கும்பத்திற்கு அதிகரிக்கவுள்ள தனவரவு! ஆனால் இரு ராசியினருக்கு ஏற்படவுள்ள சிக்கல்: நாளைய ராசிபலன்

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும். நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான நாளைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம். உங்களது நாளைய ராசிப்பலனை … Read more

ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் ஆறு மாவட்டங்களுக்கு மழை மற்றும் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கைகளை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடனும் பலத்த மின்னலுடனும் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. மக்களுக்கு எச்சரிக்கை அந்த மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த … Read more

யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல்: 4 மாணவர்களுக்குத் தடை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடையும், பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் வருட மாணவர்களால், இரண்டாம் வருட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் சுதந்திரமான –  முறை சார்ந்த விசாரணையை மேற்கொள்வதற்கு ஏதுவாக நான்கு பேருக்கும் உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர் வதிவிடம், ஒழுக்கம் தொடர்பான விதிமுறைகளுக்கு அமைய கடந்த 23ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை விடுதி உட்பட பல்கலைக்கழக வளாகத்தினுள் பிரவேசிப்பதற்கும், கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும், பல்கலைக்கழகம் தொடர்புபட்ட … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற நபரால் பரபரப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோசடியான முறையில் டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார். குறித்த சந்தேக நபர் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபருக்கு எதிராக விமானப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் … Read more

இலங்கையில் மீண்டும் நீண்டநேர மின்தடை ஏற்படும் அபாயம்

இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன குறிப்பிட்டார். கடந்த ஒரு வருடத்தில் மின்சார சபையின் 72 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர்களில் 22 பேர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். நுரைச்சோலை மின் உற்பத்தி … Read more

2000 ரூபாவிற்கு தடை விதிக்கும் அபாயம்!வெளியான காரணம்

2000 ரூபா நாணயதாளை நிதி அமைப்பில் இருந்து திரும்பப் பெறுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கறுப்பு பண சந்தை இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“பல்வேறு வரிகள் அதிகரிக்கப்பட்ட போதிலும் நாட்டில் கறுப்பு பண சந்தை செழித்து வருகின்றது. 2,000 ரூபா நாணயதாள்களை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவது குறித்த அறிவிப்பு வெளியானால், கறுப்புப் பணம் முழுவதும் அம்பலமாகும். ஊழலை ஒழிப்பதற்கு இந்த நடவடிக்கை அவசியமானது என்பதுடன் … Read more

சீனாவினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து அமெரிக்கா எச்சரிக்கை

சீனாவினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. வழங்கிய கடனைப் பயன்படுத்தி இலங்கை மற்றும் பாகிஸ்தானிற்கு சீனா அழுத்தங்களை பிரயோகிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக அமெரிக்கா அச்சம் வெளியிட்டுள்ளது. தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணைச் செயலாளர் டொனால்ட் லூ இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். இந்தியாவிற்கு மிக அருகில் காணப்படும் நாடுகளுக்கு சீனா கடனுதவிகளை வழங்கி அவற்றை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளக் கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிராந்திய வலய … Read more

இலங்கையில் மீண்டும் நீண்டநேர மின்தடை ஏற்படும் அபாயம்

இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன குறிப்பிட்டார். கடந்த ஒரு வருடத்தில் மின்சார சபையின் 72 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர்களில் 22 பேர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். நுரைச்சோலை மின் உற்பத்தி … Read more

சிபெட்கோ ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கை பெட்ரோலிய சட்டக்கூட்டுத்தாபனத்தின் மேலதிக நேர கொடுப்பனவை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். மேலும், மின் பொறியியலாளர்களுக்கு போனஸ் வழங்குவதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்கவில்லையெனவும் எரிசக்தி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.  மின்கட்டண உயர்வு பொறியாளர்கள் சங்கம் போனஸ் கேட்கின்றனர். மேலதிக நேர கொடுப்பனவுகளை கேட்கின்றனர். அது கிடைக்காத போது வீதியில் இறங்கி போராடுவதாக கூறுகின்றனர். மின் கட்டணத்தை … Read more

தந்தை, மகளை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய நபருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் தந்தை மற்றும் மகளை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய நபருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம், கோதமிகம பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய தயானந்த அபேகுணவர்த்தன என்பவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரின் மனைவி இன்னொரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்ட தயானந்த, அதற்கு உதவி செய்வதாக சந்தேகப்பட்ட நபர் மீதும் அவரது மகள் மீதும் வீதியில் செல்லும் போது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளார். இச்சம்பவம் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. மேல்நீதிமன்றத்தில் தாக்கல் … Read more