பாடசாலை மாணவர்கள் பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிட வாய்ப்பு

பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கும் பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிடுவதற்கும் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து முன்வைத்த யோசனைக்குப் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு நேற்று (21) அனுமதி வழங்கியது. இதற்கமைய பாராளுமன்றத்தில் உள்ள பொதுமக்கள் கலரியிலிருந்து பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிடப் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். கொவிட் சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் கடந்த செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் தளர்த்தப்பட்டிருந்தபோதும் … Read more

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2022 செத்தெம்பர்

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2022 செத்தெம்பரில் பணிகள் நடவடிக்கைகளுக்காக சிறிதளவு விரிவடைதலையும் தயாரிப்பு நடவடிக்கைகளுக்காக சுருக்கத்தினையும் காண்பிக்கின்றன. தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2022 செத்தெம்பரில் வீழ்ச்சியடைந்து மாதத்திற்கு மாதம் அடிப்படையில்; தயாரிப்பு நடவடிக்கைகளில் பின்னடைவொன்றினை எடுத்துக்காட்டுகின்றது. அதற்கமைய, தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது தொழில்நிலை மற்றும் வழங்குநர்களின் விநியோக நேரம் தவிர அனைத்து துணைச் சுட்டெண்களிலும் குறைவடைதல்களினால் தூண்டப்பட்டு முன்னைய மாதத்திலிருந்து 7.0 சுட்டெண் புள்ளிக்களைக் கொண்ட வீழ்ச்சியுடன் 2022 செத்தெம்பரில் 42.6 சுட்டெண் பெறுமதியினைப் … Read more

சுற்றுலாத்துறையின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரைகளை வழங்கினார். 2023ஆம் ஆண்டுக்குள் எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அந்த சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை விஸ்தரிப்பதன் மூலம் … Read more

பணவீக்கம் ,2022 செத்தெம்பரில் 73.7 சதவீதத்தைப் பதிவுசெய்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 ஓகத்தின் 70.2 சதவீதத்திலிருந்து 2022 செத்தெம்பரில் 73.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்தின் இத்தகைய அதிகரிப்பு, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலும் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்புக்களால் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஓகத்தின் 84.6 சதவீதத்திலிருந்து 2022 செத்தெம்பரில் 85.8 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) … Read more

வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை

‘அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளதாக சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (22) வலுப்பெறுவதுடன் ,பின்னர் அது வடதிசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில், புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை நிலையம் குறிப்பிட்டுள்ளது. 22.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் … Read more

பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

கடந்த 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2002 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை நிறுத்துவதற்கான பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (21) முற்பகல் அறிவித்தார். புதிதாக அனுமதிபெறுபவர்களுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்குதல் மற்றும் பெற்றோலிய உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பில் பங்குதாரர்களை தேர்ந்தெடுப்பதற்கு ஏற்பாடுகளை செய்தல் இந்தத் திருத்தத்தின் … Read more

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் பதிவாகின. பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரமே சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளார்.அதன்படி, சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர்  அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற 3ஆவது வாசிப்பின் போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 3ஆவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் 174 பேர் ஆதரவாகவும், எதிராக எவரும் வாக்களிக்கவில்லை எனவும் ஒருவர் வாக்கெடுப்பில் கலந்து … Read more