பிறப்பிக்கப்பட்டுள்ள கடும் உத்தரவு – தயார் நிலையில் பொலிஸார்

நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டங்களை நடத்தினால், தேர்தல் சட்டத்தின் கீழ் அனைத்து ஆர்ப்பாட்டங்களையும் கலைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடுமையான உத்தரவுகள்  அண்மையில் நாட்டில் பொலிஸ் பிரிவுகளுக்கு தேவையான கலகத் தடுப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொலிஸாரின் அனுமதியின்றி நடத்தப்படும் அனைத்து ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் போராட்டங்களை கலைக்கும் போது இடையூறு விளைவிப்பவர்களை கைது … Read more

கொழும்பில் துப்பாக்கிச் சூடு! பொலிஸார் தீவிர விசாரணை (Video)

கொழும்பு- கொட்டாஞ்சேனை பரமாநந்த விகாரமாவத்த பகுதியில்  துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.  இதில் ஒருவர் காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. 40வயது மதிக்கதக்க ஒருவரே இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளார். இன்று (18.3.2023) இரவு இத்துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  முகமூடி அணிந்த இருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.  சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  Source link

சர்வதேச விமான நிலையமொன்றில் தவறுதலாக இறக்கிவிடப்பட்ட இலங்கை பயணிகள்!

பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து வந்த விமானப் பயணிகள் பெரும் இடைஞ்சலை எதிர்கொண்டுள்ளனர். நேற்றையதினம் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கொழும்பில் இருந்து வந்த 30 விமானப் பயணிகள், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (KIA) கவனக் குறைவால், உள்நாட்டு வருகை வாயிலில் தவறுதலாக இறக்கிவிடப்பட்டதாக NDTV தெரிவித்துள்ளது. தவறான வாயிலில் இறக்கப்பட்ட பயணிகள் பெங்களூர் விமான நிலையத்தில் சர்வதேச வருகை வாயிலுக்குப் பதிலாக அவர்கள் உள்நாட்டு வருகைப் வாயிலில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். “மார்ச் … Read more

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள உத்தரவு

கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்ற சபையை இடைநிறுத்தி கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஆசிரியர் இடமாறுதல் சபையின் பரிந்துரையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட இருந்த சுமார் 12,500 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படவுள்ளன. பல்வேறு காரணங்களால் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் மற்றும் ஒட்டுமொத்த பாடசாலைக் கல்விச் செயன்முறைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் பரீட்சை கற்கைகளுக்கு ஏற்படும் இடையூறுகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் முடிவு எனவே, ஆசிரியர் … Read more

இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீரென ஏற்பட்ட அதிகரிப்பு! சந்தையில் குவிந்த பெருமளவான டொலர்கள்(Video)

இலங்கையில் நெகிழ்ச்சியுடைய நாணய மாற்று விகிதமே உள்ளது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.  எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.    தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  நெகிழ்ச்சியுடைய நாணய மாற்று விகிதம் என்று சொன்னால் டொலர் வருகின்ற அளவு, டொலர் வெளியே செல்கின்ற அளவு. ஏற்றுமதி செய்யும் போது எங்களுக்கு டொலர் உள்ளே வருகின்றது. இறக்குமதி செய்கின்ற போது டொலர் வெளியே செல்கின்றது.  எனவே, இறக்குமதி … Read more

மேலும் 18 மாதங்கள் வரை நிதியுதவிகளை வழங்க உலக வங்கி இணக்கம்

இலங்கையின் கமத்தொழில் மேம்பாட்டுக்கு மேலும் 18 மாதங்கள் வரை நிதியுதவிகளை வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. விவசாயத்துறையில் புதிய தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான கமத்தொழில் நவீனமயப்படுத்தல் செயற்திட்டத்துக்கு உலக வங்கியின் நிதியுதவி தொடர்ந்தும் வழங்கப்படவுள்ளது. உலக வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது. மகிந்த அமரவீர வேண்டுகோள் கமத்தொழில் நவீனமயப்படுத்தல் செயற்திட்டம் தற்போதைக்கு குறிப்பிடத்தக்க செயற்பாடுகளை முன்னெடுத்து உள்ளதாகவும், அதற்கான நிதியுதவிகளை தொடர்ந்தும் … Read more

இலங்கை வரும் பயணிகளை பலவந்தமாக வாகனங்களில் ஏற்றும் கும்பல்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பலவந்தமாக வாகனங்களில் ஏற்றி பணம் சம்பாதிக்கும் 6 பேர் நேற்று கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இவர்களை கைது செய்துள்ளதுடன், இந்நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தரகு பணம் வாங்கும் இந்த தரகர்கள், விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தின் முன்பு காத்திருந்து, முகவர்கள் இல்லாமல் நாட்டிற்குள் வரும் சுற்றுலாப் பயணிகளை வாகனங்களில் … Read more

கடந்த ஆண்டு 1.1 மில்லியன் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்

கடந்த 2022ம் ஆண்டில் 1.1 மில்லின் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியவர்களில் 27.6 வீதமானவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெறும் நோக்கில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுக்கள் கடந்த ஆண்டில் மொத்தமாக 1,127,758 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த ஆண்டு 911757 கடவுச்சீட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக 311,269 பேர் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு வெளிநாட்டு … Read more

கையடக்க தொலைபேசி SIM பாவனை தொடர்பில் கடுமையாகும் சட்டம்

உயிரிழந்தவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களுக்கு கையடக்க தொலைபேசி சிம் அட்டைகள் வழங்க வேண்டாம் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாள தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் பெயர்கள், அவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய பட்டியல் நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலிருந்தும் மாதத்திற்கு ஒருமுறை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு பெற்றுக்கொடுக்கப்படுவதாக அவர் கூறினார். ஒருவர் இறந்தவுடன் தொடர்புடைய தொலைபேசி … Read more