விகடன்
இன்றைய ராசி பலன் | 11/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology Sakthi Vikatan
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope | #Rasipalan | #Horoscope #Raasi #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs 12 ராசிகளுக்கான ராகு – கேது புத்தாண்டு பலன்கள் … Read more
BJP வெற்றி பெற்ற ரகசியம்! – ShareChat-ல் Saran-cibi
2024-ம் ஆண்டு நடக்கப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு டிரைலராகப் பார்க்கப்பட்டதுதான் இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள். உ.பி-யில் பா.ஜ.க மீண்டும் வெற்றி பெறுமா? கோவா & மணிப்பூரில் இந்தமுறையாவது காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா? பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு திடீரென இவ்வளவு வளர்ச்சி வந்தது எப்படி? உத்தரகாண்டில் முந்துவது யார்? -போன்ற பல்வேறு கேள்விகளுக்குமான விடை இன்று தெரிந்துவிட்டது. 5 state election results இந்த முடிவுகளின் தரவுகள் அடிப்படையில் ‘The Imperfect Show’ டீமை … Read more
“உக்ரைன் சரணடையாது, ஆனால்…!" – உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்
கடந்த மாதம் 24-ம் தேதி ரஷ்ய அதிபர் புதின் உத்தரவின்பேரில் உக்ரைனில் ரஷ்யப் படையினர் தொடங்கிய போர் 15-வது நாளாக தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தாலும், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வராமலே இருக்கிறது. போர் நிறுத்துவது தொடர்பாக பெலாரஸில் மூன்று முறை உக்ரைனும், ரஷ்யாவும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் இரு தரப்பிலிருந்து சுமுகமான முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை. இந்த நிலையில், நான்காவது … Read more
திருச்சி குழுமாயி அம்மன் திருவிழா: பலி கொடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆடுகள்; பரவசமடைந்த பக்தர்கள்!
திருச்சி உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் ஆறுகண் பாலம் அருகே அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற குழுமாயி அம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் திருவிழா மிகவும் விஷேஷம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 27-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. மார்ச் 7-ம் தேதி இரவு மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 8-ம் தேதி இரவு காளியாவட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அம்மனை கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக புத்தூர் மந்தைக்கு … Read more
புனே: வங்கி அதிகாரி போல் பேசி அரசு ஊழியரிடம் 4.9 லட்சம் கொள்ளை! – எச்சரிக்கும் காவல்துறை
புனேவில் 50 வயதான அரசு ஊழியர் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து ஏறத்தாழ 5 லட்சம் முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புனே மாநிலத்தின் போசாரி காவல் ஆய்வாளர் ஜிதேத்ரா பாட்டீஸ் கூறியதாவது, “மார்ச் 5-ம் தேதி புனே போசாரியில் பணிபுரியும் 50 வயதான அரசு ஊழியர் ஒருவருக்கு செல்போனில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றிலிருந்து அழைப்பதாக கூறி பேசி இருக்கிறார். உங்களின் வங்கிக் கணக்கு பான் எண்ணுடன் இணைக்கவில்லை. எனவே உங்களின் எண்ணுக்கு ஒரு ஓடிபி எண் வரும் … Read more
"தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு!"- விளக்கும் ஆர்.கே.செல்வமணி
தமிழ்த் திரைப்படத்தின் 23 சங்கத்தினரின் ஊதிய உயர்வு மற்றும் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று கையெழுத்தானது. தயாரிப்பாளர் முரளி ராமசாமி, டி.சிவா, தனஞ்செயன், ராதாரவி, ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், சுரேஷ்காமாட்சி உட்பட பலரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதுகுறித்து தமிழ்த் திரைப்பட நிர்வாகிகள் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர். அதில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது… “தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான, தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணிகளுக்கான புரிந்துணர்வு … Read more
`எதற்கும் துணிந்தவன்' படத்தை எதிர்த்த நான்கு பேர்; திரையரங்கு முன் ஆர்ப்பாட்டம்!
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னிய சமுதாய மக்களை தவறாக சித்தரித்து காட்சிகள் வைக்கப்பட்டிருந்ததாக அந்தப் படம் வெளியான நாள் முதல் வன்னியர் சமுதாயத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது இதற்கு நடிகர் சூர்யா பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வன்னிய சமுதாய மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், தற்போது வரை எந்தவித மன்னிப்பும் நடிகர் சூர்யா கேட்கவில்லை. எதிர்ப்பு இந்த நிலையில், இன்று முதல் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் … Read more
`முறைகேடு நடைபெற்றிருந்தால் மத்திய அரசு ஏன் நிதி வழங்க வேண்டும்? – PM KISAN திட்டம் குறித்து ஈசன்
மத்திய அரசின் `பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதித்திட்டம்’ மூலம் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் தகுதியற்ற 30 லட்சத்துக்கும் அதிகமானோர் நிதியுதவி பெற்று வருவதாக எழுந்துள்ள புகாரையடுத்து உடனடியாக அதைக் களையும் நடவடிக்கையை மேற்கொள்வதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. “முதலில் இதை முறைகேடு என்று சொல்வதே தவறானது. அப்படியே முறைகேடு என்று வைத்துக்கொண்டாலும்கூட அதற்கு பா.ஜ.க அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்” என்கிறார் விவசாய சங்க பிரதிநிதி … Read more