சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய மேலதிக பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய மேலதிக பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை (12) சந்தித்தார். கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த மேலதிக பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இருவருக்குமிடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளைப் பாராட்டிய இராஜாங்க அமைச்சர், தற்போது அதன் சேவைகளை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் … Read more

கிராஞ்சி, கொக்காவில் மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

2023 ஏப்ரல் 14ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் … Read more

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைவதைத் தொடர்ந்து உதயமாகும் தமிழ், சிங்களப் புத்தாண்டு இந்நாட்டின் தமிழ், சிங்கள மக்களுக்கு மிகவும் சிறப்பும், மகிழ்வும் நிறைந்ததாகும். சௌபாக்கியத்தையும் சுபீட்சத்தையும் வேண்டியே அனைவரும் சம்பிரதாயங்களை செய்கின்றனர். கடந்த வருடம் சித்திரைப் புத்தாண்டு உதயமான போது நாம் அனைவரும் மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கியிருந்தோம். புத்தாண்டு கொண்டாட்டம் ஒருபுறமிருக்க, அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதே மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஆனால் இப்புத்தாண்டில் அனைவருக்கும் சிறு ஆறுதல் தருகின்ற சூழல் … Read more

சிங்கள- தமிழ் சித்திரைப் புத்தாண்டு தேசத்தின் மாபெரும் கலாசார விழாவாகும்.  

தேசத்தின் மாபெரும் கலாசார விழாவான சிங்கள- தமிழ் சித்திரைப் புத்தாண்டில் ஒரே சுப நேரத்தில் செயற்படும், உலகின் எந்த நாட்டிலும் இல்லாத தனித்துவமான பல்வேறு பழம்பெரும் பாரம்பரியங்களை நாம் மரபுரிமையாகப் பெற்றுள்ளோம். நாம் எப்போதும் வளமான புத்தாண்டுக்காக வாழ்த்துவோம். இம்முறை நாடு எதிர்கொண்ட உணவு மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில், புத்தாண்டின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி, விளைச்சலினால் நாட்டை செழிப்படையச் செய்வதற்காக எமது விவசாய சமூகத்தினர் மேற்கொண்ட சவால்மிக்க பணிகளை இந்தப் புத்தாண்டில் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். … Read more

மன்னார், பெரியமடு, புளியங்குளம் மற்றும் கொக்கிளாய் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் அறிவிக்கபட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். சூரியனின் தொடர்பான … Read more

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட அணி

விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியுடன் உறுதி செய்யப்படவிருக்கும் இந்த உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட அணி, தேசிய வலைப்பந்து அணி பயிற்சியாளர் திலகா ஜினதாசவின் வழிகாட்டலில் ஜூலை மாதம் 28ஆம் திகதி தொடக்கம் ஒகஸ்ட் மாதம் 06ஆம் திகதி வரை தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கெடுக்கவுள்ளது. உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றவிருக்கும் அணி வீராங்கனைகள்; வருமாறு : திசால அலகம, செமினி அல்விஸ், சானிக்க பெரேரா, கயான்ஜலி அமரவன்ச, ரஷ்மி திவ்யாஞ்சலி, … Read more

புத்தாண்ட காலத்தில் போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்

புத்தாண்டு காலங்களில் போலி நாணயத்தாள்கள் கைமாறக்கூடும்; என்பதால், பணத்தைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்குமாறு பொலிஸார் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளளனர். பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்களை சந்தையில் கைமாற்றுவதற்கு மோசடிக்காரர்கள் முயற்சிக்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பண்டிகைக் காலத்தில் முக்கிய நகரங்களில் வாகனங்களை நிறுத்தும் போது கவனமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். முறையற்ற விதத்தில் வாகனங்களை நிறுத்தவதன் காரணமாக, கடந்த சில நாட்களாக … Read more

கையிருப்பில் இருக்கும் சோளத்தை களங்சியப்படுத்தாது விற்பனை செய்ய கோரிக்கை – கமத்தொழில் அமைச்சு

இம்முறை பெரும்போகத்தில், விவசாயிகள் பயிரிட்ட சோளம், விவசாயிகளிடம் கையிருப்பில் இருப்பதனால், அவற்றை உடனடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கமத்தொழில் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது சோளத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மீண்டும் சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சோளத்தின் விலை உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் சில விவசாயிகள் அவற்றை களங்சியப்படுத்தி வைத்திருந்தாலும், சோளம் இறக்குமதி செய்தால் அதன் விலை குறைவடையலாம். எனவே, தற்போது சோளத்திற்கு நல்ல விலை கிடைத்துள்ளதால், விவசாயிகள் தமது கையிருப்பில் உள்ள … Read more

கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

கணக்காய்வு சேவை ஆணைக்குழுவிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் ஏப்ரல் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். ஆணைக்குழுவின் தலைவராக கணக்காய்வாளர் நாயகம் பதவிவழி அதிகாரத்தில் நியமிக்கப்படுவதுடன், கணக்காய்வாளர் நாயகம் திரு. டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன அந்த பதவியில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அதுமட்டுமின்றி, ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களான ஓய்வுபெற்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ, நந்தசீலி கொடகந்த, ஞானானந்தராஜா தேவஞானம், ஏ. எம். தர்மஜித் நயனகாந்த ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்து … Read more

இலங்கை வரும் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணி

பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான தொடர், இம்மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று ரி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இம்மாதம் 25 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்திலும், மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடர் எஸ்.எஸ்.சி. … Read more