேர்தலில் மிகுந்த எதிர்பார்ப்புடன் பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணியுடனும், தனித்தும் … Read more
முறிந்த சிறகுகள் #WorldCinema #MyVikatan
எகிப்திய திரைப்படமான ‘ஃபெதர்ஸ்’ வறுமைக்குள் பிழைத்துக் கிடத்தல் என்கிற உயிர்வாழ்வு பற்றிய கதை. ’அபத்தம்’, ’காமெடி’ ஆகிய வார்த்தைகள் மனித நிலையை நையாண்டி செய்யும் ஒரு வகை திரைப்படங்களை விமர்சிக்க அடிக்கடி பயன்படுத்தப்படுவது வழக்கம். எகிப்திய திரைக்கலைஞரான ஓமர் எல் ஜோஹேரியின் இந்தப் படைப்பு அதுபோன்ற வார்த்தைகளைப் பொய்யாக்கி, ஒரு சினிமா பற்றிய அனுமானங்களைத் தகர்த்துவிட்டது. ஆண்களால் நடத்தப்படும் உலகில் ஓர் ஏழைப் பெண் திடீரென்று அதீத துக்கத்துக்கு ஆளாவதைப் பற்றிய ஒரு துரதிர்ஷ்டவசமான படம் இது. … Read more