வெளிநாட்டு வேலைவாய்ப்பை இலக்காகக்கொண்ட ஒப்பந்தம்

ஜப்பானில் செவிலியர் பணியாளர்களுக்கும் – இங்கிலாந்து கனடா அவுஸ்திரேலிய நாடுகளில் ஹோட்டல்களிலும், ஐரோப்பாவிலும் செவிலியர் பணியாளர்களுக்கும் மத்திய கிழக்கிலும் கட்டிட நிர்மாண துறைகளிலும் தொழில் வாய்ப்புகள் ஜப்பானில் செவிலியர் பணியாளர் சேவையில் தொழில் வாய்ப்புக்களும், இங்கிலாந்து கனடா அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளில் ஹோட்டல்களில் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பமும் ,ஐரோப்பாவிலும் செவிலியர் பணியாளர் தொழில் துறையில் தொழில் வாய்ப்புக்களும் மத்திய கிழக்கிலும் கட்டிட நிர்மாண துறைகளிலும் தொழில் வாய்ப்புக்களுமான பாரியளவில் இலங்கையருக்கு சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் இந்த தேவைகளை பூர்த்தி … Read more

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 500 பஸ்களில் இயந்திரக் கோளாறுகள் காணப்படுவதாக அறிவிக்கப்படவில்லை – அமைச்சர் பந்துல குணவர்தன

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 500 பஸ்களில் இயந்திரக் கோளாறுகள் காணப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் அறிவிக்கவில்லை என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… கடந்த காலப்பகுதியில்; போக்குவரத்து அமைச்சராக இருந்த திலும் அமுனுகமவின் ஆட்சிக்காலத்தில் இந்திய கடன் திட்டத்தின் கீழ் 500 பஸ்களை இலங்கைக்கு … Read more

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி

சுற்றுலா அயர்லாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் 16 ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 591 ஓட்டங்களை பெற்ற நிலையில் இன்னிங்ஸை இடை நிறுத்திக் … Read more

தேசிய இப்தார் நிகழ்வு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில்

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பை முன்னிட்டு நடத்தப்படும் தேசிய இப்தார் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று (18) அலரி மாளிகையில் நடைபெற்றது. தேசிய நல்லிணக்கத்துக்கான ஆசிர்வாத நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன. தேசிய ஒருமைப்பாட்டினை வளர்ப்பதற்கு பல தசாப்தங்களாக தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கிவரும் முஸ்லிம் பக்தர்கள் எதிர்காலத்திலும் ஒற்றுமையான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டார். முஸ்லிங்களின் ரமழான் நோன்பு மாதம் ஆன்மீக … Read more

குரங்குகள் ஏற்றுமதி செய்வது குறித்து சீனாவுடன் எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை

இலங்கை அரசாங்கம், சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பாக அவ் அரசாங்கத்துடன் எவ்வித உடன்படிக்கையையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார். சீனாவிற்கு 1000 குரங்குகளை ஏற்றுமதி செய்யவது குறித்து, தற்போது, சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படும் பிரச்சாரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் … Read more

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மூன்றாவது சிரார்த்த தினத்தையொட்டி பெரும் கண்காட்சி

அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மூன்றாவது சிரார்த்த தினம் எதிர்வரும் மே மாதம் 26ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை கொழும்பு சௌமியபவனில் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு தேசிய தலைவரது ஆளுமையை இளைய தலைமுறையினரும் உள்வாங்கிக் கொள்ளும் வகையில் கண்காட்சி ஒன்று இடம்பெற உள்ளதாக இ.தொ.கா ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இக்கண்காட்சியில் அமரர் பயன்படுத்திய பொருட்கள் அவரது நினைவுகளின் நிழல்களாக விளங்கும் புகைப்படங்கள், விருதுகள், … Read more

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பம்

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சு அதன் பணிகளை ஆரம்பித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்ன ஆகியோரின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான திரு. சாகல ரத்நாயக்க ஆகியோர் பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் நேற்று (17) காலை … Read more

ஏப்ரல் 20ஆம் திகதிக்குப் பின்னர் காலி முகத்திடலில் பொதுமக்கள் சுதந்திரமாக பொழுதைக் கழிக்க முடியும்

பொதுமக்கள் அச்சமோ சந்தேகமோ இன்றி சுதந்திரமாக சுவாசிக்கக்கூடிய இடமாக காலி முகத்திடல் காணப்பட்டது. ஆனால் கடந்த காலங்களில் நடந்த இசை நிகழ்ச்சிகளாலும், ஆர்ப்பாட்டங்களினாலும், காலி முகத்திடல் வெகுவாக சேதமடைந்துள்ளது. இதன்காரணமாக, இலங்கை துறைமுக அதிகாரசபையானது இப்பகுதியை சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக சுமார் 220 மில்லியன் ரூபாவை அந்த அதிகார சபை செலவிடவுள்ளது. கடந்த போராட்ட காலத்தில் குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட சொத்து சேதங்களை சீர் செய்வதற்கு மாத்திரம் சுமார் 6.6 … Read more

தினமும் 3 லீட்டருக்கும் அதிகமான நீர் பருக வேண்டும் – யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர்

தினமும் மூன்று லீட்டருக்கும் அதிகமான நீர் பருக வேண்டும் என்று யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா நேற்றைய தினம் (17) தெரிவித்துள்ளார். “தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான கால நிலையினால் உடலில் உள்ள நீர் சத்துக்கள் இழக்கப்படும் இதனால் சூரியன் உச்சம் கொடுக்கும் மதிய நேரங்களில் வெளி பயணங்களை தவிர்த்து கொள்வது நன்மையளிக்கும் என்றும் குறிப்பிட்டார். ஒருவர் ஒரு நாளைக்கு சராசரியாக தினமும் 3 லீட்டர் வரையில் நீர் அருந்த வேண்டும் அத்துடன், போதியளவு … Read more

எட்டு மாவட்டங்களில் அதிக வெப்பமான காலநிலை

கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், அநுராதபுரம், குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மேற்குறிப்பிடப்பட்ட 8 மாவட்டங்களும் வெப்பமான காலநிலையினால் பாதிக்கப்படும் என திணைக்களம் வெளியிட்டுள்ள வெப்பச் சுட்டெண்ணில் தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில் தொழில் புரிவோர் வேலை செய்யும் இடங்களில் முடிந்தவரை அடிக்கடி நிழலில் இருக்கவும், ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய வெளிப்புற தொழிலாளர்கள் கடினமான வேலைகளை குறைத்து, நிழல் உள்ள இடங்களில் … Read more