திருமணம் மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த தந்தை? – பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மனைவி – மகள்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.காவனூரைச் சேர்ந்தவர் ரவி. லாரி டிரைவராகப் பணியாற்றி வந்தார். இவர் மனைவி பாக்கியம், மகள் பவித்ரா. ரவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உச்சிப்புளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு தன் மகள் பவித்ராவை திருமணம் செய்து கொடுத்துள்ளார். கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக பவித்ரா, அவரைப் பிரிந்து கடந்த ஒரு வருடமாக தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அப்போது இடையர் வலசை பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவருடன் பவித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. … Read more

"இந்த உறவையும்,அன்பையும் எந்த அரசியலாலும் பிரிக்க முடியாது!" இயக்குநர் அமீர் பெருமிதம்

ஜெயம்ரவி நடித்த ‘ஆதிபகவன்’ படத்திற்குப் பிறகு, தற்போது ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ஆமீர். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு டைரக்‌ஷன் பக்கம் வந்திருக்கிறார். இப்படத்திற்கு வெற்றிமாறன், தங்கம் இருவரும் கதை எழுதுகின்றனர். சூரி, ஆர்யாவின் தம்பி சத்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஆனால் விஷயம் இதுவல்ல. தற்போது, ஆன்மிக பயணமாய் மெக்கா சென்றுள்ளார் அமீர். ”தான் என்கிற கர்வம் குறைத்து நான் என்கிற பெருமை மறந்து … Read more

திரைக்கதை எழுத மக்களிடம் செல்லுங்கள்! #MyVikatan

ஸ்டார்பக்ஸ் காப்பிக்கடை இல்லை. கருவாடு சுமந்த கட்டைப்பை இல்லை. பயணிகள் வருகை இல்லை. அட…விமானங்கள் கூட வருவது இல்லை. இருந்தாலும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கட்டுப்பாட்டை அறையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். பணியாளர் அடிக்கடி தரையைப் பெருக்கி துடைத்து பளிங்கு போல் வைத்திருக்கிறார். ஸ்டெப்னேகெர்ட் எனும் விமானநிலையம் இன்றளவும் விமானங்களின் வருகைக்காக காத்திருக்கிறது. 13வது பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழாவில் ஐந்தாம் நாள் திரையிடலில் ‘ஐங்குறுநூறு’ போல் காட்சியளித்தது ‘சுட் த விண்ட் டிராப்’ [Should the Wind Drop].ஸ்டெப்னேகெர்ட் … Read more

வேளாண் பட்ஜெட் கருத்துக்கேட்புக் கூட்டம்; விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

தமிழக அரசின் வேளாண் துறை பட்ஜெட் தொடர்பான கருத்துக் கேட்புக்கூட்டம் சென்னை எழிலகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்தினை முன்மொழிந்து வருகின்றனர். அப்போது பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு முன்னதாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள விவசாய பிரதிநிதிகளுடன் காணொலி வாயிலாகவும், நேரடியாகவும் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டங்களில் விவசாயிகள் சார்பில் வைக்கப்பட்ட … Read more

இறுதிக்காட்சியில் சுவையான திருப்பம் | உலக சினிமா #MyVikatan

13வது பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழாவில் நிறைவு நாள் அன்று நிறைவான திரைப்படமாக காட்சியளித்தது ‘அவுட் ஆஃப் சிங்’. இயக்குநர் க்வாங்க்வெஸ் கிமினெஸ் திரைப்பட உருவாக்க கலையில் முக்கியமான ஒலிப்பதிவுக்கலையை களமாக வைத்து அற்புதமாக திரைக்கதையை வடிவமைத்துள்ளார். ‘சி’ என அழைக்கப்படும் பெண் ஒலி வடிவமைப்பாளர் இரவு பகலாக ஒலிப்பதிவு கூடத்திலேயே பணியாற்றும் தீவிரவாதி. அவரது அண்மை வேலைகள் குறைபாடுகள் நிறைந்து காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுகிறது. சி இந்தக்குறைப்பாட்டுக்கான காரணத்தை கண்டு பிடிக்க சுய ஆய்வு … Read more

Doctor Vikatan: சருமத்தில் சொறி, அரிப்பு, தோல் உரிதல்; சரிசெய்வது எப்படி?

