உக்ரைன் விவகாரம்: “இந்தியாவின் நிலைப்பாட்டால் மிகுந்த ஏமாற்றம்" – இங்கிலாந்து வருத்தம்

உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி தொடங்கிய போர், முடிவுக்கு வராமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம், “உடனடியாக போரை நிறுத்த வேண்டும்” என உத்தரவிட்டும், ரஷ்யா அதை நிராகரித்து ஏவுகணை தாக்குதலைத் தொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிராகப் பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில், இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதியான முறையில் இருநாடுகளும் தங்கள் பிரச்னையை தீர்க்க … Read more

என் நண்பர் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள்… – தனுஷின் ட்வீட்; பின்னணி இதுதான்!

”என் மகள் நீண்ட வருட இடைவெளிக்கு பின், அதாவது ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு டைரக்‌ஷனில் இறங்கியிருக்கிறார். அவரது ‘பயணி’ என்ற மியூசிக் வீடியோவை வெளியிடுவதில் மகிழ்கிறேன்..” என ட்விட்டரில் பூரித்திருக்கிறார் ரஜினி. தெலுங்கின் டாப் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர், ஷ்ரிஸ்டி வர்மா நடிப்பில் ‘பயணி’ என்ற மியூசிக் சிங்கிளை இயக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதற்கு முன்னர் ‘3’, ‘வை ராஜா வை’ய ஆகிய படங்களையும் ‘சினிமா வீரன்’ என்ற டாக்குமென்ட்ரியையும் இயக்கியிருந்தார். டீமுடன் இப்போது இயக்கியுள்ள … Read more

ஆம் ஆத்மியின் ராஜ்யசபா உறுப்பினர் தேர்வு… முன்னாள் கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங் இடம்பெறுகிறாரா?

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் பஞ்சாப் மாநிலத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸையும் மற்ற மாநிலங்களில் வென்ற பா.ஜ.க-வையும் தோற்கடித்து ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பக்வந்த் மான் முதல்வராக பொறுப்பேற்றார். இதன் வெற்றியின் மூலமாக ஆம் ஆத்மி ராஜ்ய சபா இடங்களை உறுதி செய்திருக்கிறது. பஞ்சாபின் 17 ஆவது முதல்வராக பக்வந்த் மான் பொறுப்பேற்ற பின் அந்தத் தேர்வு பட்டியலில் ஹர்பஜனின் பெயர் அடிப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஜலந்தரில் அமையவிருக்கும் புதிய … Read more

ரூ.13 லட்சம் வாடகை பாக்கி… அலட்சியம் காட்டிய பத்து கடைகளுக்கு சீல்! – அறநிலையத்துறை அதிரடி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மேலசத்திரம் விநாயகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில், பத்துக்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. இந்தக் கடைகளுக்கு, மாத வாடகையாக ரூ.1,300 வசூலிக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு முதல் கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தாமல் இருந்து வந்திருக்கின்றனர். பலமுறை அறநிலையத்துறை சார்பில் வாடகை பாக்கி செலுத்தக் கோரி அறிவுறுத்தியும் கடை உரிமையாளர்கள் அலட்சியமாக இருந்து வந்திருக்கின்றனர். `இந்து அறநிலைய துறை நிர்வாகத்தை மத்திய அரசிடம் … Read more

4 வருடங்களுக்குப் பிறகு… பிள்ளைகளுடன் சந்திப்பு! – பதவியேற்பு விழாவில் நெகிழ்ந்த பக்வந்த் மான்

நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வென்று முதல்முறையாக பஞ்சாப்பில் ஆட்சியமைத்திருக்கிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராகப் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், இரண்டுமுறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவருமான பக்வந்த் மான் முன்னிறுத்தப்பட்டார். இவர் தனது அரசியல் பிரவேசத்திற்கு முன்னர் நகைச்சுவை நடிகராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில், ஆம் ஆத்மி பஞ்சாப்பில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, வழக்கமாகப் பின்பற்றப்படும் முதல்வர் பதவியேற்பு … Read more

சர்தார் அப்டேட்: வெளியான பிசினஸ் தகவல்; ஓடிடி -யில் வெளியயாகிறதா? பின்னணி என்ன?

