பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக்க இடமளியேன் – ஜனாதிபதி

உயர்தர பரீட்சை விடைத் தாள்களைத் திருத்தும் பணிகளுக்கான மாற்று யோசனைகள் மற்றும் உரிய வேலைத்திட்டங்களை இவ்வார இறுதிக்குள் அறிவியுங்கள் – கல்வி துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை. பரீட்சைப் பணிகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுங்கள்.விடைத்தாள் திருத்தும் பணிகளை முடக்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை.வருடாந்தம் 10,000 பொறியியல் பட்டதாரிகளையும் 5,000 மருத்துவ பட்டதாரிகளையும் உருவாக்க அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஒன்றிணைந்து நடவடிக்கை. எந்தவொரு குழுவினரும் பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக பயன்படுத்த இடமளிக்கபோவதில்லை … Read more

பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பக்மஹ உலேல’ புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நேற்று (19) நடைபெற்ற சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவில் கெளரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து சிறப்பித்தார். பாதுகாப்பு அமைச்சின் நலன்புரிப் பிரிவின் அனுசரணையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் பிரதான பாரம்பரிய விழாக்களில் ஒன்றான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் ‘பக்மஹ உலேல’ நிகழ்வு அமைச்சின் அனைத்து ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் நேற்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய … Read more

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர்களே 2 ஆவது டெஸ்ட் போட்டியிலும்….

சுற்றுலாந்து அயர்லாந்துக்கு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்ட அதே 15 பேர் கொண்ட இலங்கை அணியை தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கும் தக்கவைக்க இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கமைய இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஏப்ரல் 24 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள அணி வீரர்கள்1.) திமுத் கருணாரத்ன – தலைவர்2.) குசல் மென்டிஸ்3.) ஏஞ்சலோ மேத்யூஸ்4.) தினேஷ் சந்திமல்5.) தனஞ்சய … Read more

புதிதாக 1,320 வைத்தியர்கள் நியமனம்

நாட்டில் வைத்தியர்கள் 1,320 பேருக்கு எதிர்வரும் 25ஆம் திகதியிலிருந்து புதிதாக நியமனம் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கிணங்க இந்த வைத்தியர்கள் அன்றிலிருந்து நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளகளுக்கு இணைத்துக் கொள்ளப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவ்வைத்தியர்கள் பிரதானமாக பின்தங்கிய பிரதேச வைத்தியசாலைகளில் பணிபுரிவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் அனைத்து வைத்தியர்களின் எண்ணிக்கை 19,000 ஆகக் காணப்படுவதுடன், புதிய வைத்தியர்களின் நியமனத்துடன் அவர்கள் 20,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளனர். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் … Read more

பெல்லன்வில சுவரோவிய புகைப்படப் புத்தகம் 28ஆம் திகதி வெளியீடு

பெல்லன்வில வரலாற்று சிறப்புமிக்க விகாரையில் பிரதான விகாரையினுள் வரையப்பட்டுள்ள சுவரோவியங்களை அடிப்படையாக வைத்து ‘விஸுவல் பொயட்ரி ஒப் பெல்லன்வில’ ‘பெல்லன்விலயின் கவிதைக் காணொளி’ எனும் பெல்லன்வில சுவரேவியப் புகைப்படப் புத்தகம் அச்சிடப்பட்டு மக்கள் மயப்படுத்தும் நிகழ்வு இம்மாதம் 28ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 3மணிக்கு இடம்பெறவுள்ளதாக பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் பெல்லன்வில தம்மரதன தேரர் தெரிவித்தார். இன்று (20) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற பெல்லன்வில சுவரோவிய புகைப்படப் புத்தகம் … Read more

மின்சார ஒளியை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கைது

மின்சார ஒளியை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை மற்றும் முல்லைத்தீவு உதவி கடற்றொழில் பரிசோதகர் அலுவலகம் இணைந்து (18) இரவு திருகோணமலை, நயாறு மற்றும் அலம்பில் கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது மின்சார ஒளியை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட எட்டு பேர், நான்கு டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர … Read more

3593 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 சந்தேகநபர்கள் கைது

அரச புலனாய்வு சேவையின் தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படை இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து இலங்கையின் தெற்கே ஹம்பாந்தோட்டை சிறிய ராவணன் பகுதியில் இருந்து சுமார் 132 கடல் மைல் (சுமார் 244 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன் அப்போது 3593 மில்லியன் ரூபாய்க்கு மேல் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் 179 கிலோ 654 கிராம் கொண்ட உள்ளூர் மீன்பிடி படகொன்றுடன், ஆறு சந்தேக நபர்கள் இலங்கை கடலோரக் … Read more

204 உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கிய 172 அபிவிருத்தித் திட்டங்களை 2025 ஆம் ஆண்டிற்கு முன்னர் நிறைவு செய்ய நடவடிக்கை

2025 ஆம் ஆண்டுக்கு முன்னர் 204 உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கிய 172 அபிவிருத்தித் திட்டங்கள் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் 21 அபிவிருத்தி திட்டங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குருவிட்ட அபிவிருத்தித் திட்டங்கள் கடந்த மார்ச் மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டன. மேலும், பெல்மடுல்ல/கஹவத்தை அபிவிருத்தித் திட்டங்கள் அடுத்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும், ரம்புக்கன, … Read more

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்புகான வானிலை

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஏப்ரல் 20ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை:புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. காற்று :நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு … Read more

வடகடல் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும் – கடற்றொழில் அமைச்சர்

வடகடல் நிறுவனம் எந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதோ அதனை அடையக்கூடியதாக இருக்கும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நோத்சீ எனப்படும் வடகடல் நிறுவனத்திற்கான புதிய அலுவலகம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று (18) திறந்து வைக்கப்பட்டபோதே, அவர் இதனைத் தெரிவித்தார். குறித்த நிறுவனத்திற்கான புதிய தலைவர் மற்றும் பொது முகாமையாளர் ஆகியோர் நியமிக்கப்பட்ட நிலையில், நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும் நோக்குடன் புதிய அலுவலகம் கடற்றொழில் அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இரு தனியார் … Read more