பாடசாலை மாணவ மாணவியர் கௌரவ சபாநாயகரைச் சந்தித்தனர்…

பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்காக (01) வருகை தந்த மாத்தறை சுஜாதா வித்தியாலய மாணவ மாணவியருக்கு கௌரவ சபாநாயகரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த மாணவர்கள் கௌரவ சபாநாயகருடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் கலந்து கொண்டு தெளிவுபடுத்தல்களையும் பெற்றுக் கொண்டனர். பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கும் பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிடுவதற்கும் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய பாராளுமன்றத்தில் உள்ள பொதுமக்கள் கலரியிலிருந்து பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிடப் பாடசாலை … Read more

இரண்டு சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நொத்தாரிசு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் ஆவணங்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன (31) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய மேற்குறிப்பிட்ட இரண்டு சட்டமூலங்களும் 2022ஆம் ஆண்டின் 31ஆம் இலக்க நொத்தாரிசு (திருத்தச்) சட்டம், 2022ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க ஆவணங்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டம் என்ற பெயரில் 2022 ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

இலங்கைப் பாராளுமன்றம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு…  

இலங்கைப் பாராளுமன்றத்தினால் பல்கலைக்கழகங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான குறுகியகால பாடநெறி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அண்மையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. கடந்த 31ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது. இவ்வாறான  குறுகியகால பாடநெறியொன்றை ஆரம்பித்தமை குறித்து நன்றி தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா, பாடநெறியைத் தொடர்வதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு சிறு விரைவுரையொன்றையும் நிகழ்த்தினார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் ஊடகத்துறை மாணவர்களின் கல்விக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பாடநெறிக்கான வளவாளர்களாகப் … Read more

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தனவைச் சந்தித்தார் இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ஸன்டெல் எட்வின் ஷால்க் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை அண்மையில் (28) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார். இலங்கை தென்னாபிரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஊடாக இரு தரப்பு விஜயங்களையும் அதிகரிக்க முடியும் என உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார். இந்தக் கருத்துடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேர்தனவும் இணங்கினார். பல்வேறு விடயங்களில் தென்னாபிரிக்காவின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர், தமது நாட்டின் உண்மையைக் கண்டறியும் … Read more

கேக், பிஸ்கட், சொக்லேட், வாசனை சோப் – ஆகக்கூடிய சில்லறை விலை

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஐந்து பொருட்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலை பற்றிய வர்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கேக், பிஸ்கட், சொக்லேட், வாசனை சோப் மற்றும் சிற்றுண்டி பொருட்களுக்கு  ஆகக்கூடிய  சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்மானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த  வர்த்தமானி அறிவித்தல் ,இம்மாதம் முதலாம் (01.11,2022) திகதியில் இருந்து  ,அமலுக்கு வந்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.

ஒக்டோபர் மாத பணவீக்கம்: தொடர்ச்சியான அதிகரிக்கின்ற போக்கிலிருந்து மீண்டது

2021 ஒத்தோபர் தொடக்கம் அதிகரித்த போக்கில் சென்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 செத்தெம்பரின் 69.8 சதவீதத்திலிருந்து 2022 ஒத்தோபரில் 66.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அதையொத்த போக்கினைத் தொடர்ந்து, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 செத்தெம்பரின் 94.9 சதவீதத்திலிருந்து 2022 ஒத்தோபரில் 85.6 சதவீதத்திற்கு குறைவடைந்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 செத்தெம்பரின் 57.6 சதவீதத்திலிருந்து 2022 ஒத்தோபரில் 56.3 … Read more

டுவிட்டர் 'புளூ டிக்கிற்கு' இனி மாதம் 8 டொலர் கட்டணம் அறவீடு

டுவிட்டர் ‘புளூ டிக்கிற்கு’ இனி மாதம் 8 டொலர் கட்டணம் அறவிடப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை கடந்த வாரம் வாங்கியுள்ளார். எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டுவிட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் ‘புளூ டிக்’ பயன்படுத்துகின்றனர். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் … Read more

இலங்கை அணிக்கு இறுதி சுற்றுக்கான எதிர்பார்ப்பு ….

உலகக்கிண்ண ரி20 தொடரில் சுப்பர் 12 குழுவுக்கு உட்பட்ட வகையில் நேற்று (01) நடைபெற்ற ஆப்கானிஸ்தான் உடனான போட்டியில் 6 விக்கெட்களில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக தமது இறுதி சுற்றுக்கான எதிர்பார்ப்பை மேலும் தக்கவைத்துக் கொள்வதற்கு இலங்கை அணிக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் இலங்கை 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைவாக இலங்கை இந்த இறுதி சுற்றுக்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், எதிர்வரும் 4 … Read more

இறக்குமதி வரையறையில் தளர்வு குறித்து நிதி இராஜாங்க அமைச்சர்

இறக்குமதி வரையறையை தளர்த்துவது குறித்து அடுத்த வாரம் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படவிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். வாகன உதிரி பாகங்கள், தெரிவு செய்யப்பட்ட அலங்கார தயாரிப்புகள் மற்றும் ஏற்றுமதி தொடர்புப்பட்ட தேவையான பொருட்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதி வரையறை இதன் கீழ் தளர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இத்துறையுடன் தொடர்புப்பட்ட பிரதிநிதிகள் அமைச்சிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.