கார்த்தியின் ‘சர்தார்’ இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்குவதற்கு முன்னரே, அல்லு அர்ஜூனின் ஆஹா (தமிழ்) ஒடிடி தளம் படத்தை 20 கோடிக்கு வாங்கியிருக்கிறது. ”சத்தமே இல்லாமல் பிசினஸில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளோம். தியேட்டருக்கு வருவதற்கு முன்னரே 20 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது ஒரு ரெக்கார்ட்.” என ‘2டி’யின் இணைதயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரபாண்டியன் ட்விட்டியிருக்கிறார். ‘சர்தார்’ படத்தை கார்த்தியின் ‘தேவ்’ படத்தை தயாரித்த லட்சுமணன் தயாரித்து வருகிறார். இவர் கார்த்தியின் நெருங்கிய நண்பராவார். ‘இரும்புத்திரை’ மித்ரன், படத்தை இயக்கி … Read more

`ஆங்ரி பேர்டு' எனச் சொல்வதே தப்புதான்; ஏன் தெரியுமா? – பறவை சூழ் உலகு – 3

மனிதன் கொக்குகளுடன் இணைந்து பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறான் என்பதை கடந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு சான்றாக சில சொலவடைகளையும் கொடுத்திருந்தேன். அதற்கு மேலம் வலு சேர்க்கும் விதமாக கொக்கைப் பற்றி திருவள்ளுவரும் பாடியுள்ளார், கொக்கின் குணத்தை கீழ்கண்ட குறளில் எடுத்துக் கூறியுள்ளார். ‘கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து.’ பொறுத்திருக்கும் காலத்தில் கொக்கு போல் அமைதியாக இருக்க வேண்டும்; காலம் வாய்த்தபோது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும். கொக்கானது … Read more

கார்த்தி – ஜெயம் ரவி சந்திப்பு; அண்டர் வாட்டர் ஷுட்; 'பொன்னியின் செல்வன்' அப்டேட்!

நடிகர்கள் கார்த்தியும், ஜெயம் ரவியும் ரெஸ்டாரன்ட் ஒன்றில் சந்தித்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. கார்த்தியும் ஜெயம் ரவியும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார்கள். வந்தியத் தேவனாக கார்த்தியும், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. பெரும்பாலான காட்சிக்களுக்கான படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்தது நினைவிருக்கலாம். ஆனாலும் படத்தின் திருப்புமுனை காட்சிகள் படாமாக்கப்படாமல் இருந்து வந்தன. அதாவது கடலுக்கடியில் படமாக்கப்பட வேண்டியது, கோவிட் சூழலினால் எடுக்கமுடியாமல் இருந்திருக்கிறது. ஐஸ்வர்யா ராய் இப்போது அண்டர் … Read more

`இந்தப் பாடலைப் பாடியவர் உங்கள் விஜய்' -விஜய் குரலில் ஹிட்டடித்த பாடல்கள்; சின்ன throwback!

விஜய் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ பாடலுக்குக் காத்திருக்கும் இந்த நேரத்தில் விஜய்யின் வாய்ஸில் ஹிட்டடித்த பாடல்களை ஒரு throwback பார்க்கலாமா! ரசிகன் ‘ரசிகன்’ படத்தில் ‘பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி’ பாடல் தான் விஜய் முதன்முதலாக பாடியது.1994 இல் வெளியான இந்தப் படத்தின் இசையமைப்பாளர் தேவா. இயக்கம் எஸ்.ஏ.சந்திரசேகர். தேவா 1995 இல் ‘தேவா’ படத்தில் மூன்று பாடல்களை விஜய் பாடியிருக்கிறார். இதற்கும் இசை தேவா தான். ‘அய்யயோ அலமேலு’ பாட்டில் விஜயின் துள்ளல் குரலைக் கேட்க … Read more

அனுமதியின்றி முல்லைப் பெரியாறு சென்ற கேரள அதிகாரிகள் மீது வழக்கு; நடந்தது என்ன?

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அணைக்கு தினமும் பாதுகாப்பு, பராமரிப்பு தொடர்பான அலுவல் பணிக்காக தமிழக பொதுப்பணித்துறை மற்றும் கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் சென்று வருகின்றனர். இவர்கள் தேக்கடியிலிருந்து படகு மூலமாகவோ, வள்ளக்கடவிலிருந்து வனப்பகுதி வழியாக வாகனத்திலோ சென்று வருவது வழக்கம். அவ்வாறு அணைக்குச் செல்பவர்களின் விவரங்கள் பொதுப்பணித் துறையின் வருகைப் பதிவேட்டில் பதியப்பட வேண்டும். மேலும் அந்தப் பதிவேட்டில் யார், எதற்காக அணைக்கு … Read more