தேனி: கண்ணகி கோயில் செல்ல அனுமதி நேரம் குறைப்பு; கேரள அரசு கெடுபிடிகளைத் தளர்த்த பக்தர்கள் கோரிக்கை!

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5,000 அடி உயரத்தில் தமிழக – கேரள வன எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. 2,000 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயில் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பௌர்ணமியன்று சித்திரை முழு நிலவு விழா கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கண்ணகி கோயில் திருவிழாவிற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் தற்போது … Read more

உயர் சாதி என்ற சொல்லை இப்படியும் சொல்லலாம்! – வாசகர் வாய்ஸ்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், [email protected]க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! மனித குலத்துக்கு சாதி தேவையில்லை, அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டியது. எனினும், உடனடியாக அது இயலாது. மேலும், இன்றைய அதி நவீன காலத்திலும் சாதியம் நிலவுவது மட்டுமன்றி, சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்பு இருந்த நிலையை விட அதிகமாக ஆகியிருப்பதும் வேதனைக்குரியது. இது தொடர்பாக சிந்திக்கவும், பேசவும் … Read more

நாமக்கல்: முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது அதிமுக பெண் கவுன்சிலர்கள் கொலை மிரட்டல் புகார்!

நாமக்கல், கொமாரபாளையம் காவல் நிலையத்தில் நேற்றைய தினம் 3 அதிமுக கவுன்சிலர்கள் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் தங்கமணி மீது கொலை மிரட்டல் புகார் அளித்திருக்கின்றனர். இது தொடர்பாக அவர்களிடம் பேசினோம். “நாங்கள் அ.தி.மு.க-வில் நீண்டகாலமாக உறுப்பினர்களாக இருந்து வந்தோம். தற்போது நடைபெற்று முடிந்த ஊராட்சித் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு 16-வது வார்டில் பூங்கோதை, 43- வது வார்டில் ரேகா, 13-வது வார்டு நந்தினி ஆகிய மூவரும் வெற்றி பெற்றிருந்தோம். பின்னர் நகராட்சித் தலைவர் தேர்தலில் கொமாராப்பாளையம் … Read more

துபாய்: `நோ’ சொன்ன சித்ரஞ்சன் சாலை… `ரிட்டர்ன்’ ஆன துரைமுருகன்!

அரசுமுறைப் பயணமாக மார்ச் 24-ம் தேதி துபாய் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், மார்ச் 29-ம் தேதி சென்னை திரும்பினார். அவருடன் அவரின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்டக் குடும்பத்தினரும் துபாய் செல்ல, ஒரு சில அதிகாரிகளும் செல்ல, அமைச்சரவையிலிருந்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மட்டுமே சென்றிருந்தார். மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் அப்போதே தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனும் துபாய் செல்லலாம் என்றிருந்தார். ஆனால், ’தொடர்பில்லாதத் துறை அமைச்சரைக் கூடவே கூட்டிச்செல்வது சரியாக இருக்காது, … Read more

ஊசிப்புட்டான் | “நேரம் வரும், அப்ப இவனுக்கு இருட்டடிய போட்டுக்கலாம்" | அத்தியாயம் – 28

ரவி அங்கே வந்தபொழுது அந்த மனிதனின் சடலத்தை அங்கிருந்து அகற்றியிருந்தார்கள். மதிற்சுவற்றிலும் அதை ஒட்டி மழைநீர் வடிந்து செல்வதற்காகப் போடப்பட்டிருந்த சிமிண்ட் சறுக்கலிலும் ரத்தத்திட்டுகள் காய்ந்து உறைந்து கறுப்பாய் தெரிந்தது. அந்தச் சிமிண்ட் சறுக்கத்தில் வழுகிவிடாதபடிக்கு மிகவும் கவனமாகக் காலடி எடுத்து வைத்து இறங்கினான். அவன் நினைத்ததைப் போலல்லாமல் அந்தச் சிமிண்ட் சறுக்கல் மழை நீரின் உதவியால் மணல் துகள்கள் விலகிச் சற்று சொறசொறப்பாகவே இருந்தது. அந்த மனிதனின் உடல் விழுந்து கிடந்ததாய் சொல்லப்பட்ட இடத்தின் அருகில் … Read more

மேட்ரிமோனியல் விளம்பரத்தில் கரண் ஜோகர்; கிளம்பிய எதிர்ப்புகள்; பின்னணி இதுதான்!

