மலையக சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பு அவசியம் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

மலையக பெருந்தோட்ட சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பும் அவசியம். அதற்காக உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனிடம், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார். நேற்று (01) நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்தார். இதன்போது, நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கைக்கு ஐக்கிய இராச்சியம் வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு … Read more

நாட்டுக்கு நன்மை ஏற்படும் வகையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

இலங்கைக்கு அதிக நன்மை ஏற்படும் வகையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக துறைமுகங்கள், கற்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் (24) பாராளுமன்றத்தில் நடைபெற்ற துறைமுகங்கள், கற்பற்றுறை மற்றும் விமான சேவை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.   சர்வதேச நிதி நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று அதற்கு ஏற்ற வகையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் … Read more

மின்சார சபையின் நிதி கூற்றுத் தொடர்பான விசேட கலந்துரையாடல்

மின்சார சபையை மறுசீரமைப்புச் செய்யும் முறையில் மின்சார சபையின் நிதிக் கூற்றுத் தொடர்பான விசேட கலந்துரையாடல், மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் பங்குபற்றலுடன் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நிகழ்நிலையில் (31) இடம்பெற்றது. மின்சார சபையின் 2023 ஜூன் மாதத்துடன் நிதிக்கூற்றை மறுசீரமைப்பிற்கான திட்டம் சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்வைப்பதற்கு உடன்பாடு காணப்பட்டது. அதற்கிணங்க உலக வங்கிப் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச நாணயத்தின் பிரதிநிதிகள் இலங்கை மின்சார … Read more

பாடசாலை கல்வியை இடைநடுவே கைவிட்டுச் சென்ற மாணவர்கள் – தீர்வு காண முற்படுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு யாழ் ஒருங்கிணைப்பு குழு தலைவர் வலியுறுத்தல்

யாழ் மாவட்டத்தில் பொருளாதார பிரச்சினை மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக 9 மற்றும் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் அதிகளவான மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து இடைவிலகுதல் மற்றும் பாடசாலைக்கு ஒழுங்கீனமாகச் சமுகமளிக்கும் பிரச்சினையும் காணப்படுவதாக வலயக்கல்விப் பணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த (31) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே குறித்த விடயத்தை வலயக்கல்விப் பணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த ஆண்டில் 355 பேர் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் 4 … Read more

2048ஆம் ஆண்டில் முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதே எமது போராட்டமாகும்

இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம். 04 முக்கிய தூண்களில் நாட்டைக் கட்டியெழுப்புவோம்.அடுத்த 05 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக ஸ்திரப்படுத்தி, அடுத்த 25 ஆண்டுகளில் உயர் வருமானம் ஈட்டும் அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மாற்றுவோம்.நாட்டை கட்டியெழுப்பும் பணியில் இளைஞர் சமூகம் மீது பெரும்நம்பிக்கை வைத்திருக்கிறோம்துரித பொருளாதார மறுசீரமைப்பு செயற்பாட்டில் அரச – தனியார் துறை ஒத்துழைப்பை அதிகரிக்க கூட்டாய்வு முறையை அமுல்படுத்துவோம்!மோசடியை ஒழிக்க விசேட … Read more

தேசிய பொசொன் நிகழ்வுக்கு அரசாங்கம் அனுசரணை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது

 அமைச்சுக்கள் மற்றும் ஒரு திணைக்களத்தினால் மாத்திரம் 288 இலட்சம் ரூபா ஏற்கனவே ஒதுக்கீடு. 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அரச பொசொன் நிகழ்வுக்கும், மிஹிந்தல புனித பூமியை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் பொசொன் நிகழ்வுகளுக்கும் அரசாங்கத்தின் அனுசரணை கிடைக்கவில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது தொடர்பில் புத்த சாசன, மத, கலாச்சார அலுவல்கள் அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, உள்நாட்டலுவல்கள் மாகாண சபை உள்ளூராட்சி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், அனுராதபுரம் மாவட்ட செயலகம், … Read more

தேசிய மாற்றத்திற்கான கொள்கைத்திட்டம் தொடர்பான ஜனாதிபதியின் விசேட உரை இன்று

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக கடந்த 09 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார். அனைத்து பொதுமக்களையும் தெளிவுபடுத்துவதற்காக இந்த விசேட உரை  இன்று (01) இரவு 8.00 மணிக்கு நாட்டிலுள்ள அனைத்து தொலைக்காட்சி, வானொலி மற்றும் நவீன ஊடகங்களிலும் ஒளி ஒலிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இதன்மூலம், தேசிய … Read more

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்திற்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கென்ஜி ஒகமுராவிற்கும்(Kenji Okamura) இடையிலான சந்திப்பொன்று நேற்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்தும் ஆராயப்பட்டது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, நிதி … Read more

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு – கல்வி அமைச்சர்

கிழக்கு மாகாணத்தில் 4,200 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் நிலையில் அதற்கு விரைவில் தீர்வு வழங்குவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (30) கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில், கிழக்கு மாகாணத்தில் 4,200 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அதற்கு நிரந்திர தீர்வினை காண்பதற்காக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கமைய செந்தில் தொண்டமானின் … Read more

இலங்கைக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க எதிர்பார்க்கின்றோம் – IMF பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் 

◾ இலங்கையின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான அடிப்படையான சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை பாராட்டுவதாகவும் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவிப்பு இந்தக் கடினமான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இன்று தெரிவித்தார். நேற்று (31) பிற்பகல் பாராளுமன்றத்தில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்களை சந்தித்த போதே அவர் இதனைத் … Read more