சுற்றாடல் சார்ந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிராந்திய வலையமைப்பை ஸ்தாபிக்க திட்டம்

கிழக்கு மாகாண சுற்றாடல் சார்ந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிராந்திய வலையமைப்பை ஸ்தாபிப்பற்தான கலந்துரையாடல், சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் மாவட்ட செயலாளர் திருமதி.கலாமதி பத்மராஜாவின் எற்பாட்டில் (10) மாவட்ட செயலக மாநாட்டு மண்டத்தில் இடம்பெற்றது. மத்திய சுற்றாடல் அதிகார சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க மாகாண மட்டத்தில் சுற்றாடலைப் பாதுகாக்கும் உபகுழுக்களை நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே கிழக்கு மாகாணத்திற்கான பிராந்திய வலையமைப்பு ஸ்தாபிக்கப்படவுள்ளது. மாவட்ட மட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் இளைஞர்களை, … Read more

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு போக்குவரத்து சேவை தொடர்பான அறிவிப்பு

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று (12) விசேட தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மக்களின் வசதிக்காக 300க்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் கலாநிதி நிலான் மிராண்டா குறிப்பிட்டார். அதன்படி, புத்தாண்டு காலத்திலும் மேலதிக பேருந்துகளை இயக்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பொது முகாமையாளர் பண்டுக சவர்ணஹன்ச தெரிவித்தார். இதேவேளை, நாளை 13ஆம் திகதி வரை நீண்ட தூர சேவைப் … Read more

பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஏப்ரல் 12 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஏப்ரல் 12 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் … Read more

யாழ்ப்பாணத்தில் பயிரிடப்படும் இயற்கை உரத்திலான புளிப்பு வாழைப்பழங்கள் துபாய் சந்தைக்கு

யாழ்ப்பாணத்தில் 350 ஏக்கரில் இயற்கை உரத்தினால் பயிரிடப்பட்ட புளிப்பு வாழைப்பழங்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் வாரந்தோறும் 25,000 கிலோகிராம் வீதம் துபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய விவசாய அமைச்சு நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். விவசாய அமைச்சின் கீழுள்ள விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதி பங்களிப்பின் கீழ், … Read more

கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஏப்ரல் 12ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை:புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று :நாட்டைச் … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன்வசதி வேலைத்திட்டம் தொடர்பில் ஏப்ரல் 25ஆம் திகதி பாராளுமன்ற விவாதம்

அரசியல் கட்சிகள் தமது நாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குமா இல்லையா என்பது குறித்து அங்கு தீர்மானிக்கலாம். சமூக நலன்புரி நன்மைகள் வழங்கும் பணிகள் ஜூன் 01 முதல் -சாகல ரத்நாயக்க தெரிவிப்புசர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி (IMF/EFF) திட்டத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், அது ஏப்ரல் 25 முதல் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். அரசியல் கட்சிகள் தமது நாட்டுக்கு … Read more

நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடந்தால் சட்டங்கள் குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து எவரும் எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காரியாலயத்தை திறந்துவைத்த பின்னர் உரையாற்றியபோதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் மக்கள் முன்னெடுத்த போராட்டங்களை முடக்குவதற்கு அன்று கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தை விட இச்சட்டம் குறித்து கவலையடையத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார். ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு சட்டங்கள் அவசியமாகும் என்றும் … Read more

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு மேலும் 15 ஆயிரத்து 149 இலட்சம் ரூபாய் இழப்பீடு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான இழப்பீட்டின் நான்காவது கட்டத்தினை தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பிற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சரின் தொடர்ச்சியான முயற்சியினால் குறித்த கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் சார்ந்த மக்களுக்கான நான்காவது கட்ட இழப்பீட்டு தொகையாக சுமார் 15 ஆயிரத்து 149 இலட்சம் ரூபாய் (ரூ.1,514,900,000) கடற்றொழில் அமைச்சிற்கு கிடைத்துள்ள நிலையில், அவற்றை உடனடியாக பயனாளிகளுக்கு வழங்கி வைப்பதற்கான ஆலோசனைகளும் கடற்றொழில் … Read more

க.பொ.த சாதாரண தர பரீட்சை மே 29 ஆம் திகதி ஆரம்பம்

2022 க.பொ.த. சாதாரண தர பரீட்சைகளை 2023 மே 29 ஆம் திகதி முதல் ஜூன் 08ஆம் திகதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மே 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் 16 ஆம் திகதி ஆரம்பம்

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆர்மபமாகவுள்ளது. இலங்கையுடனான இரண்டு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்பதற்காக அயர்லாந்து கிரிக்கெட் அணி நேற்று (09) இலங்கையை வந்தடைந்தது. இந்த டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கமைய இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஏப்ரல் 16 ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஏப்ரல் 24 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.