இந்திய – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை (28) இந்தியாவின் இந்தூரில் ஆரம்பமாகவுள்ளது. அதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் தீவிர பயிற்சியில் நேற்று ஈடுபட்டனர். இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்ற பெற்றால் தொடரை கைப்பற்றி விடும் என்பதால் இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் … Read more

ஜனாதிபதி பிரதமர், பதவிகளில் ,எந்தவித மாற்றமும் இல்லை

எந்த வகையிலும் தேர்தல் ஒன்று நடைபெறும் வரையில் ஜனாதிபதி பதவியிலோ அல்லது பிரதமர் பதவியிலோ எந்த எவ்வித மாற்றங்களும் ஏற்பட மாட்டாது என்று தான் பொறுப்புடன் கூறுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலையில், அதனை திசை திருப்புவதற்கு இவ்வாறான விடயங்களை கூறுவது … Read more

யாழ் ஆளுநர் செயலக வளாகத்தில் வர்த்தக கண்காட்சி 

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் நடாத்தும் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான வர்த்தக கண்காட்சி வடக்கு மாகாண ஆளுநர் செயலக வளாகத்தில் இன்றைய தினம் (28) காலை ஆரம்பமானது. இன்று மாலையுடன் நிறைவடையவுளள் இந்த வர்த்த கண்காட்சி சிறு தொழில் முயற்சியாளர்களர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அவர்களது உற்பத்திக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   Logini Sakayaraja

பாகிஸ்தான் கடற்படை தளபதி ,இலங்கை பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மது அம்ஜத் கான் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த ஜெனரல் கான் தலைமையிலான பாகிஸ்தானின் கடற்படைக் தூதுக்குழுவை இலங்கை பாதுகாப்பு படைகள் சார்பாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன வரவேற்றார். இந்த சந்திப்பின் போது பல முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவுகளை நினைவுகூர்ந்த ஜெனரல் கமல் குணரத்ன, … Read more

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இந்தியாவிற்கு விஜயம்

புதுதில்லியில் நடைபெறவுள்ள புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் தொடர்பான இந்தியாவின் முதன்மை மாநாடான ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்துகொள்வதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி, 2023 மார்ச் 02 – 04 வரை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த மாநாடு, இந்திய வெளியுறவு அமைச்சுடன் இணைந்து பார்வையாளர் ஆய்வு அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்படுகின்றது. இம் மாநாட்டின் போது, 2023 மார்ச் 03ஆந் திகதி நடைபெறவுள்ள ‘பிளவுபட்ட உலகை குணப்படுத்துதல்’ (Healing a … Read more

புகைப்பட கருவி (கெமரா) தொழிநுட்ப செயலமர்வு

அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் மெட்ரோ பொலிடன் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த புகைப்பட கருவி – கெமரா தொழிநுட்ப செயலமர்வு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நேற்று (27) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர்கள் மற்றும் அமைச்சின் ஊடக அதிகாரிகள் உள்ளிட்ட ஊடகத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லென்ஸ் (lance) இல்லா கெமெராக்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இடம்பெற்ற இந்த செயலமர்வில், உயர் அதிகாரிகள் குழுவொன்று நிறுவனத்தை … Read more

எதிர்கால வலு சக்தியின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அணு சக்தியை மாற்று முறையாக பயன்படுத்த நடவடிக்கை

எதிர்கால வலு சக்தியின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அணு சக்தியை மாற்று முறையாக பயன்படுத்துவது குறித்து கவனத்தில் கொள்ள அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். இந்த தீர்மானத்திற்கு அமைவாக அணு சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்பான விடயத்தில் கவனம் செலுத்தவதற்காக குழு ஒன்றும் செயற்பாடுகளுக்கான 9 குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை … Read more

நெல் கொள்முதல், அரிசி உற்பத்திக்கு சமூக பாதுகாப்பு வரியில் இருந்து விலக்கு

நெல் கொள்முதல் மற்றும் அரிசி உற்பத்திக்கு சமூக பாதுகாப்பு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 11. நெற் கொள்வனவு, அரிசி உற்பத்தி, மற்றும் விற்பனையின் போதான சமூகப் பாதுகாப்பு … Read more

யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவு தொடர்பில், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்று யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார். யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் பாதுகாப்பான முறையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உள்ள எரியூட்டியில் எரிக்கப்பட்டன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று சூழ்நிலை காரணமாக அதிகளவில் மருத்துவக் கழிவுகள் எரியூட்டப்பட்டதினால் எரியூட்டி இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாரு காரணமாக … Read more

சவுதி அரேபிய உயர்மட்ட குழு இலங்கை விஜயம்

சவுதி நிதியத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடுவதற்காக அந்நாட்டு உயர்மட்ட குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. மத்திய நடவடிக்கை மற்றும் மேற்கு ஆசிய விடயங்கள் தொடர்பிலான பணிப்பாளர், பொறியியலாளர் Eng. Mohammad Al-Masoud,( Director of Operations for Central and West Asia,)  தலைமையிலான குழுவினரே தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இந்த குழுவினர், இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர். இந்த நிகழ்வில் இலங்கைக்கான சவுதி அரேபிய … Read more