முட்டைகளுக்கான அதிகூடிய சில்லறை விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்தில்…

முட்டைகளுக்கான அதிகூடிய சில்லறை விலையை அறிவிக்கும் வரத்தமானியை வெளியிடுவதற்கு சம்பந்தப்பட்ட்ட விலை உள்ளடக்கிய யோசனை இந்த வாரத்தினுள் பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு சமர்ப்பிப்பதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தீமானித்துள்ளது. தற்போது சந்தையில் முட்டைகளின் விலை அதிகரிப்புத் தொடர்பாக மீளாய்வுக் கலந்துரையாடல் நேற்று (05) விவசாய அமைச்சில் இடம்பெற்ற போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. முட்டையொன்றை உற்பத்தி செய்வதற்காக 30 ரூபா மாத்திரமே  செலவு ஏற்படுவதாகவும், தற்போது நாட்டில் முட்டை உற்பத்தி 5.8   மில்லியன் … Read more

அரசாங்கத்தின் பயணப் பாதை வெற்றிகரமானது என்பது உறுதியாகியுள்ளது

• நாட்டில் வலுவடையும் பொருளாதாரத்தின் பலன்களை மக்களுக்குப் பெற்றுக் கொடுப்போம். • அனைத்து செயற்பாடுகளும் அறிவியல் முறையில் படிப்படியாகவே முன்னெடுக்கப்படுகிறன. • அதிகாரத்திற்காக நான் ஒருபோதும் பொய் சொல்லவில்லை. • இன்றும் நான் அதிகாரத்திற்காக அன்றி, நாட்டை மீளக் கட்டியெழுப்பவே முயற்சிக்கிறேன். • அதிகாரத்திற்கு கனவு காணும் அரசியல்வாதிகள் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. • மரணித்த உடலை மயானத்திற்கு கொண்டுச் செல்ல வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப முடியாமலும், பிள்ளைகள் நோய்வாய்ப்பட்டபோது பெரசிட்டமோல் தேடிக்கொள்ள முடியாமலும் இருந்த நாடு, இன்று … Read more

நாளுக்கு நாள் பொருளாதாரத்தை வலுப்படுத்தி மக்களுக்கு இன்னும் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்றத்தில்  –  ஜனாதிபதி 

நாளுக்கு நாள் பொருளாதாரத்தை வலுப்படுத்தி மக்களுக்கு இன்னும் இன்னும் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாளுக்கு நாள், மிகவும் பலவீனமாகக் காணப்பட்ட பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக மக்களுக்குப் இன்னும் இன்னும் வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இவையனைத்தும் திட்டமிடலுக்கு ஏற்ப இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு உரையாற்றினார். தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, நாம் அனைவரும் முறைப்படி மற்றும் … Read more

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளியிடும் சட்டத்தில் திருத்தம்

• புதிய சட்டத்தின் கீழ் புதிய அதிகாரிகள் மற்றும் நபர்களின் பல பிரிவுகள் உள்ளடக்கம். • திருத்த விபரங்களை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுளை, புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பெறலாம். 1988 ஆம் ஆண்டின் 74 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1975 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிக்க வேண்டிய அதிகாரிகள் மற்றும் தனிநபர்களின் பிரிவுகளுக்கு மேலதிகமாக, … Read more

இன்றைய வானிலை முன்னறிவிப்பு,

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 மார்ச் 06ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 மார்ச் 05ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. தென் மாகாணத்திலும், இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களிலும் மாலையில் அல்லது இரவில் சகறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில … Read more

அரசாங்கத்தின் மற்றும் நியதி நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை ஒழுங்குமுறையில் வழங்குவதற்காக புதிய நிறுவனமொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி

நாட்டின் முழு நிலப்பரப்பில் 82% வீதம் வரையான நிலப் பரப்பின் உரிமை அரசிற்குக் காணப்படுவதுடன் அந்த நிலத்தைப் பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் அரசின்  பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்நிறுவனங்கள்  ஒன்றிணைந்து பொருத்தமான நடைமுறைகளை பின்பற்றாது செயற்படுவதனால் அரசின் காணிகள் முதலீட்டுச் செயற்பாடுகளுக்காக விடுவிக்கும் போது பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதனால் புதிய கைத்தொழில் மற்றும்  சேவைகளை உருவாக்குதல் மற்றும் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தக்கூடிய முதலீட்டு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான,  பொருத்தமான விபரங்களுடன் காணிகளை அடையாளம் காண்பதிலிருந்து, முதலீட்டாளர்கள் வரை தூரநோக்குடனான பொறிமுறையொன்றை பின்பற்றி … Read more

அரசாங்கப் பாடசாலைகளில் தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கு “பாடசாலை உணவு நிகழ்ச்சித் திட்டம்” நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

நாட்டின் 100 கல்வி வலயங்களுக்குக் கீழ் வரும் 7, 902 பாடசாலைகளில் கல்வி கற்கும் 1.08மில்லியன் தொகையான சகல பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கியதாக “பாடசாலைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி”த்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், ஒரு மாணவருக்காக ஒரு நாளைக்கு ஒரு உணவுக்காக 85/- ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சந்தையில் காணப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளின் அதிகரிப்பிற்கிணங்க ஒரு உணவிற்காக குறைந்தது 110/- பெறுமதியான நிதி செலவிடப்படுவதாகவும் இது தொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்காக நியமிப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் குழுவினால் அறிக்கையிடப்பட்டுள்ளது. … Read more

இலங்கையின் “உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு சட்டம் ” (CTUR) தொடர்பில் ஆராய்வு

இலங்கையில் தேசிய நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமூக நீதியை மேம்படுத்தும் நோக்கில் உத்தேச “உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டத்தின்” வரைவு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இரண்டு விசேட கலந்துரையாடல்கள் அண்மையில் கொழும்பில் நடைபெற்றன. அவற்றில் ஒரு கலந்துரையாடல் ஹிமாலயன் குழுவின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல நிபுணத்துவ அறிவுள்ள பல தரப்பினரின் பங்கேற்புடன் நடைபெற்றது. அடுத்த கலந்துரையாடல் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பிற சிவில் சமூகங்களின் பிரதிநிதிகளின் … Read more

இரண்டாண்டுகால ஜனாதிபதியின் வகிபாகத்தை கேலிச்சித்திரக் கலைஞர்கள் எவ்வாறு அவதானித்தார்கள்

• “Press Vs. Prez” நூல் வெளியீடு மார்ச் 07 ஆம் திகதி. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறும் கடினமான பணியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முக்கியமான வகிபாகத்தை கேலிச்சித்திரக் கலைஞர்கள் எப்படி நோக்கினார்கள் என்பதை வெளிப்படுத்தும் “Press Vs. Prez” நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு கொழும்பு தாமரைத்தடாக அரங்கில் நடைபெறும். ஐக்கிய தேசியக் கட்சி தவிசாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்  குழு நாட்டிற்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் குழு எதிர்வரும் வியாழக்கிழமை (7) நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரிக்கப்படும் திட்டத்தின் மூன்றாவது தவணை தொடர்பான முக்கியமான நிதி விவகாரங்களை நிவர்த்தி செய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். எதிர்வரும் விஜயத்தை நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய உயர்மட்ட அதிகாரிகள் உட்பட முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.