"பன்மொழி அறிவு பல விதங்களில் பலன் தரும்"- ஆனந்த ரங்கம் பிள்ளை வாழ்க்கை தரும் பாடங்கள்!

பாலமாய்த் திகழ்ந்தால் பல விதங்களில் பயன் உண்டு இந்திய மன்னர்கள் மற்றும் பிரெஞ்சு மேலதிகாரிகள் ஆகியோருக்கிடையே தனது மொழிப் புலமையால் ஒரு பாலமாக விளங்கினார். இதன் காரணமாக செங்கல்பட்டுக் கோட்டைக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார். முசாபர்சங் என்ற மன்னர் இவருக்கு ஆயிரக்கணக்கில் குதிரைகளை வழங்கினாராம். சிறப்பான குறிப்பேடுகள் வரலாறுப் பக்கங்களில் மதிப்பை கூட்டும் தினசரி நாட்டு நடப்புகளை எழுதி வைக்கும் பழக்கம் கொண்டவர் ஆனந்தரங்கம் பிள்ளை. ஒன்றிரண்டல்ல, சுமார் 25 ஆண்டுகளுக்கு இப்படி எழுதி இருக்கிறார். இதன் காரணமாக … Read more

King Richard: வீனஸ் மற்றும் செரினா வில்லியம்ஸ் உருவான கதை; ஆஸ்கர் நாயகன் வில் ஸ்மித் சாதித்த கதை!

ஸ்போர்ட்ஸ் பயோபிக் திரைப்படங்கள் என்றாலே பெரும்பாலும் அந்தந்த நாயகர்களின் வெற்றி பெற்ற சம்பவங்களின் தொகுப்புகள் தான் திரைப்படங்களாக விரியும். அப்படி இல்லையெனில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நாயகர்களின் பயிற்சியாளர் குறித்த பயோபிக்காக விரியும். ஆனால், இரண்டு ஜாம்பவான்களின் தந்தை ஒருவர் அவர்களை இந்த நிலைக்குக் கொண்டு வர என்னென்ன செய்தார் என்கிற பயோபிக் என்பதுதான் ‘கிங் ரிச்சர்ட்’ மீதான ஆர்வம் பலருக்கும் ஏற்பட முக்கியக் காரணம். இன்னொன்று இதன் நாயகன் வில் ஸ்மித்! Will Smith “டென்னிஸ் நீங்க … Read more

“சர்ச்சைக்குரிய கவுன்சிலர்களை பதவி நீக்கம் செய்யுமா திமுக அரசு?” – எடப்பாடி பழனிசாமி

சென்னை, பல்லாவரம் பகுதியில் கவுன்சிலராக இருப்பவர் சித்ரா தேவி. இவர் கணவர் முரளியின் தம்பி தினேஷ் என்பவர் சங்கர் நகர் பகுதிகளில் உள்ள கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டியிருக்கிறார். அவருக்குப் பணம் கொடுக்க மறுத்த கடைகளை அடித்துச் சேதப்படுத்தியிருக்கிறார். மேலும் திமுக கவுன்சிலரின் கணவர், வீடு கட்டும் உரிமையாளரை கூப்பிட்டு மிரட்டும் வீடியோவையும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக தனது ட்விட்டரில், … Read more

“ரஷ்யாவுடன் ராணுவ உறவு; மேற்குலக நாடுகளுடனும் நட்புறவு” – இந்தியாவின் நிலை குறித்து சசி தரூர்

காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ‘உக்ரைன் அன்டோல்ட்’ எனப்படும் மூன்று நாள் புகைப்பட கண்காட்சியை டெல்லியில் நேற்று(செவ்வாய்) தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியானது, ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கு இடையே போர் தொடக்குவதற்கு முன்பு உக்ரைன் எப்படி இருந்தது என்பதன் பிரதிபலிப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் உரையாடலின் போது உக்ரைன் விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சசி தரூர் பதிலளித்தார். அப்போது பேசிய சசி தரூர், “ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் இந்தியா தனது சொந்த நிலைப்பாட்டில் தீவிரமாக இருந்ததால், … Read more