பாலிவுட் சினிமாவின் ஆல்-ரவுண்டர் கரண் ஜோகரின் பெயர் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு சர்ச்சையில் அடிபடுவது வழக்கம். இந்த முறை நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு உள்ளாகக் காரணம் அவர் தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்த ஒரு விளம்பரம். மேட்ரிமோனியல் வலைத்தளத்துக்கான விளம்பரம் அது. சாதாரணமான மேட்ரிமோனியல் தளமாக இல்லாமல், கரண் விளம்பரப்படுத்துவது IIT,IIM போன்ற கல்வி நிறுவனங்களில் பயின்ற முன்னாள் மாணவர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக மேட்ரிமோனியல் வலைதளம். “உண்மையாகவா? இது ஜோக் இல்லையென்றால் ஒரு மோசமான விஷயத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் … Read more

`வட சென்னை முதல் குதிரைவால் வரை'- சமகால சினிமாக்களில் கலையும் எம்.ஜி.ஆரின் பிம்பங்கள்! விரிவான அலசல்

எம்.ஜி.ஆர் சினிமா, அரசியல் இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். ‘நாயகன்’ என்னும் சொல்லுக்கான முழுப்பரிமாணங்களை உடையவர். எம்.ஜி.ஆர் இறந்து பல ஆண்டுகள் ஆனபிறகும் ‘அவர் இறக்கவில்லை’ என்று நம்பிய சிலர் இருக்கத்தான் செய்தார்கள். இப்போதும்கூட எம்.ஜி.ஆர் சமாதியில் காதுவைத்து, அவர் கைக்கடிகாரத்தின் சத்தம் கேட்கிறதா என்று கேட்கும் சடங்கு தொடரத்தான் செய்கிறது. எம்.ஜி.ஆர் பிம்பங்களால் கட்டப்பட்டவர். எம்.ஜி.ஆரைப் பற்றி ஏராளமான கதைகள் உண்டு. அவர் வள்ளலாக இருந்து உதவிய நேர்மறைக் கதைகளில் இருந்து சினிமாவில் அவர் பழிவாங்கிய நடிகர்களின் … Read more

விஜய் 66 அப்டேட்: ராஷ்மிகா, கீர்த்தி சனோன், திஷா பதானி… வம்சி இயக்கும் படத்தின் நாயகி யார்?

விஜய்யின் ரசிகர்கள் குஷியில் திளைக்கிறார்கள். ‘பீஸ்ட்’ டீசர் வெளிவரும் சந்தோஷம் ஒரு புறம், விஜய் 66 படம் துவங்கப்போகிறது என்ற செய்தி இன்னொரு புறம். தமிழில் கார்த்தி நடித்த ‘தோழா’ படத்தை இயக்கிய வம்சி இப்போது ‘விஜய்-66’ படத்தை இயக்குகிறார். இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து இயக்கி வரும் படத்தின் தயாரிப்பாளரான தில்ராஜு, ‘விஜய் 66’ஐயும் தயாரித்து வருகிறார். இயக்குநர் வம்சி, தில் ராஜூ, விஜய் சமீபகாலமாக விஜய் படத்தின் இயக்குநர்கள், ஹீரோயின்கள் விஷயத்தில் கிரியேட்டிவ்வாக … Read more

“கட்சி செலவில் குடும்பத்துடன் சென்றதில் தவறில்லை!" -எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு திமுக பதில்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் சர்வதேச எக்ஸ்போ 2020 நடந்துவருகிறது. 2020-ல் நடக்க வேண்டிய எக்ஸ்போ, அப்போது உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பினால், ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டு, 2021 செப்டம்பர் 30-ம் தேதி தொடங்கப்பட்டது. வரும் மார்ச் 30-ம் தேதியுடன் எக்ஸ்போ முடிவடையும் நேரத்தில், கடந்த 25-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்று, துபாய் எக்ஸ்போவில் உள்ள இந்திய அரங்கினுள், தமிழக அரங்கினைத் திறந்துவைத்தார். தமிழ்நாடு அரங்கைத் திறந்துவைத்த ஸ்டாலின் அதன்பின்னர், துபாய் … Read more

சென்னை: போக்சோ வழக்கில் கைதான போலீஸ் எஸ்.ஐ மகன் – 13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்

சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் `தனக்கு 13 வயதில் ஒரு மகளும் நான்கு வயதில் ஒரு மகனும் உள்ளனர். என்னுடைய கணவர் குடும்பத்தைப் பிரிந்து சென்றுவிட்டார். இந்தநிலையில் தன்னுடைய மகளின் செயல்பாடுகளில் சந்தேகம் உள்ளது. அதனால் அவரை அழைத்து விசாரணை செய்ய வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி கடந்த … Read more