“எனக்குப் பல வருடங்களாக எக்ஸிமா எனும் சரும பாதிப்பு இருக்கிறது. சருமத்தில் சொறிசொறியாக இருக்கிறது. தோல் உரிகிறது. சிகிச்சை எடுத்தும் முற்றிலும் சரியாகவில்லை. இதை முழுமையாக குணப்படுத்த முடியுமா?” – முருகன் (இணையத்திலிருந்து) செல்வி ராஜேந்திரன் பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன். “அரிப்புடன் கூடிய தோல் அழற்சியையே எக்ஸிமா என்கிறோம். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு சருமப்பகுதிகள் வீங்கும். அரிக்கும். சிவந்தும் தடித்தும் போகும். பிறகு சொறியாக மாறும். கடைசியாக தோல் உரியத் … Read more

சார்லேட்டன் | உலக சினிமா #MyVikatan

‘சார்லேட்டன்’ என்றால் தன்னிடம் இல்லாத திறமையை இருப்பதாக கூறிக்கொள்ளும் போலிகளை குறிப்பிடுவதாகும். 13வது பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழாவில் ஆறாம் நாள் திரையிடலில் வாய்த்த அறுசுவை திரைவிருந்து ‘சார்லேட்டன்’. 2020ல் செக் குடியரசு நாட்டு தயாரிப்பில் உருவான ‘சார்லேட்டன்’ திரைப்படத்தை இயக்கிய பெண் இயக்குநர் அக்னிஷ்கா ஹொலந்த். போலந்து நாட்டில் பிறந்து வளர்ந்த இவர் போலந்து திரைமேதைகள் ஜனூசி,அந்த்ரே வாய்தா போன்ற திரைமேதைகளிடம் உதவி இயக்குநராக பணி புரிந்து திரைமொழி கற்றவர். தனது ‘யூரோப்பா யூரோபா’ படத்தின் … Read more

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்க, நாங்க ரெடி! எங்களை வாங்க வைக்க நீங்க ரெடியா?

ஆட்டோமொபைல் துறையில் இப்போது HDK என்பதுதான் டாக் ஆஃப் தி ஏரியா. இது ஏதோ புது எலெக்ட்ரிக் பைக்கோ, காரோ என்று நினைக்க வேண்டாம். Hosur, Dharmapuri, Krishnagiri – இவற்றின் சுருக்கம்தான் இந்த HDK. எலெக்ட்ரிக் ஆட்டோமொபைல் சந்தையில் இந்த மூன்றும்தான் இப்போதைக்கு முக்கிய மும்மூர்த்திகள். ஆம், ஓலா முதல் சிம்பிள் எனெர்ஜி, ஏத்தர் எனெர்ஜி, கிரீவ்ஸ் ஆம்பியர், டிவிஎஸ் என்று ஏகப்பட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள், தொழிற்சாலையை இந்த HDK–யைச் சுற்றி அமைத்துத்தான், தங்கள் எலெக்ட்ரிக் … Read more

சொல்ல நினைப்பது… #MyVikatan

மனதில் நினைப்பதை வெளியில் சொல்லாமல், மனதுக்குள்ளேயே ஒளித்து வைத்து விடுவதால் வாழ்க்கை பறிபோன கதைகளும் உண்டு;வாழ்வில் தப்பித்த கதைகளும் உண்டு;தடம் மாறிய கதைகளும் உண்டு; சந்தோஷங்கள் நிரம்பிய கதைகளும் உண்டு. உள்ளத்தில் வடித்தவனைக் கைப் பிடிக்கும் பாக்கியம் பெரும்பாலான பெண்களுக்குக் கிடைப்பதில்லை, அதுபோலவே, மன மேடையில் மகாராணியாக்கி மகுடம் சூட்டி, உழைப்பிலும், உறக்கத்திலும் அந்த முகத்தையே இதயத்தில் எழுதி, அழகு பார்க்கும் ஆண்கள் பெரும்பாலானோரின் வாழ்வில், அது கனவாகவே போய் விடுவதுதான் வேதனை. இலவு காத்த கிளியாக … Read more