`மூப்பிலா தமிழே' பாடலில் ஜாவா பைக்; ஆனந்த் மஹிந்திரா தமிழில் ட்வீட்; மகிழ்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடலாசிரியர் தாமரை வரிகளில் கடந்த 25-ம் தேதி வெளியானது ‘மூப்பில்லா தமிழே தாயே’ மியூசிக் சிங்கிள் ஆல்பம். தமிழின் பெருமைகளையும் தொன்மையையும் பேசும் இந்தப் பாடல் காணொலியாகவும் வெளியாகியுள்ளது. இதன் இசை மற்றும் வரிகளுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. மஹிந்திரா குழுமங்களின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுவும் தமிழில். ஆனந்த மஹிந்திராவின் ட்வீட்டில், “இதில் இடம்பெற்றிருக்கும் ஜாவா பைக் என்று சொல்லப்பட்டதால் இதை முதலில் பார்த்தேன். இப்போது என்னால் பார்க்காமல் இருக்க … Read more

சென்னை: பறிபோன வேலை; சினிமா பார்த்து செயின் பறிப்பு… பட்டதாரி இளைஞர் சிக்கியது எப்படி?

சென்னை பெசன்ட் நகர், 22-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரின் மனைவி கிருத்திகா. இவர் கடந்த 25-ம் தேதி 18-வது குறுக்கு தெருவில் நடந்துச் சென்றபோது பைக்கில் வந்த மர்ம நபர், கிருத்திகா அணிந்திருந்த நான்கரை சவரன் தாலிச் செயினைப் பறித்துக் கெண்டு தப்பி ஓடிவிட்டார். அவனைப் பிடிக்க கிருத்திகா பைக்கை விரட்டினார். ஆனால் அந்த நபர் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டார். அப்போது உடனடியாக அந்த நபர் வந்த பைக்கின் பதிவு நம்பரை கிருத்திகா … Read more

விஜய் சேதுபதியுடன் களமிறங்கும் விக்ரம் என்ன படம்; இயக்குநர் யார் தெரியுமா?

படத்திற்கு படம் கெட்டப்பை மாற்றி நடிக்கும் விக்ரம், ஒரு படம் முடித்த பின்பே, அடுத்த படத்திற்கான தேதிகளை ஒதுக்கி வந்தார். தற்போது, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, ‘டிமான்டி காலனி’ அஜய் ஞானமுத்துவின் ‘கோப்ரா’ படங்களில் நடித்து முடித்துவிட்டார் விக்ரம். இதற்கிடையே சில வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்ட கௌதம்மேனனின் ‘துருவநட்சத்திரம்’ திடீரென வேகம் எடுத்தது. காரைக்குடியில் நடந்த அதன் பேட்ச் ஒர்க் படப்பிடிப்பில் பங்கேற்ற விக்ரம், அதன் டப்பிங்கையும் முடித்துக் கொடுத்துவிட்டார். ‘பொன்னியின் செல்வன்’ … Read more

7 பேர் விடுதலை விவகாரம்: தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரில் ஒருவரான நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த மனுவில், “இந்திய அரசியல் சாசனம் 161-வது பிரிவின் கீழ் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளது. கடந்த அதிமுக அமைச்சரவையில் ஏழுபேர் விடுதலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், … Read more

"நீங்க உங்க திறமையால உயர்ந்தீங்க!"- ஷங்கரை ஆசீர்வதித்த கே.டி.குஞ்சுமோன்; சந்திப்பின் பின்னணி என்ன?

இயக்குநர் ஷங்கர் தனது மகளின் திருமண வரவேற்புக்கான முதல் அழைப்பிதழைத் தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனிடம் வழங்கி, ஆசி பெற்றிருக்கிறார். இயக்குநர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்று இரு மகள்களும் ஆர்ஜித் என்ற மகனும் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா – ரோஹித் தாமோதரன் திருமணம் கடந்த 27-06-2021 அன்று, ஞாயிற்றுக்கிழமை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்தது. அப்போது கொரோனா சூழலால் மிக நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர். அந்தத் திருமண … Read more

யாரை பார்த்தாலும் முதலில் தொப்பையை பார்த்துவிடுகிறேன்! – என் `தொப்பை’ அழகியல் புராணம்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், [email protected]க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! மனிதர்களுக்கும் தொப்பைக்குமான தொடர்பு குறித்து நான் நிறைய நாட்கள் யோசித்ததுண்டு. தொப்பை இல்லாத நடுத்தர ஆண்களை இப்போதெல்லாம் பார்ப்பது குறிஞ்சி மலர் போல. எனக்கு என்ன ஒரு சின்ன பெருமை என்றால் தொப்பை இல்லாமல் நடுத்தர வயதை கடந்து வந்துவிட்டேன். பெரிதாக உடற்பயிற்சி செய்தது இல்லை, ஆனால் … Read more