11 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட அதிபர் கைது

பலாங்கொட பகுதியில் 11 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பாடசாலை அதிபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பலாங்கொட பின்னவல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  அதிபர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு  பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பலங்கொட எல்ராவ என்னும் பகுதியைச் சேர்ந்த 50 வயதான பாடசாலை அதிபரே இவ்வாறு … Read more

எரிவாயு விலையில் திருத்தம்! சற்று முன்னர் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

லிட்ரோ எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.  உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், இன்றையதினம் இலங்கையில் எரிவாயுவின் விலையை உயர்த்தப் போவதில்லை என்று லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.  இந்த நிலையில், தற்போது வரை காணப்படும் எரிவாயுவின் விலை அவ்வாறே தொடரும் எனவும் லிட்ரோ நிறுவனத் தலைவரின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ள போதிலும் எரிவாயு … Read more

விவசாய இரசாயனங்களின் தடை காரணமாக 24 ஆயிரம் கோடி ரூபா நட்டம்

உரம் உள்ளிட்ட விவசாய இரசாயனங்களின் தடை காரணமாக கடந்த வருடம் 24 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞான பிரிவு முன்னெடுத்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  உர இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக கடந்த வருடத்தின் பெரும்போகத்தில், நெல் உற்பத்தி சுமார் 36 வீதத்தால் குறைந்துள்ளதாக அந்த பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்தார். அத்துடன், கடந்த வருடத்தின் சிறுபோகத்தில் நெல் உற்பத்தி சுமார் 30 சதவீதத்தால் … Read more

பொதுமக்களிடம் இலங்கை வைத்திய சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

அரச வைத்தியசாலைகள் அல்லது அரச மருந்தகங்களில் செல்லும் நோயாளர்களுக்கு அங்கு மருந்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டால் , அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்குமாறு இலங்கை வைத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.  அதற்கு சட்ட ஒத்துழைப்பினை வழங்க தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இலங்கை வைத்திய சங்கத்தினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பெப்ரவரி 15ஆம் திகதி நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது. இதற்கான பதிலைப் பெற்றுக் கொள்வதற்காக சுகாதார அதிகாரிகள் மனித … Read more

ராகுவுடன் இணையும் சுக்கிரன் சேர்க்கை :யாருக்கெல்லாம் அதிஷ்ட மாற்றம் அமையப்போகிறது! நாளைய ராசிபலன்

2023 மார்ச் 12 முதல் சுக்கிரன் மற்றும் ராகு சேர்க்கை நடக்கப் போகிறது. மார்ச் 12 அன்று, சுக்கிரன் தனது ராசியை மாற்றுகிறார். அன்று காலை 08.37 மணிக்கு சுக்கிரன் மேஷ ராசியில் சஞ்சரித்து ஏற்கனவே இருக்கும் ராகுவுடன் இணைகிறார். சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கை மார்ச் 12ஆம் முதல் ஏப்ரல் 6ஆம் திகதி வரை இருக்கும். பிறகு ஏப்ரல் 6 ஆம் திகதி காலை 11:10 மணிக்கு சுக்கிரன் மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்கு … Read more

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் நிதி அமைச்சின் அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தடுத்து வைத்துள்ளமையை தவிர்க்குமாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பை தாம் மதிப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிடிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.   நீதிமன்ற தீர்ப்பை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும். அது அனைவரினதும் பொறுப்பாகும். அதன்படியே, நிதியமைச்சும் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய செயற்படும் என தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவு இதே வேளை தேர்தலுக்கான அச்சகப் பணிகளுக்கு தேவைப்படும் நிதியை வழங்காதிருக்கும் நிதி அமைச்சின் செயற்பாட்டிற்கு உயர் … Read more

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலையில் அதிகரிப்பு ஏற்படாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் நாளை (05.03.2023) வெளியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவில் மாற்றம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை இம்மாதம் அதிகரிக்கப்படவிருந்த போதிலும்,தற்போது அந்த முடிவில் மாற்றம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.       Source link

சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பான தவாறான புரிதல்கள்…!

Courtesy: யதீந்திரா தமிழ் மக்களுக்கான அரசியல் தலைவிதியை தீர்மானிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு (Referendum) நடத்தப்பட வேண்டுமென்று சிலர் கூறிவருகின்றனர். அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட பேரணியின் இறுதியிலும் இவ்வாறானதொரு கோரிக்கையே முன்வைக்கப்பட்டது. இது அரசியலில் துனிப்புல் மேயும் பிரச்சினை. தமிழ்ச் சூழலில் தங்களை படித்தவர்களென்று கருதிக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கே விடயங்கள் சரியாக விளங்காத போது, பல்கலைக்கழக மாணவர்களால் எவ்வாறு இந்த விடயங்களை புரிந்துகொள்ள முடியும்? பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவுரை கூறுவோரும் கூட அவர்களை தவறாக வழிநடத்தியிருக்கலாம். இவ்வாறான … Read more

போதைப்பொருள் மாபியா கும்பல்களை பாதுகாக்கும் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர்

 போதைப்பொருள் மாபியா கும்பல்களை பாதுகாக்கும் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. போதைப்பொருள் மாபியாவின் பின்னணியில் உள்ள பாதாள உலக குழு பிரபலத்திற்கு எதிராக விசாரணை நடத்தும் குழுக்களின் பிரதானி உட்பட அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அழுத்தம் கொடுத்து வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு அந்தந்த பொலிஸ் பிரிவுகளின் தலைவர்களுக்கு இந்த சிரேஷ்ட அதிகாரி ஏற்கனவே அழுத்தம் கொடுத்து … Read more

அதிகரிக்கப்படும் வட்டி வீதம்! இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி அதன் நாணய கொள்கையில் வட்டி வீதங்களை உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளது. இந்த வட்டி விகிதங்கள் நேற்று முதல் அதிகரிக்கப்படும் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நிலையான வைப்பு வட்டி வீதம் (Standing Deposit Facility Rate – SDFR) 15.5 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை, மத்திய வங்கியினால் கடனுக்காக அறவிடப்படும் வட்டி வீதம் (Standing Lending Facility Rate – SLRF) 16.5 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் … Read more