இன்று முதல் ஆசிரியர்கள் சட்டப்படி பணியாற்றினாலும், பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முறையாகவே இடம்பெறும் – கல்வி அமைச்சர்

இன்று (22) முதல் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சட்டப்படி பணியாற்றுவதற்கு நடவடிக்கைக்கு எடுத்திருந்தாலும், பாடசாலைகளில் காலை  7.30 முதல் பிற்பகல் 1.30 வரை கல்வி செயற்பாடுகள் இடம்பெறும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர்..   சட்டப்படி வேலை என்பது, பாடசாலைகளில் காலை 7.30 முதல் 1.30  மணி வரை சரியாக கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்.    சட்டப்படி வேலை செய்வதாயின் அது சிறந்தது. அது … Read more

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் முறையாக டொலர்களை அனுப்பி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்புச்செய்துள்ளனர்..

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வங்கிகள் மூலம் முறையாக டொலர்களை அனுப்பி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்புச்செய்துள்ளனர் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். ஒரு இலட்சம் புலம்பெயர்ந்த தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம் குருநாகல் வெலகெதர விளையாட்டரங்கில் நேற்று (21) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்    நாட்டுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் “2016 இல் 7.2 பில்லியன் டொலர்கள், 2018 … Read more

வெள்ளம் மற்றும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க வேண்டியேற்படும்

• தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க. பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுத்து நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டது போன்றே, வெள்ளம் மற்றும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முடிவுகளையும் எடுக்க வேண்டும் என்றும், அதன் பிரதிபலன்கள் இன்னும் சில வருடங்களில் தெரியும் எனவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.   நாட்டு மக்கள் என்ற வகையில் தமது … Read more

சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதில் இணையுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

மத்திய கிழக்கு நாடுகள் உட்பட இலங்கைத் தொழிலாளர்கள் அனுப்பப்படும் நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு வரவழைக்கும் புதிய வர்த்தக வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் கவனம் செலுத்தினால், அவர்களுக்குத் தேவையான வசதிகளை சுற்றுலா அமைச்சின் ஊடாக வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குருணாகல் எபிடோம் ஹோட்டல் வளாகத்தில் நேற்று (21) இடம்பெற்ற “அபிமன் 2024” நிகழ்வில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.   நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டு … Read more

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புனிதஸ்தலத்தில் சமய நிகழ்வுகளில் சாகல ரத்நாயக்க கலந்து கொண்டார்

வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமம் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதிநாள் எசல மஹா பெரஹரா நேற்று (21) வீதி உலா வந்தது. ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க நேற்று (21) பிற்பகல் கதிர்காமம் ஆலயத்திற்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.   வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம விகாரைக்குச் சென்ற சாகல ரத்நாயக்க முதலில் கிரிவெஹர விகாரை பீடாதிபதி வண. கொபவக்க தம்மிந்த நாயக்க தேரைச் … Read more

அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது

• நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே அரசியல் உருவாக்கப்பட வேண்டும்.   • இந்தப் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு அழைப்பு விடுக்கின்றேன்.   • இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பொருளாதாரம், அரசாங்கம் இல்லாத நாட்டையே நான் பொறுப்பேற்றேன்.   • எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை சரியாக நிறைவேற்றியுள்ளேன்.   • நான் எப்போதும் எனக்காக அன்றி நாட்டுக்காகவே செயற்பட்டேன்.   • இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப இந்தப் பயணத்தை … Read more

கிளிநொச்சியில் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம் தொடங்கி வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்ணகைபுரம் பகுதியில் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம் நேற்று 20) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு விவசாய தொழில் முனைவோர் கிராம பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.   இங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றுகையில் :    இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமமாக கண்ணகிபுரம் கிராமம் … Read more

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 'சிட்டி கெம்பஸ் ஒப் டெக்னோலஜி' வளாகம் தம்புள்ளையில் …

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ‘சிட்டி கெம்பஸ் ஒப் டெக்னோலஜி’ வளாகம் தம்புள்ளையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு உப கிளையாக தம்புள்ளையில் ஆரம்பிக்கப்படவுள்ள ‘சிட்டி கெம்பஸ் ஒப் டெக்னோலஜி’ வளாகத்தின் திறப்பு விழா நிகழ்வு நேற்று (ஜூலை 21) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.   இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜனக பண்டார தென்னகோன் மற்றும் … Read more

டன்சினன் தொடக்கம் நுவரெலியா வரையிலான பிரதான பாதை மக்கள் பாவனைக்காக…

2024 ஆம் ஆண்டின் 1000 கி.மீ வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் டன்சினன் இருந்து பூண்டுலோயா வழியாக நுவரெலியா செல்லும் பிரதான பாதையானது கார்ப்பட் இடப்பட்டு (20) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர்களுடன் இணைந்து மக்கள் பாவனைக்காக இப்பாதை கையளிக்கப்பட்டது.   பல வருட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்டு வந்த 9 … Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு திரும்பியவுடன் அவர்கள் கௌரவமாக வாழக்கூடிய சூழல்

• கடினமான காலங்களில் நாட்டிற்கு அந்நியச் செலாவணியைக் கொண்டுவந்து பங்களிப்புச் செய்தமைக்கு நன்றி – “விகமனிக ஹரசர” ஆரம்ப விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு. புலம்பெயர் தொழிலாளர்கள் தமது சேவைக் காலத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் கௌரவமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.   கடந்த பொருளாதார நெருக்கடியின்போது நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தந்த அவர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இது … Read more