மலையகத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த நடவடிக்கை – அமைச்சர் ஜீவன் தொண்டமான்
உலகில் முன்னணி சேவை நிறுவனங்களுள் ஒன்றான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஊடாக, மலையகத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று (31) நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றுள்ளது. பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஊடாக இலங்கையில் முன்னெடுக்ககூடிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் சிறார்களுக்கான போசாக்கு உணவு, சுகாதார மேம்பாடு மற்றும் நவீன … Read more