2000 கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப்பரீட்சை இன்று ஆரம்பம்..

நாடளாவிய ரீதியில் 2000 கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான, போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து, நேர்முகப்பரீட்சைக்கு தகுதிபெற்றுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்குமான நேர்முகப்பரீட்சை, நாராஹேன்பிட்டியவில் அமந்துள்ள ‘நிலமெதுர’ வளாகத்தில் இன்று (13), நாளை (14) மற்றும் நாளை மறுநாள் (15) ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. நேர்முகப்பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் தற்போது அனுப்பப்பட்டுள்ளன. நேர்முகப்பரீட்சைக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களில் எவரேனுக்கும் இதுவரையிலும் அழைப்புக்கடிதம் கிடைக்காவிடின், நேர்முகப்பரீட்சை இடம்பெறும் திகதி மற்றும் நேரம் என்பவற்றை அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் www.moha.gov.lk ஊடாக அறிந்து கொள்ள … Read more

NSBM நிறுவனத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

அரசிற்கு சொந்தமானதும் முழுமையான சுய இலாபமீட்டும் நிறுவனமான வரையறுக்கப்பட்ட தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனத்தினால் (NSBM ) கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை மருத்துவ சங்கத்தின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தலின் கீழ் மருத்துவ பீடத்தை நிறுவுதல் மற்றும் அதன் ஊடாக MBBS எனும் வைத்தியப் பட்டத்தை வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டது. அப்பட்டப்படிப்பிற்காக வருடாந்தம் 500 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் இம்மருத்துவ பீட மாணவர்களுக்காக மருத்துவப் பயிற்சி வழங்குவதற்குப் … Read more

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய பிரதமச் செயலாளர்கள் நியமனம்

வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக எல். இளங்கோன் மற்றும் வடமேல் மாகாண பிரதமச் செயலாளராக தீபிகா கே குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று (12) கையளித்தார். இலங்கை நிர்வாகச் சேவையின் தலைசிறந்த அதிகாரியான எல்.இளங்கோவன் வடக்கு மாகாண அமைச்சுக்கள் பலவற்றின் செயலாளர் பதவி வகித்ததுடன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராகும் பணியாற்றியுள்ளார். எல்.இளங்கோவன் வடக்கு மாகாண … Read more

யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக 4,500 பல்நோக்கு உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள அங்கீகாரம்

யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக வனஜீவராசிகள் அமைச்சுக்கு 4500 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி தெரிவித்தார். நாட்டின் காடுகளை மொத்த நிலப்பரப்பில் 32% வரை அதிகரிக்கும் திட்டத்துடன் தொடர்புடைய வன எல்லைகளை நிர்ணயம் செய்யும் பணி இந்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வனஜீவராசிகள், வன வளங்கள் … Read more

நாட்டின் பிரதான வைத்தியசாலைகளின் நோயாளர்களுக்கான நெருக்கடிகளைக் குறைப்பதாயின் கிராமிய வைத்தியசாலைகளுக்கு அவசியமான வசதிகளை வழங்க வேண்டும்

நாட்டின் பிரதான வைத்தியசாலைகளின் நோயாளர்களுக்கான நெருக்கடிகளைக் குறைப்பதாயின் கிராமிய வைத்தியசாலைகளுக்கு அவசியமான வசதிகளை வழங்கி, அவற்றை உறுதியாக வலுப்படுத்தி அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும், ஆதார, தள, என சுகாதார சேவைகளை வலுப்படுத்த வேண்டும் என சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹீபால தெரிவித்தார். வடமத்திய மாகாணத்தின், அநுராதபுர மாவட்டத்தில், அநுராதபுர போதனா வைத்தியசாலை, கெபிதிகொல்லேவ, மதவாச்சி மற்றும் பதவிய ஆதார வைத்தியசாலைகள், ஏதாகட ஆரம்ப மருத்துவ உதவிப் பிரிவு ஆகியவற்றில் காணப்படும் ஆளணி … Read more

அஸ்வெசும சமூக நலன்புரி நன்மைகள் உத்தேசத் திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறுகின்ற குடும்பங்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி

அஸ்வெசும சமூக நலன்புரி நன்மைகள் உத்தேசத் திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறுகின்ற குடும்பங்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்தை நடiமுறைப்படுத்துவதற்கு, பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட் முடிவுகள் பின்வருமாறு… 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய நலன்புரி நன்மைகளைச் செலுத்தும் உத்தேச முறையொன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்காக 2023.04.17 அன்று இடம்பெற்ற … Read more

கனடாவில் நடந்த சம்பவத்திற்கு வருந்துகிறோம்..

அண்மையில் கனடாவில் இலங்கையர் ஒருவரால், இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று கொலை செய்யப்பட்டமை தொடர்பில், நாடு என்ற ரீதியில் அதிர்ச்சியும் துயரமும் அடைகின்றேன் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். மேலும் அந்த குடும்பத்தினருக்காக அரசு ஏதேனும் உதவிகளை செய்ய தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு … Read more

சவூதி அரேபியாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பேரீத்தம்பழங்களை முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

சவூதி அரேபிய அரசாங்கத்தினால் இலங்கை அன்பளிப்பா வழங்கப்பட்ட பேரீத்தம்பங்களை நாட்டு முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கும் நிகழ்வு புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரநாயகவின் தலைமையில் புத்தசாசன அமைச்சில் (11) நேற்று இடம்பெற்றது. இதன்போது கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மூன்று முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு இன்று (12) இவ்வாறு உத்தியோகபூர்வமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது. நாட்டில் 2500 பதிவு செய்யப்பட்ட பள்ளிவாயல்கள் காணப்படுவதுடன் ஒவ்வொரு பள்ளிக்காகவும் தலா 20 கிலோ அளவிலான பேரீத்தம்பழங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு முஸ்லிம் சமய மற்றும் … Read more

ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மினிஸ்டர் மன்றத்தின் பிராந்தியப் பணிப்பாளர் சபாநாயகரை சந்தித்தார்

ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மினிஸ்டர் மன்றத்தின் ஆசியா பசிபிக் மற்றும் அமெரிக்காப் பிராந்தியப் பணிப்பாளர் மதிவ் ஹெட்ஜஸ் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மினிஸ்டர் மன்றத்தின் இலங்கைப் பணிப்பாளர் சஞ்சே விக்னராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர். இலங்கை பாராளுமன்றத்துடன் நெருக்கமாகப் பணியாற்றும் ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மினிஸ்டர் மன்றத்தினால் பாராளுமன்றத்திலுள்ள அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய … Read more