ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை கடும் எதிர்ப்பு!

உலகில் ஏனைய இடங்களைப் போலவே, பயங்கரவாதத்தைக் கையாளும் போது மனித உரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு நியாயமான சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வில் இன்று (மார்ச் 01) உயர்மட்டப் பிரிவு அறிக்கையை வெளியிடும் போதே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மனித உரிமைகளை ஊக்குவித்து, பாதுகாப்பதனை உணர்ந்து கொள்வதற்கான பலதரப்புக் கட்டமைப்பில் இலங்கை … Read more

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவன் பலி

ரஷ்ய படையினர், உக்ரைனின் கார்கிவ் நகரை இலக்கு வைத்து நடத்திய செல் வீச்சு தாக்குதலில் உக்ரைனில் கல்வி கற்று வந்த இந்திய மாணவன் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இராணுவ தாக்குதலில் உக்ரைனில் கல்வி கற்று வந்த வெளியாட்டு மாணவன் உயிரிழந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். உக்ரைனில் பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்த மாணவர்களை அங்கிருந்து அழைத்துச் செல்ல பல நாடுகள் நடவடிக்கை எடுத்திருந்தன. இந்தியாவும் ரஷ்ய இராணுவம் … Read more

ஒரு கிலோ அரிசி இருவருக்கு ஒரு வாரத்திற்கு போதுமாம்? சமல் ராஜபக்ச

ஒரு கிலோ அரிசி ஒரு வாரத்திற்கு இரண்டு பேருக்கு போதுமானது என நீர்ப்பாசன அமை்சசர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஒரு கிலோ அரிசி ஒரு வாரத்திற்கு போதுமானதாக இல்லை என்றால், அது பற்றி அறிவிக்குமாறும், தான் அது தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தற்காலிகமானது எனவும் அதனை தீர்த்துக்கொள்ள முடியும். ஒரு கிலோ அரிசியின் விலை … Read more

ஐந்து லட்சம் பேரை நிர்க்கதிக்குள்ளாக்கிய கோர யுத்தம்

Courtesy: Maalaimalar உக்ரைன் மீது ரஷ்யா 6ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இராணுவ நிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. போர் பீதியால் உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 5 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐநா சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது. போர் தீவிரமடையும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து வெளியேறுவோர், … Read more

இலங்கை முழுவதும் 7.30 மணித்தியால மின்வெட்டு! சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் நாளை ஏழரை மணித்தியாலங்கள்  மின்சாரத்தை துண்டிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி காலை ஐந்து மணி நேரமும் பின்னர் மாலை 2 மணி 30 நிமிடங்களும்  மின்சாரம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் காணப்படும் டொலர் தட்டுப்பாடு மற்றும் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் செயற்படாமை காரணமாக மின்சாரம் தடைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. Source link

சமகால உலக சந்தை தொடர்பில் ரணிலின் ஆரூடம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 115 டொலர்களாக உயரும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கணித்துள்ளார். எரிபொருளின் விலைகள் ஏறக்குறைய இரண்டு பவுண்ட்களால் அதிகரிக்கப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளதாக ரணில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்படும் என கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே ரணில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சமகால அரசாங்கத்தின் … Read more

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவின் போர் – இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நேரடி பாதிப்புகள்

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அது இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் நான்காயிரத்திற்கு மேற்பட்ட உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர். அவர்களின் தங்கள் சுற்றுலா காலத்தை நிறைவு செய்து நாடு திரும்ப முடியாத நிலையில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்நிலையில் ஹோட்டல்களில் தங்கியுள்ள அவர்கள், தமது அறைகளை விட்டு வெளியேறுவதாக, உனவட்டுன சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் சங்கத்தின் தலைவர் ரூபசேன கொஸ்வத்த தெரிவித்துள்ளார். நெருக்கடியான … Read more

இன்று முதல் நடைமுறைக்கு வரும் திருத்தப்பட்ட வழிகாட்டல்

இலங்கையில் கோவிட் தொற்று பரவுவதை தடுக்கும் வகையிலான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய தினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.  இதேவேளை கோவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி கூறுகையில், பண்டிகை காலத்தில் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.  அத்துடன், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.  Source link

அரச பாதுகாப்பில் இருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலர்! வெளியாகியுள்ள தகவல் (Video)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலர் இன்றும் உயிருடன் உள்ளதாகவும், அவர்கள் அரசாங்க பதவிகளில் அரச பாதுகாப்பில் இருப்பதாகவும் இலங்கையின் சிவில் செயற்பாட்டாளரும் அனைத்து வகையான பாகுபாடு மற்றும் இனவெறிக்கு எதிரான சர்தேச அமைப்பின் இலங்கைக்கான தலைவருமான நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இன்று உயிருடன் இருக்கும் … Read more

ஜனாதிபதி கோட்டபாய பிறப்பித்துள்ள உத்தரவு! மகிழ்ச்சியில் நாட்டு மக்கள்

மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அல்லது தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 5ஆம் திகதி முதல் தடையின்றி மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான … Read more