ஏழு நாட்களில் 51 படுகொலைகள்: மாகாண பொலிஸார் தகவல்…!

இலங்கையில் கடந்த 7 நாட்களில் (12 – 18) மாத்திரம் 51 படுகொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாகாண பொலிஸாரின் உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட 7 நாட்களில், 3 சிறுவர்கள், 8 பெண்கள் உள்ளிட்ட 51 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குடும்பத் தகராறு, தனிப்பட்ட தகராறு, காதல் விவகாரம், போதைப்பொருள் விற்பனைப் போட்டி மற்றும் கோஷ்டி மோதல்களால் மேற்படி படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. படுகொலைகள்…! அதற்கமைய, வடமேல் மாகாணத்தில் 7 நாட்களில் 12 பேர் … Read more

வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்! பல மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை

வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (19) பிற்பகல் 1.30 மணி முதல் இன்று இரவு 11.30 மணி வரை இந்த அறிவித்தல் செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. பலத்த மின்னலுக்கான சாத்தியக்கூறுகள் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் … Read more

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை  திங்கட்கிழமை (20) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையை முன்னிட்டு ஜனவரி 23 ஆம் திகதி தொடக்கம் கடந்த 17 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய திங்கள் முதல் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகி , மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி … Read more

நீர் கட்டணமும் அதிகரிக்கிறது

நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு  அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.  மின்சாரக் கட்டணங்கள் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.  இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை வேறு தெரிவுகள் இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.   Source link

சிரேஷ்ட அரச அதிகாரிகளின் வணிக வகுப்பு பயணங்களுக்குத் தடை

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயலகங்களில் பணியாற்றுபவர்கள் உட்படச் சிரேஷ்ட அரச அதிகாரிகள் வெளிநாட்டு உத்தியோகபூர்வ பயணங்களில் விமானங்களில் வணிக வகுப்பு பயணங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் சுற்றறிக்கையை ஜனாதிபதி செயலகம் விரைவில் வெளியிடவுள்ளது. அதன்படி, இதுவரை வசதிகளை அனுபவித்த பல அதிகாரிகள் சாதாரண வகுப்பில் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படவுள்ளது. வழமையாக, உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், அமைச்சரவை செயலாளர், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் வணிக வகுப்புக்களில் பயணம் … Read more

பேயாட்டம்-சூதாட்டம்-போராட்டம்-களியாட்டம்! 2015இல் இந்திய கடற்படை அதிகாரி என்ன கூறினார்…!

Courtesy: ச.வி.கிருபாகரன், பிரான்ஸ் இலங்கைதீவின் சுதந்திரத்தை தொடர்ந்து நடைபெற்ற அரசியல், பொருளாதார, சமூக, கலை மற்றும் கலாசார சம்பவங்கள், நிகழ்வுகளை நாம் மிகவும் அவதானமாக ஆராய்வோமானால், அவை பேயாட்டம், சூதாட்டம், போராட்டம், களியாட்டம் என்ற அடிப்படையிலேயே கடந்த எழுபத்து ஐந்து வருடங்களாக நகர்ந்துள்ளதை அவதானிக்க முடியும். இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் எந்த தமிழன் எங்கு வாழ்ந்தாலும், அவர்களுடைய வாழ்க்கை, பங்களிப்பு சரித்திரம் மிக சுருங்கிய சில தசாப்தங்களே. ஆனால் இவ் பூமியில் தமிழ் மொழி கலை, கலாச்சாரம் … Read more

விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இல்லை! திருநாவுக்கரசர் கடும் குற்றச்சாட்டு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை முதலீடாக வைத்து சீமான் அரசியல் செய்வதாக காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும்,நலமுடன் இருப்பதாக உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரபாகரன் உயிருடன் இல்லை என்று இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. சீமானின் அரசியல் இந்நிலையில், இது தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், … Read more

மானிப்பாயில் தனியார் பேருந்து மீது தாக்குதல்

யாழிலிருந்து சங்கானை ஊடாக மாதகலிற்கு பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்து மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், சண்டிலிப்பாயைச் சேர்ந்த இருவர் இவ்வாறு பேருந்து மீது மேற்கொண்ட தாக்குதலில் பேருந்தின் பின்பக்கம் சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மானிப்பாய் பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Source link

விடுதலைப் புலிகளின் தலைவர் யார் கையிலும் சிக்கியதில்லை! கே.பி என்னை தொலைபேசியில் அழைத்தார் – உண்மையை உடைக்கும் காசி ஆனந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உடலைப் போல ஒரு போலியான உடலைக் காட்டி பிரபாகரன் மறைந்துவிட்டார் என்ற செய்தியை இலங்கை அரசாங்கம் பரப்பியது என தமிழீழத்தின் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.  உமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,    பிரபாகரன் இறந்துவிட்டார் என்று இலங்கை அரசாங்கம் காண்பித்த படம் தொலைக்காட்சிகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது.  அந்த நேரத்தில் மலேசியாவில் இருந்து கேபி … Read more

விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பான அறிவிப்பிற்கு இலங்கையின் பதில்! மகிந்த ஏமாற்றினார் என்று நினைக்கக்கூடும்(Video)

தற்போது ரணில் வி்க்ரமசிங்க ஆட்சி புரிந்தாலும், அரசாங்கம் என்பது முழுக்க முழுக்க மகிந்தவின் கூட்டத்தினராலேயே நடத்தப்படுகின்றது என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறைப் பொறுப்பாளராக கடமையாற்றிய ஜெயாத்தன் தெரிவித்துள்ளார்.  எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், உயிரோடு நலமாக இருக்கின்றார், விரைவில் வருவார் என்று, உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து இலங்கை அரசியல் பரப்பிலும் … Read more