வெள்ளிக்கிழமை வரையான மின் துண்டிப்பு அட்டவணை

வெள்ளிக்கிழமை (18) வரை இரண்டு மணி நேரம் மின் துண்டிப்பிற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) (15) அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, B, Q, R, S, D, U, V மற்றும் W ஆகிய பிரதேசங்களில் பகலில் ஒரு மணி நேரமும் ,இரவில் ஒரு மணி நேரமும் மின் துண்டிப்பை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் … Read more

இரண்டு வருடங்களில்  தொழில் நுட்ப துறையில் புதிதாக ,1000 புதிய தொழில்,  தொழில் முயற்சியாளர்களுக்கான  வாய்ப்பு

எதிர்வரும் இரண்டு வருடங்களில்  தொழில் நுட்ப துறையில் மாத்திரம் புதிதாக 1000 புதிய தொழில்  தொழில் முயற்சியாளர்களுக்கான  வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதற்கும் , அதேபோன்று இத்துறையில் 30,000 தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக, தகவல் மற்றும் தொடர்பாடல்  தொழில் நுட்ப முகவர் நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஏற்றுமதி வருமானம் 3 மில்லியன் அமெரிக்க டோலர்களாகும். இதற்காக புதிய தொழில் தொழில் முயற்சியாளர்களுக்கு ஆரம்ப சந்தர்ப்பத்தில் இருந்து நிதித்துறை தொடர்பிலான  தொழில்நுட்ப பயிற்சி மற்றும் ஆலோசனை சேவைகளைப் போன்று … Read more

வன விலங்குகளினால், வருடாந்தம் 54 பில்லியன் ரூபா பயிர் சேதம்

விவசாய அமைச்சின் மதிப்பீடுகளின்படி ,இலங்கையில் வன விலங்குகளினால் வருடாந்தம் 54 பில்லியன் ரூபா பயிர் சேதம் ஏற்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பயிர்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் விலங்குகளில் காட்டு யானைகள், குரங்குகள், மயில்கள், முள்ளம் பன்றிகள், மர அணில்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் ஆகியவை அடங்கும். இவற்றில் காட்டு யானைகள் தவிர இன்னும் ஆறு விலங்குகள் பயிர் சேதம் விளைவிக்கும் விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் … Read more

19 வயதிற்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி

சர்வதேச கிரிக்கெட் பேரவை 2024ஆம் ஆண்டில் ஒழுங்கு செய்துள்ள 19 வயதிற்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெறவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை கடந்த ஞாயிற்றுக்கிழமை இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றை இலங்கையில் நடத்துவதற்கான வாய்ப்பு 18 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

சிறுவர் பாதுகாப்பு: நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் தொடர்பில் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் அவதானம்

இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் செயற்படும் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் தொடர்பில் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் கவனம் செலுத்தியது. சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹினி குமாரி விஜயரத்ன தலைமையில் அண்மையில் (08) கூடியபோதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் செயற்படும் பல்வேறு நிறுவனங்களுக்கு காணப்படும் சவால்கள் மற்றும் சிக்கல்களை இனங்கண்டு சம்பந்தப்பட்ட தரப்பினரை அணுகி அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதும் சம்பந்தப்பட்ட நிறுவங்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுவதை … Read more

இலத்திரனியல் கொள்வனவு கொள்கையை தயாரிப்பது தொடர்பில் தேசிய பேரவை உப குழுவில் அவதானம்

இலத்திரனியல் கொள்வனவு கொள்கையை இந்நாட்டில் விரைவில் அறிமுகப்படுத்துவது தொடர்பில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது. குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் (11) கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் நிதி அமைச்சு, தொழிநுட்ப அமைச்சு … Read more

புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான 2022-23 கல்வி ஆண்டுக்குரிய புலமைப்பரிசில் திட்டம்

புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தினை [SPDC]  இந்திய அரசாங்கம் 2006-07 ஆம் ஆண்டுகளிலிருந்து நடைமுறைப்படுத்திவருகிறது. இந்த திட்டத்தின்கீழ் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்(PIOs)  மற்றும் இந்தியாவில் வதியாத இந்தியர்கள்(NRIs), இந்திய பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்களில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள உதவிகள் வழங்கப்படுகின்றன. தொழில்சார்ந்த மற்றும் தொழில்முறைசாராத (மருத்துவம்/துணைமருத்துவம் தவிர்ந்த) கற்கைநெறிகளுக்கான நிதி உதவியினை அவர்கள் பெற்றுக்கொள்ளமுடியும். புதுமுக (முதலாம் வருடம்) மாணவர்கள் மாத்திரமே இதற்காக விண்ணப்பிக்க முடியும். மேலேகூறப்பட்ட வரையறைகளுக்கு அமைவாக இலங்கையில் உள்ள மாணவர்கள் இந்தபுலமைப்பரிசில் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த … Read more

சவால்களுக்கு மத்தியில், சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம்

சவால்களுக்கு மத்தியில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் இதுவாகும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று ஆரம்பமான 2023 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறினார். கட்சியின் சார்பில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை பெற்ற உறுப்பினர் ஒருவர் ,சவாலை ஏற்று நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து ,ஜனநாயகத்தை பலப்படுத்தி பொருளாதாரத்தை ஓரளவுக்கு பலப்படுத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதியை பாராட்டினார். நெருக்கடியான சந்தர்ப்பத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான … Read more

மன்னார் மாவட்ட ,பொது வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வாகனம்

சுகாதார அமைச்சினால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று (15) இடம்பெற்ற நிகழ்வில், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இதனை வைத்தியசாலை நிருவாகத்திடம் கையளித்தார். நிகழ்வில் மத தலைவர்கள்,மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணியாளர்கள்,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணியாளர்களும் கலந்து கொண்டனர். District Media

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் குடும்பத்திற்கு நன்கொடை.

பாராளுமன்ற உறுப்பினர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட தொன்னூரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின்போது கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மனைவியிடம் நேற்று (14) கையளித்தார். பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தின் பின்னர் இந்த பணத்தை ஜனாதிபதி கையளித்தார்.   பிரதி சபாநாயகர் … Read more