நாட்டில் குரங்கு அம்மை: நோய் பரவும் ஆபத்து இல்லை
குரங்கு அம்மை (Monkeypox) நோயை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் இவ்வாறான தொற்றுக்குள்ளான ஒருவர் பதிவாகியிருப்பதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்றுக்குள்ளானவருடன் நெருங்கிய தொடர்பு மூலமே இந்த நோய் ஏற்படுகிறது. இந்நோய் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.