“சதோச” வில் நான்கு பொருட்களின் விலை குறைப்பு
லங்கா சதோச நிறுவனம் நான்கு பொருட்களின் விலையை குறைத்துள்ளது. இதற்கமைவாக உள்நாட்டு சம்பா அரிசி 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 220 ரூபாவாகும். ரூ.16 குறைக்கப்பட்டுள்ள உள்நாட்டு வெள்ளை அரிசியின் புதிய விலை 189 ரூபாவாகும். அத்துடன் கோதுமை மாவின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 240 ரூபாவாகும்உள்ளூர் நாட்டு அரிசி 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 198 ரூபாவாகும்.