எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது! – அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியானது

மக்கள் எதிர்நோக்கும் அவல நிலையை கருத்திற் கொண்டு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் பேச்சாளர் சமிந்த ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருளைக் கருத்தில் கொண்டு, அந்தத் தொகை அடுத்த ஒரு வாரத்திற்கு போதுமானதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். “தற்போதைக்கு மக்கள் மீதான அழுத்தத்தை கருத்தில் கொண்டு, எரிபொருள் விலையை அதிகரிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் இருப்புகளைப் … Read more

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினருக்கு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள வேண்டுகோள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் வழமையான செயற்பாடுகளுக்கான எரிபொருளை மாத்திரம் விநியோகிக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் யாழ். மாவட்ட பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். மாவட்டத்தில் எரிபொருள் பொது மக்களுக்கு வழமைபோன்று விநியோகிக்கப்பட்டு வருகின்றது காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்தில் தேவையான போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. தேவையான அளவு எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது எனவே பொதுமக்கள் முண்டியடித்துச் சேமித்து வைத்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தத் தேவையில்லை. அத்தோடு வழமைபோன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு … Read more

போர் மேலும் உக்கிரமடையலாம்! உக்ரைனுக்கு ஆதரவு கரம் நீட்டும் நட்பு நாடுகள்

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் … Read more

ஆனந்தபுர சமரின் ஆபத்தான ஆயுதங்கள் உக்ரைன் களமுனையில்? வெளிவரும் இராணுவ இரகசியங்கள் (Video)

ஆனந்தபுரத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை ரஷ்யாவும் பயன்படுத்தலாம் என பிரித்தானியாவின் பெல்ஸில் இருக்கக்கூடிய கலாநிதி பிரபாகரன் என அனைவராலும் அறியப்பட்ட இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.   லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.  இதன்போது, உக்ரைன் களமுனையில் பயன்படுத்தப்படும் தாக்குதல் உத்தியினை ஆனந்தபுரம் பகுதியில் படையினர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பயன்படுத்தியதாக கூறப்படுவதில் உண்மைத்தன்மை இருக்கிறதா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், ஆனந்தபுரத்தில் தேமோபெரிக் ஆயதங்கள் தான் … Read more

இலங்கையில் இணைய பயன்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

இலங்கையில் இணைய வழி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.  இலங்கையில் இணைய வழி குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை கணினி குற்ற விசாரணை பிரிவிற்கு நாளாந்தம் 15 முதல் 20 வரையான இணைய வழி குற்றங்கள் குறித்த முறைப்பாடுகள் கிடைப்பதாக சி  பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.  எனவே, இணைய வழி மோசடிகள் … Read more

ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்த முகநூல்: ரஷ்யா எடுத்த முடிவு

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தாக்குதலுக்கு மத்தியில் ரஷ்யா, தமது நாட்டினர் முகநூல் பக்கத்திற்குள் பிரவேசிப்பதை கட்டுப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெஸ்கோ ஆதரவு ஊடகங்களின் கணக்குகள் தொடர்பாக முகநூல் நிறுவனம் கொண்டு நிலைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா, உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை தொடங்கிய தினத்திற்கு மறுநாள் அதாவது நேற்று (25) அதிகாரிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகநூல் மூலம் ரஷ்ய குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் மீறப்படுவதாக ரஷ்யாவின் தகவல் தொடர்பு … Read more

இறந்த தாயின் சடலத்துடன் பல நாட்கள் வீட்டில் தங்கியிருந்த மகள்! இலங்கையில் பதிவான சம்பவம்

இலங்கையின் பல பகுதிகளில் சில குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. அதில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பிரதானமானவை அந்த வகையில் வட்டவளை – டெம்பல்ஸ்டோவ் தோட்டத்திலுள்ள 13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட ஹயிற்றி தோட்டத்திலுள்ள விகாரையொன்றின் பிக்குவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உயிரிழந்த தாயாரின் சடலத்துடன், உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அவரின் மகள் 14 நாட்கள் வீட்டில் தங்கியிருந்த சம்பவம் தொடர்பில் மிரிஹானை பொலிஸார் தீவிர விசாரணைகளை … Read more

ரஷ்யாவுக்கு எதிரான தடைகளால் நேரடியாக பாதிக்கப்படும் இலங்கை

உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா எடுத்த முடிவை காரணமாக கொண்டு, அந்நாட்டுக்கு எதிராக தடைகளை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனடிப்படையில், வங்கி, எரிசக்தி, விமானம், தொழிற்நுட்பம் ஆகிய பல முக்கிய துறைகளுக்கு எதிராக தடைகளை விதிக்க பைடன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் காரணமாக எதிர்காலத்தில் ரஷ்யாவின் பொருளாதார பாரிய வீழ்ச்சிக்கு உள்ளாகலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்கா, ரஷ்யாவுக்கு எதிராக விதித்துள்ள தடைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என உக்ரைன் உட்பட … Read more

நடிகை சமந்தா வீட்டின் சமையல் அறையை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படத்துடன் பாருங்க

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியான முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் தற்போது திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் யசோதா படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விவாகரத்து பிறகு நடிகை சமந்தா தன்னுடைய தனி வீட்டில் தங்கி வருகிறார் . இந்நிலையில், நடிகை சமந்தா தற்போது தனியாக தங்கி வரும் வீட்டின் … Read more

இலங்கையை வருகைதந்துள்ள நான்காயிரம் உக்ரைன் பிரஜைகள்

இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சுற்றுலா பயணிகள் 30 நாட்களுக்கான விஸாவை பெற்றே நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக அமைச்சு கூறுகின்றது. எனினும், உக்ரைனில் தற்போது ஏற்பட்டு யுத்த சூழ்நிலைக்கு மத்தியில், நாடு திரும்ப முடியாத உக்ரைன் பிரஜைகளுக்கு விஸா கால எல்லையை அதிகரித்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஸா காலம் முடிவடைந்த பின்னர், நாடு திரும்ப விரும்பும் உக்ரைன் பிரஜைகளை, நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் … Read more