வியட்நாம் டிஜிட்டல் விவசாய நிபுணத்துவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளது

வியட்நாம் விவசாயம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் Minh Hoan Le அவர்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவை (பெப்ரவரி 21) கொழும்பு அலரி மாளிகையில் சந்தித்தார். நெருக்கமான இருதரப்பு உறவுகள் மற்றும் பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள், குறிப்பாக கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் குறித்து அவர்கள் கலந்துரையாடினர். வியட்நாம் விடுதலை இயக்கத்தின் போது இலங்கை வழங்கிய ஆதரவிற்கு வியட்நாம் அமைச்சர் நன்றி தெரிவித்தார். வியட்நாம் சுதந்திரம் அடைந்து ஒன்றிணைந்த பின்னர் முதலில் அங்கீகரித்த … Read more

 பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் – சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு

பொது நிர்வாக அமைச்சின் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், அரச கரும மொழிகள் ஆணைக்குழு, அரச கரும மொழிகள் திணைக்களம் மற்றும் ருஹுனு பல்கலைக்கழக சிங்கள கற்கைகள் பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கொழும்பு இலங்கை மன்றத்தில் நேற்று (21) இடம்பெற்றது. ருஹுனு பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி சங்கைக்குரிய அக்குரட்டியே நந்த தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் தாரிக் … Read more

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக பீடி இலைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றுடன் 02 சந்தேகநபர்கள் கல்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

கல்பிட்டி, பத்தலங்குண்டுவவிற்கு முன்னால் உள்ள கடற்பரப்பில் 2024 பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி மாலை இலங்கை கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சுமார் ஆயிரத்து நானூற்று எழுபத்தொரு கிலோகிராம் (1471) பீடி இலைகளுடன் (ஈரமான எடையுடன்) டிங்கி படகொன்று மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கடல் வழிகளாக மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில், கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை … Read more

சேதன கூட்டுப் பசளை தயாரிக்கும் முறை பற்றிய செய்முறை ரீதியான பயிற்சி

யாழ்ப்பாண மாவட்ட நல்லூர் பிரதேச செயலக J/126 கிராம அலுவலர் பிரிவில் கியூடெக் கரிதாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வீட்டுத்தோட்டப் பயனாளிகளுக்கு சேதன கூட்டுப் பசளை தயாரிக்கும் முறை பற்றிய செய்முறை ரீதியான பயிற்சி நேற்று (21.02.2024) விவசாய போதனாசிரியரால் வழங்கப்பட்டது. அத்துடன் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கம் பற்றிய விழிப்புணர்வு விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தரால் வழங்கப்பட்டதுடன், பயனாளி ஒருவருக்கு ரூபா 4500 பெறுமதியான வீட்டுத்தோட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம … Read more

எந்தவித அழுத்தங்கள் வந்தாலும் ஆரம்பிக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் நிறுத்தப்படமாட்டாது 

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள எந்தவொரு நடவடிக்கையையும் நிறுத்தத் தயாரில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். மேலும், 2023 டிசம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட “யுக்திய” நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 7.8 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் … Read more

கிராமிய விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உதவுங்கள்… – பிரதமர் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பணிப்பாளர் நாயகம் கலாநிதி கியூ டொன்கியு (Dr. Qu Dongyu) அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று (2024.02.19) அலரி மாளிகையில் நடைபெற்றது. பல ஆண்டுகளாக விவசாயம் மற்றும் கிராமிய பொருளாதார மேம்பாட்டிற்கு அளித்து வரும் ஆதரவிற்காக உணவு மற்றும் விவசாய அமைப்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர், விவசாயம் மற்றும் கடற்றொழில் துறைகளில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மேலும் ஆதரவளிக்குமாறு உணவு மற்றும் விவசாய அமைப்பிடம் … Read more

ஊடகவியலாளர்களுக்காக நாடு பூராகவும் இடம்பெறும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம்

ஊடகவியலாளர்களை அறிவூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக நாடு பூராகவும் நடாத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களும் பங்குபற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி; பந்துல குணவர்தன நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் ஊடகவியலாளர்களை அறிவூட்டும் நிகழ்ச்சித் தொடர் நடைபெற்று வருவதாகவும், இதற்கு அவசியமான இடம் வழங்குதல், வளவாளர்களுக்கான செலவு போன்ற சகல செயற்பாடுகளும் இந்நிதியத்தினூடாகவே மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்நிதியத்தினால் … Read more

மட்டக்களப்பில் முன்பள்ளிகளுக்கான சுகாதார மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் முன்பள்ளிகளுக்கான சுகாதார மேம்பாட்டுத் நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் (20) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் குறித்த நிகழ்ச்சித் திட்டத்தின் இணைப்பாளரும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைப் பிரிவில் செயற்படும் சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் தலைவருமான வைத்தியர் கே. மாதவன் திட்டத்தில் தமது பங்களிப்புக்கள் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தார். இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் சுகாதாரக் … Read more

வீட்டு வேலைகளுக்காக பெண்களை வெளிநாடு அனுப்புவதை நிறுத்த நடவடிக்கை

இலங்கைப் பெண்களை வீட்டுப்பணிப்பெண்களாக வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான முன்மொழிவை மற்றும் திட்டங்களை தனக்கு உடனடியாக வழங்குமாறு தொழிலாளர் மற்றும் வெளிநாட்;டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்புப் பணியகத்தின் உயர் நிருவாகத்திற்கும், அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் சங்கத்திற்கும் நேற்று (20) அறிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ X (ட்விட்டர்) தளத்தில் இன்று (21) வடுத்துள்ள செய்தியிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வீட்டுப் பணிப்பெண்களாக … Read more

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் பாராட்டு

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் பாராட்டு தெரிவித்தனர். உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச உள்ளிட்ட அதிகாரிகள், உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தின் பிரதியொன்றை (19) மல்வத்து அஸ்கிரி மகா மகாநாயக்க தேரர்களிடம் கையளித்தனர். இச்சட்டமூலத்திற்குப் பாராட்டு தெரிவித்த மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரியத் தரப்புப் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ … Read more